Sunday 20 May 2018

கடிக்காத ஆண் கொசுக்கள்


   மாலை நேரமானலே பயந்து போய் வீட்டு ஜன்னல் கதவுகளை சாத்துவது கொசுக்களுக்காகத் தான். கொசுக்கள் இல்லாத ஊர்ப் பார்ப்பது இன்று கனவிலும் காண முடியாத காட்சி இன்றைய நகரங்கள் எல்லாமே பாதாள சாக்கடை வசதி பெற்றுள்ளது. ஆனாலும் திறந்தவெளி சாக்கடை இருந்த போது இருந்த கொசுக்களை விட இன்று பல மடங்கு கொசுக்கள் பெருகியுள்ளன. இதற்கு காரணம் மாறுபட்ட வாழ்க்கை சுழற்சி தான் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

   விவசாயத்தில் ரசாயன பூச்சிக் கொல்லி உபயோகிக்க ஆரம்பித்த பின் தான் இந்த விளைவு என்கிறார்கள். கொசுவின் ஆரம்ப வடிவமான லார் வாக்களை உண்ணும் தவளை போன்ற பல நன்மை செய்யும் உயிரினங்கள் குறைந்து போயின. இதன் விளைவாக கொசுக்கள் தடை எதுவும் இல்லாமல் இஷ்டத்துக்கு பெருகின. அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறோம்.

   கொசுக்களின் மொத்தம் 2,700 வகைகள் இருக்கின்றன கொசுக்கள் ஒரு பறக்கும் அற்புதம் என்று வியந்து போகிறார்கள், விஞ்ஞானிகள். மலை பெய்யும் போது மழைநீர் படாமல் துளிகளின் இடையில் கூட கொசுவால் பறக்க முடியும். தலை கீழாகவும் பறக்கும்.

   கொசு நமது நுடலில் உட்கார்ந்த உடன் அதன் கண்களுக்கு கீழே நுட்பனமான 6 ஊசிகள், உண்மையில் ஊசிகள் தான். எல்லா ஊசிகளையும் ஓன்று சேர்த்து ஒரே ஊசியாக தோளுக்குள்ளே இறக்கி ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறது. அதற்கு முன் ரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒருவித ரசாயனத்தை நமது தோலின் மீது உமிழ்கிறது. அந்த உமிழ்நீர் ரத்தத்துடன் கலந்தவுடன் அரிப்பு ஏற்படுகிறது. உடனே அந்த இடத்தை தேக்க தொடங்குகிறோம்.

   கொசுக்களின் ஆண்கள் பரம சாது. மனிதர்கள் இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்காது. புல், தழை, பூக்களில் உள்ள தாவர சாறுகளை உறிஞ்சிக் கொள்கிறது. அது தான் அவற்றின் சாப்பாடு. ஆனால் பெண் கொசுக்கள் பொல்லாதது. நம்மை தூங்க விடாமல் தொடர்ந்து காதில் ரீங்காரம் இட்டு ஊசி போட்டு வேதனைப்படுத்துவதுடன் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன்குன்யா போன்ற பல நோய்களை பரப்புவதும் பெண் கொசுக்கள் தான்.

   ஆண் கொசுக்களுடன் உடலுறவில் ஈடுபடட்டவுடன் பெண் கொசுக்கள் முட்டைகளை பொரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த முட்டைகள் பொரிக்க மனித ரத்தம் மிகமிக அவசியம். அதனால்தான் உடலுறவை முடித்துக் கொண்ட பெண் கொசுக்கள் ரத்தம் வேண்டி நேராக நம்மிடம். வருகின்றன. நம்மை கடிக்கும் ஒவ்வொரு கொசுவும் 2 ஆயிரம் முட்டைகளை தன்னுடன் வைத்துள்ளது. அதற்கு தேவையான உணவை நாம் ரத்தமாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

No comments:

Post a Comment