Thursday 3 May 2018

தானாக நகரும் பாறைகள்


   அமெரிக்காவில் RACE TRACK PLAZA என்ற விசித்திர பிரதேசம் ஓன்று உள்ளது இதற்கு மரண சமவெளி என்றும் பெயர் உள்ளது. இங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களோ, வேறு உயிரினங்களோ, மரம் மட்டைகள் கூட கிடையாது. பாலைவனம் போல பறந்து விரிந்து கிடக்கும் இந்த பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து, ஓட்டைகளில் ஐஸ் படிந்திருக்கும்.
   இந்த மர்ம பூமியில் பாறைகள் தானாகவே நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் தெளிவாக காணபடுகின்றன. இங்குள்ள பாறைகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசங்களையும் சுற்றிவருவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. சில நேரங்களில் இரு பாறைகள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அந்த பூமியை சுற்றி வருகின்றன.
   சில சமயங்களில் அவற்றில் ஒரு பாறை வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இந்த பாறைகள் பின் நோக்கியும் நகர்ந்துள்ளது. இந்த பறந்த நிலபரப்புக்கு அருகில் இருக்கும் மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு விழுகின்றன. அவையே இந்த பிரதேசம் முழுவதும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 1௦,௦௦௦ அடிகளை விட அதிகம். சில பாறைகள் ஒரு அடி மட்டுமே நகருகின்றன.
   இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன்முதலில் 1948-ல் இருந்தே தகவல் வெளியாகி உள்ளது. 1972 மற்றும் 1980 க்கு இடைப்பட்ட பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பாறைகள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனம் காரணமா அல்லது அங்குள்ள களிமண் தட்டு காரணமா என்று தெரியவில்லை இவை வேகமான காற்றினால் தான் நகர்கின்றன என கூறலாம்.. ஆனால் இந்த பகுதியில் கடும் காற்றும் வீசுவதில்லையாம். இதனால் இந்த வாதமும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்கு காரணம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
   36 கிலோ எடையுள்ள பாறை ஒன்று 656 அடிகள் நகர்ந்து உள்ளது. இந்த மர்மமான பிரதேசத்தில் மனிதர்கள் நடமாட்டம் இல்லையென்றாலும் பாறைகளின் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவை பற்றிய ஆய்வுகளால் தான்  இந்த பிரதேசத்திற்கு மரண சமவெளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment