Friday 11 May 2018

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்



    இந்தியா ஆன்மீகத்திற்கு பெயர்பெற்ற நாடு. உலகில் மற்ற நாடுகளை போல் இருக்காமல் தனகென்ற ஒரு வரலாற்றை இன்றளவும் பேணிகாப்பது நம் கலாச்சாரத்தின் சிறப்பாகும். வரலாற்றை பற்றி பேசும் பொது ஆன்மீகத்தை நம்மால் ஒதுக்கிவைக்க முடியாது.
  பழங்கால மன்னர்களும் சரி, குடியரசு ஆனபின் இந்தியாவும் சரி, ஆன்மீகத்திற்கு பல வசதிகளை செய்த வண்ணம் உள்ளனர். இந்தியாவில் வேற்றுமைக்கு ஒற்றுமை என்ற கோட்பாடுகளுக்கு இணங்க இங்கு பல்வேறு மத கோவில்கள் உள்ளன.
  ஒவ்வொரு கோவில்களிலும் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டுள்ள பலர் வந்து வழிபடுகின்றனர். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சமணம், மற்றும் புத்த மதங்கள் உள்ளன. அவற்றில் எல்லா வழிபாட்டு தளங்களிலும் பிரசாதம் என்ற ஓன்று வழங்கபடுகிறது. வேறு வேறு பெர்யர்களில் அளித்தாலும் பொதுவாக நாம் அதை பிரசதமாகதான் கருதுகிறோம். திருநீறு, குங்குமம், சந்தனம், பூ, சர்க்கரை பொங்கல் என விதவிதமாக வழங்கும் கோவில்களை நாம் பார்த்திருக்கிறோம்.
  மத்திய பிரதேசத்தில் இந்த கோவிலில் என்ன பிரசதாம் வழங்குகிறார்கள் என்று தெரிந்தால், உடனே சென்று விடுவீர்கள் மத்தியப்பிரதேசக்கு, அப்படி என்ன தருகிறார்கள் என்றால் தங்கத்தை தான் பிரசாதமாக தருகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. உண்மைதான், இந்த நிகழ்வு இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
   மத்தியபிரதேச மாநிலத்தில் மாள்வாய் பகுதியில், வடமேற்கு பகுதியில் அமைந்திருகிறது ரத்லம். இரத்தினபுரி என்ற வரலாற்று பெயர் கொண்ட இந்த ஊர், தங்கத்திற்கு பெயர்பெற்றது. இங்குள்ள மகாலக்ஷிமி கோவிலில் தங்கம் பரிசாக வழங்குகிறார்கள். கோவில் என்பது பக்திகான இடம் மட்டும் அல்ல ஏழைகளுக்கு, வசதியானவர்கள் தங்களால் இயன்றதை வழங்குவதற்காவும் நம் முன்னோர்கள் அமைத்து கொடுத்த இடம் தான் கோவில். நாம் கோவிலுக்கு செல்லும் போது பணமாக காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த கோவிலுக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக தருகிறார்கள்.
  இதை மற்ற கோவில்களில், அந்தந்த கோவில்களின் திருப்பணிகளுக்காக செலவு செய்வார்கள். ஆனால் இங்கு வருடத்தில் தீபாவளி நாளன்று, வந்த தங்கம், வெள்ளி காசுகளை, அப்படியே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்களாம். மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் இருந்து 3௦௦ கிலோமீட்டர் தொலைவிலும். இந்தூரில் இருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கோவில்.

No comments:

Post a Comment