Sunday 20 May 2018

தொடங்கியது காற்று விற்பனை


   சுத்தமான காற்று விற்பனைக்கு என்ற ஒரு செய்தியை ஒரு 25 வருடங்களுக்கு முன்னாள் யாராவது கூறினால் கண்டிப்பாக கேட்பவர் அனைவரும் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த விஷயம் இப்பொழுது உண்மையிலேயே நடைமுறையில் உள்ளது.

   கடந்த இறந்து நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில் புரட்சியின் காரணமாக உலகம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அடைந்துள்ளது. இப்படி மாசு அடைந்த முக்கியமான விசங்களில் முக்கியமான ஓன்று காற்று. இந்த காற்று மாசுபாடு அதிகரித்து வரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் அதிக அளவிலான வெட்டப்படும் மரங்களின் காரணமாக ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபாடு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

   இந்த காற்று மாசுபாட்டை பெரிய நகரங்களில் நாம் தெளிவாக காண முடியும். சீனாவின் பீஜிங் நகரத்தில் காற்று மாசுபாட்டின் காரணமாக எப்பொழுதும் ஒரு பனி மூட்டம் போல சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் எவ்வளோவோ முயற்சி செய்தும் அதற்கான பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இப்படி மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் மூலமாக பல இன்னல்களை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. இதற்காக ஒரு மாற்று வழியாக கண்டுபிடிக்கபட்டதுதான் இந்த FRESH AIR FOR SALE என்ற முறை.

   இதில் என்ன செய்வார்கள் என்றால், சுத்தமான காற்று வீசக்கூடிய இடங்களான கனடாவில் உள்ள அல்பட்ட மலைகள், ஆல்ஸ்ப் மலைத்தொடர்கள், சுவிட்சர்லாந்தில் உள்ள பசுமையான மலைகளில் இருக்கும் தூய்மையான காற்றை ஒரு அலுமனிய பாத்திரத்தில் அடைத்து. அதிக காற்று மாசுபாடு உள்ள நகரங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது தான் இவர்களின் முதல் நோக்கம்.

   இந்த முறை இப்பொழுது தொடங்கப்பட்டது அல்ல, கடந்த 2013 ம் ஆண்டு சீனாவை சேர்ந்த சென் குவாங் என்ற ஒரு மிகப்பெரிய கோடிஸ்வரரால் ஆரம்பிக்கப்பட்டது. சீன தலைநகரான பீஜிங்கில் மிக அதிக காற்று மாசுபட்டு காரணமாக மக்கள் சரியாக மூச்சு விடமுடியாத நிலை இருந்தது. இதை கவனித்த சென், சுத்தமான காற்றை கொடுக்க முயற்சி செய்து இதை ஆரம்பித்துள்ளார். முதலில் மிகவும் குறைந்த விலைக்கு சுத்தமான காற்றை விற்க தொடங்கினார். இந்த விற்பனை தொடங்கிய 1௦ நாட்களில் ஒரு கோடி எண்ணங்கள் விற்பனையாகியது.

   சீனாவில் மட்டும் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இந்த விற்பனை 2015 ம் ஆண்டில் மோசஸ் லாம்ப் மற்றும் ட்ராய் டாகட் என்ற இரண்டு நபரும் இணைந்து கனடாவில் ஒரு சுத்தமான பாலிதீன் பையில் சுத்தமான காற்றை அடைத்து ONLINE மூலமாக விற்பனையை தொடங்கினார்கள். முதன் முதலில் இந்த பைகள் 99 செண்டுகளுக்கு விற்பனை செய்தனர். மேலும் இதன் விற்பனை அதிகரிக்க தொடங்கவும், இந்த முறை 168 டாலர் வரை விற்பனை செய்துள்ளனர்.

   முதலில் தூய்மையான காற்றை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில், தற்பொழுது குழந்தைகளுக்கான காற்று வயதானவர்களுக்கான காற்று என பல விதங்களில், பல்வேறு விலைகளில் ONLINE மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இப்படி விற்பனை செய்து வரும் காற்று 25 டாலர்களில் தொடக்கி 25௦ டாலர்கள் வரை விற்பனை செய்கின்றனர் என்பது ஒரு அதிர்ச்சியான தகவல். அதுமட்டும் அல்லாமல் இப்படி சுத்த்தமான காற்று விற்கப்படும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

   இப்பொழுது நடைபெற்று வரும் இந்த காற்று விற்பனை ஒரு தொடக்கம் மட்டும் தான். ஏனென்றால் இனி ஒரு 1௦ வருடம் முடிந்த பின், இதே காற்று விற்பனை மிகப்பெரிய தொழிலாக உருவாகவும் வாய்ப்பு உள்ளது. அது மட்டும் அல்லாமல் இப்படி விற்கப்படும் காற்றை வாங்கி தான் சுவாசிக்க வேண்டிய நிலை கண்டிப்பாக உருவாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

   இறுதியாக சொல்ல வேண்டும் என்றால், காற்றை விலை கொடுத்து வாங்கும் இந்த நிலைக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம் என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மை.

No comments:

Post a Comment