Monday 21 May 2018

ஆண் குழந்தைக்கும் கள்ளிப் பால்



    உலகில் அவ்வப்போது விசித்திரமான குற்றங்கள் நடப்பது உண்டு. அதேபோல் சில தண்டனைகளும் வித்தியாசமாக அமைவது உண்டு. அப்படிப்பட்ட தண்டனைகளில் சில.

    கி.மு 3370-ம் ஆண்டில் எகிப்தில் ஒருவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டு வந்தால் குற்றவாளியின் உடலை எத்தனை குற்றம் உள்ளதோ அத்தனை துண்டுகளாக வெட்டிக் கொள்வார்கள். அட்டன் என்ற பெண் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே இறந்து விட்டார். அவரது உடலையும் புதைத்து விட்டார்கள். அவர் குற்ற்றவாளி என்று தீர்ப்பு வந்ததும், அழுகிய நிலையில் இருந்த பிணத்தை தோண்டி எருத்து துண்டு துண்டாக வெட்டி தண்டனையை நிறைவேட்டினார்கள்.

          அய்மன் நஜாபி, சார்வேயிட் என்ற இருவரும் ஏலம் காதலர்கள். அய்மன், துபாயில் வேலை செய்து வந்தார். அவரை பார்ப்பதற்காக தனது நாட்டில் எருட்ன்ஹு சார்வேயிட் துபாய் வந்தார். ஓட்டலில் இருவரும் சந்தித்த பொது காதல் பரவசத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அங்கே இருந்த ஒருவர் பொது இடத்தில் முத்தம் கொடுத்தது குற்றம் என போலிசை அழைத்தார். பிறகென்ன, அந்த நாட்டு சட்டப்படி இருவருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும், 1௦௦௦ திர்காம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தனது சுதந்திர நாளில் கதறி அழுத ஒரு நாடு சிங்கப்பூர். குடிநீர், வேலைவாய்ப்பு உள்பட என அனைத்து தேவைகளுக்கும் அதுவரை அண்டை நாடான மலேசியாவையே நம்பி இருந்தது. சிங்கப்பூர், திடீரென கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தண்டனையாகவே நினைத்தார்கள் சிங்கப்பூர் வாசிகள். இப்போது உலகின் மிக முக்கிய சந்தையாக சிங்கப்பூர் வளர, இந்த சுதந்திரமே காரணமானது.

கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொள்ளும் கருத்தமாக்களைத்தான் தெரியும். ஆண் குழந்தைகளை கொள்ளும் 'பாப்புவா நியூ கினியா' என்ற பழங்குடி இனம் பற்றி தெரியுமா. ஆஸ்திரேலியாவின் இந்த பழங்குடி இன ஆண்கள் எப்போதும், எதற்கும் பக்கத்துக் கிராமங்களுடன் மல்லுக்கு நிற்பார்கள். தொட்டதெற்கெல்லாம் குற்றம். எதற்கெடுத்தாலும் யுத்தம். 2 ஆண்டுகளாக பிரச்சனைகளை பார்த்து பார்த்து புளித்துப் போன கினிய இனப்பெண்கள் எப்போதும் பிரச்சினைதரும் ஆண்களை வெறுக்க தொடங்கினார்கள். ஆண் வர்க்கத்துக்கு தண்டனை தர முடிவு செய்தார்கள். தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டார்கள். ஆண்களாக இருப்பதால்தானே வீணாக சண்டைப்போட்டு கொண்டு எண்கள் உயிரை எடுக்கிறீகள். நீங்களே வேண்டாம்....! என்பது அவர்களின் முடிவு.

No comments:

Post a Comment