Wednesday 23 May 2018

திடீரென சூரியன் மறைந்தால் பூமிக்கு என்ன ஆகும்

   நம்முடைய கிரகமான பூமியின் வாழ்வாதாரமே சூரியன் தான். இந்த சூரியனை மையமாக கொண்டுதான். நம்முடைய பூமி, பூமியில் இருக்கும் உரினங்கள், வளம் என இவை அனைத்தும் உள்ளன. அப்படி இருக்க திடிரென இந்த சூரியன் மறைந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

  சூரியனுக்கும் ஆயுள் உள்ளது என சில அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதன் ஆயுள் தீர இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடக்கும் பொழுது நம்முடைய கிரகமான பூமி சூரியன் இல்லாமல் என்ன செய்யும்.

   சூரியனிடம் இருந்து மிக முக்கியமாக கிடைக்கும் சக்தி Light எனப்படும் ஒளி. சூரியன் மறைந்தால், சூரியன் மறைந்துவிட்டது என்று பூமியில் உள்ள மனிதர்களுக்கு தெரிய 8 நிமிடம் 20 விநாடிகள் ஆகும். ஏனென்றால் சூரிய ஒளி பூமியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடம் 20 விநாடிகள் ஆகும். நம்முடைய கிரகத்தின் மேல் சூரியனுக்கு இருக்கும் Gravitational Grasp என்று சொல்லப்படும் புவியிர்ப்பு பிடி துண்டிக்கப்படுவதற்கும் 8 நிமிடம் 20 விநாடிகள் ஆகும்.

   ஏனென்றால் Graviti Waves என்று சொல்லப்படும் புவியிர்ப்பு அலைகளும் ஒளியின் வேகத்திலேயே பயனிகின்றன. அதனால் சூரியன் மறைந்த அடுத்த தருணத்தில் அதன் புவியிர்ப்பு ஆற்றல் துண்டிக்கப்படும். இதனால் சூரியனை சுற்றி கொண்டு வந்த பூமி Orbit என்று சொல்லப்படும் அதன் சுற்று பாதையை இழந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க ஆரம்பிக்கும். ஆகையால் சூரியன் மறைந்த பிறகு 30 நிமிடம் வரை நாம் இருந்தால், நம்முடைய கிரகம், ஜுபிடர் என்று சொல்லப்படும். வியாழன் கிரகத்தில் இருக்கும் வெளிச்சத்தால், வியாழன் கிரகத்தை நம்முடைய கிரகம் கடப்பதை பார்க்க முடியும்.

   நிலவின் வெளிச்சமும் இல்லாமல், சூரிய வெளிச்சமும் இல்லாமல் நம்முடைய கிரகம் முற்றிலுமாக இருண்ட உலகமாக மாறிவிடும். கடந்த 2௦௦4-ம் ஆண்டு அப்துல் அஹாத் வெளியிட்ட கணக்குப்படி, MILKY WAY என்று சொல்லப்படும் பால்வெளி மண்டலம் ஒரு முழு நிலா வெளிச்சத்தில் 3௦௦-ல் ஒரு பங்கு வெளிச்சத்தை கொண்டுள்ளதாகும். ஆகையால் பூமி முழுக்க சிறு வெளிச்சம் தென்பட வாய்ப்பு உள்ளது. மற்றும் உலகில் உள்ள மின்சாரம் மற்றும் இதர எரிப் பொருள் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவைகள் மூலம் பூமிக்கு வெளிச்சம் கிடைக்கும்.

   சூரியனால் பூமிக்கு கிடைத்துவரும் PHOTOSINTHESIS முற்றிலுமாக நிறுத்தப்படும். உலகில் இருக்கும் 99.9 இயற்கை உற்பத்தி இந்த PHOTOSINTHESIS-ஆல் தான் நிகழ்ந்து வருகிறது. ஆகையால் சூரியன் இல்லை என்றால் உலகில் உள்ள அனைத்து மரம், செடி, கோடி, தாவரம் அனைத்தும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்ச முடியாமலும், நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை வெளியிட முடியானாலும் செயல் இழந்து போகும். ஆனால் இவைப் பற்றிய ஒரு ஆய்வில் வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்மான தகவல் என்னவென்றால், உலகில் வாழும் 7 மில்லியன் மனிதர்களும் ஒரு வருடத்திற்கு ஆறு ட்ரில்லியன் கிலோகிராம் ஆக்சிஜனை சுவாசிகின்றோம் என்பதாகும்.

   ஆனால் நம்முடைய பூமியின் வளிமண்டலத்தில் ஒரு ட்வின் டில்லியன் கிலோகிராம் ஆக்சிஜன் இருப்பதால் PHOTOSINTHESIS இல்லாமலும், உலகில் மனிதர்கள் உள்பட மிருகங்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் இன்னும் 1௦௦0 வருடங்களுக்கு ஆக்சிஜனை சுவாசிக்க முடியும்.

No comments:

Post a Comment