Thursday 3 May 2018

உறக்கம் பற்றிய நீங்கள் அறியாத ரகசியம்



   நல்ல உறக்கம் என்பது, ஒரு பெரிய வரப்ரசாதம். அதிலும் ஆழ்ந்த உறக்கம் மற்றும் நமக்கு பிடித்த கனவுகள் வருவது மிகப்பெரிய வரப்ரசாதம். ஆனால் இது அவளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்து விடாது.

   உடல் சோர்வு இருந்தால், எளிதில் உறங்கி விடலாம். ஆனால் மன சோர்வு, நமது உறக்கத்தை மெல்ல மெல்ல குறைத்து விடும். உறக்கத்திற்கு மட்டும் அல்ல. நமக்கு வரும் கனவிற்கும், நம் மனதில் புதைந்திருக்கும் நிகழ்வுகள் மற்றும் சூழல்களுக்கும் கூட இறுக்கமான பந்தம் இருக்கிறது. நீங்கள் உறங்குவது போலவே, நீங்கள் காண்பது போலவே, அனைவரும் உறங்குவது இல்லை, கனவு காண்பதும் இல்லை.

   உலகில் 12 சதவிகிதம் மக்களுக்கு, அவர்களது கனவு கருப்பு வெள்ளை வண்ணத்தில் தான் வருகிறது என்கின்றனர். பூனை தனது வாழ்நாளில் 3/2 பங்கை உறங்கியே கழிகிறது. இது பூனை வளர்க்கும் உரிமையாளருக்கு நன்றாக தெரியும். ஒட்டகசிவிங்கி ஒரு நாளைக்கு 1.9 மணி நேரம் மட்டுமே உறங்குகிறது. வவ்வால் ஒரு நாளைக்கு 19.9 மணி நேரம் தூங்குகிறது. ஒரு வேலை உங்கள் துணை வாய்பேச முடியாதவராக இருந்தால், அவர் கனவிலும், சைகை பாசை பேசுவது போல தான் கனவு வரும். இது இயல்பான ஒன்றுதான்.

   மிக அறிதாக ஆழ்மன எண்ணங்கள், அல்லது ஏதேனும் நினைவுகளின் கலவைகள் காரணமாக அவர்கள் வாய் திறந்து பேசுவது போல கனவு வரலாம், டைசானியா என்பது உறக்கத்தின் ஒரு நிலை. இது சிலர் மத்தியில் மட்டும் காணப்படும். அதிகாலை தூங்கி எழுவதை மிகவும் கடினமாக உணர்வார்கள். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகும் கூட படுக்கையில் படுத்த படியே நீண்ட நேரம் இருப்பார்கள். பொதுவாக அனைவரும் உறங்கு போது, ஒரே நிலையில் தான் படுத்து இருப்பார்கள். அவ்வபோது திரும்பி படுப்பதும் உண்டு. உருண்டு செல்வது போன்ற அசைவுகள் கொடுக்கலாம். ஆனால் உறங்கும் போது. சிலர் மத்தியில் விநோதமான அசைவுகள் காணப்படும். அதை பாராசோமியா என குறிபிடுவார்கள்.

   எழுந்து நடப்பது கொலை செய்ய முயற்சிப்பது, கார் எடுத்து ஓட்ட முயல்வது என பல வேலைகளை அவர்கள் உறங்கும் நிலையிலேயே செய்வார்கள். பிறவியிலே கண் பார்வையற்றவர்களுக்கும், கனவு வரும். ஆனால் அதில் உணர்ச்சி சப்தம் உணரும் போன்ற தன்மை இருக்கும். அவர்களுக்கு காட்சிகளாக கனவு வராது. பெரும்பாலும் தூங்கி எழுந்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் கண்ட கனவில், 5௦ சதவீதத்தை மறந்து விடுவீர்கள்.

   ஏறத்தாள 9௦ சதவீதம், நீங்கள் நினைவில் வைத்துகொள்ள விரும்பியவை, மறந்து போகும். ஒருவர் உறங்கும் நிலையை வைத்தே, அவரது குணாதிசயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என உறக்கம் பற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment