Wednesday 2 May 2018

ஆணாகவும் பெண்ணாகவும் ஒருவர்.



    டேவிட் ரீமய்ர்(david reimer), இதுதான் அவரின் பெயர். 38 வருட வாழ்க்கையில் இரண்டு முறை ஆணாகவும் ஒருமுறை பெண்ணாகவும் வாழ்ந்து மீள முடியாத துயரில் வெம்பி வதங்கி உயிர் நீத்தார். 1965 கனடாவில் ரீய்மர்(reimer) தம்பதிக்கு பிறந்தான். 6 மாத குழந்தையாக இருக்கும்போது அஜீரணத்தால் அவதிப்பான். டாக்டர்கள் சர்க்மசிஷன் என்ற மருத்துவமுறையை பரிந்துரைத்தனர். ஆணுறுப்பின் நுனியை கத்தரிக்கும் சிகிச்சைதான் இது. அனுபவம் இல்லாத ஒரு டாக்டர் செய்த தவறால் ஆணுறுப்பை முழுமையாக எடுக்க வேண்டி வந்துவிட்டது.

     குற்ற உணர்வில் பெற்றோர்கள் தவித்தனர். குறிப்பிட்ட கால வரைக்குள் கொண்டு வந்தால் ஆண் குழந்தையை பெண்ணாக மாற்றலாம் என்று யாரோ சொல்ல பெற்றோரும் அதை நம்பினார்கள். பல கட்ட ஆபரேஷன்களுக்கு பிறகு பிரெண்டா என்ற பெண்ணாக மாறினாள்.

     பள்ளிக்கு போகும்போது மீண்டும் பிரச்சினை முளைத்தது என்னதான் உருவம் சரியாக மாற்றப்படிருந்தாலும் ஒரு சராசரி ஆண்குழந்தைக்கு எந்தவிதமான நடவடிக்கை இருக்குமோ அத்தனையும் பிரெண்டாவிடம் இருந்தது. நின்று கொண்டே இயற்க்கை உபாதையை கழித்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவரவே, பிரெண்டாவிடம் இருந்து மற்ற குழந்தைகளை பிரித்து வைத்து கொண்டனர். இவை அனைத்தும் அந்த பிஞ்சு குழந்தையின் மனதுக்குள் நஞ்சை விதைத்தது. 12 வருடங்கள் கழித்து பருவவயதை எட்டும்போது பிரெண்டாக்குள் ஆண் உணர்வுதான் அதிகமாக இருந்தது. பள்ளி நாடகத்தில் மற்றொரு மாணவருக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் அறுவருப்பின் உச்சத்துக்கே சென்ற பிரெண்டா மேடையை விட்டு வெளியேறினான்.

     கைகளில் ரோமங்களும் கழுத்து மற்றும் தொள்பகுதி அகலமாக காணப்பட்டது. இத்தனை நாட்கள் அவளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இப்பொழுது வெளியுலத்துக்கு தெரியவந்ததால் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டாள்.

     தானே தனது தலைமுடியை அரைகுறையாக வெட்டிக் கொண்டு தனது அண்ணனின் சட்டையை போட்டுக்கொண்டு தன்னை மீண்டும் ஆணாக மாற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என பெற்றோரை மிரட்டினான். தனக்கு தவறான ஆபரேஷன் செய்த டாக்டரை கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட முயன்றான். டாக்டர் அவன் காலில் விழுந்து கதறியதால் உயிரோடு விட்டான். அதன்பிறகு நான்கு ஆபரேஷன் செய்து மறுபடியும் ஆணாக மாறினான். மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை மணந்து கொண்டான். ஆனால் சந்தோசம் நிலைக்கவில்லை. மனைவியை பிரிந்து ஆதரவற்று திரிந்த டேவிட், ஒரு கட்டத்துக்கு மேல் வாழ முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

    “எனக்கு விஷயம் தெரிவதற்குள் என்னை இருமுறை இழந்து விட்டேன். என்னிடம் கேட்டு நீங்கள் முடிவெடுத்திருந்தால் இந்த பிரச்சினைகள் வந்திருகாது. 38 வருடங்களாக நான் உணர்ந்த அந்த வழியை நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் உணர வேண்டும்.” என்று தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்திருந்தான்.

No comments:

Post a Comment