Saturday 12 May 2018

உலகின் இரண்டாவது பெருஞ்சுவர் இந்தியாவில் உள்ளது

     உலகிலேயே மிகப்பெரிய சுவர் என்றால் அது சீனப் பெருஞ்சுவர்தான் என்று அனைவருக்கும் தெரியும். கிட்டதட்ட 8858 கிலோமிட்டர் நீளமுடைய இந்த பெருஞ்சுவர், உலக அதிசியங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இதனை பற்றி கேள்விபட்டிறாதவர்களே இருக்க முடியாது. அயல்நாடான சீனாவில் இருப்பதை பற்றி அறிந்திருக்கும் நாம் உலகிலேயே இரண்டாவது பெருஞ்சுவரான அதுவும் நம் இந்தியாவில் அமைந்துள்ள கும்பல்கர்க் கோட்டையை பற்றி நம்மில் யாராவது அறிந்திருக்க வாய்ப்புண்டா என்றால் சற்று குறைவுதான்.
    ராஜஸ்தானில் உள்ள கும்பல்கர்க் நகரில் கி.பி.15 நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டதுதான் இந்த கும்பல்கர்க் மலைகோட்டை. பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11௦௦ மீட்டர் உயரத்திருக்கு மேலே கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் எல்லை சுவர்கள் சுமார் 36 கிலோமீட்டர் நீளமும் 15 அடி அகலமும் கொண்டு ஆரவல்லி மலைத்தொடர் மேல் அமைந்துள்ளது.
    16 அடி அகலம் கொண்ட சீனபெருஞ்சுவரை ஒப்பிடும்போது அதைவிட 1 அடி மட்டுமே குறைவாக உள்ளது. மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்களும் அமைந்துள்ளன. இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும். அவற்றில் 3௦௦ பழமை வாய்ந்த சமணமத கோவில்களும் உள்ளன. 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர். இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில் கட்டியுள்ளனர் என்பது இன்னுமும் மர்மமாகத்தான் உள்ளது. மேலும் இந்த கோட்டைக்குள் பதேசிங் என்ற மன்னரால் கவிகை மாடங்களோடு கட்டப்பட்ட அரண்மனையும் கர்தர்கர் என்ற மற்றொரு கோட்டையும் அமைந்திருக்கிறது. இந்த கோட்டையின் நீளமும் வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிடபானியும் எதிரிகளிடமிருந்து காக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
    இதுபோன்ற பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைசுவர், பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது. இந்திய பெருஞ்சுவர் என்றழைக்கபடும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனைபற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளதுதான்
வியப்பையும் மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.
     கடந்த 2013-ம் ஆண்டு இந்த கோட்டை UNESCO-வின் உலக பாரம்பரிய குழுவினாரால். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துவருகிறது.
    இங்கு வரும் பயணிகள் இந்த கோட்டையின் உச்சியில் இருந்து அருகில் உள்ள ஆரவல்லி பகுதிகளில் அழகுமிகு தோற்றத்தை கண்டு ரசிக்கலாம். சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை உலகின் அறியபடாத மர்மம் நிறைந்த புதையலாகவே இருந்துவருகிறது.

No comments:

Post a Comment