Monday 11 June 2018

5௦௦௦ மாவது ஆண்டில் மனிதனின் வாழ்க்கை


   மனிதனின் கணக்கு படி இந்த உலகம் 2௦௦௦ மாவது ஆண்டுகளில், நம் அனைவருடனும் சேர்ந்து இயங்கி கொண்டிருகிறது. இதே மனிதனின் கணக்குப்படி 5௦௦௦-மாவது வருடத்தில் இந்த உலகில் மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி, உலக புகழ் பெற்ற PALEOANTHROPOLOGYST ஒருவரின் ஆய்வு மற்றும் கணிப்பில் வெளியான தகவல்கள் சில. மேலும், உலகத்தின் 5௦௦௦-மாவது வருடத்தில் 3 சூழல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறபடுகிறது.

சூழல் 1: WATER WORLD எனப்படும் தண்ணீர் உலகம். உலகம் அதிகபடியான வெப்பமயமாகுவதால் உலகில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகள் எல்லாம் உருகி கடல் மட்ட நீர்நிலைகள் எல்லாம் நாம் கற்பனை செய்து பார்க்கவே பயப்படும் அளவுக்கு அதிகமாகி, உலகம் முழுவதும் நீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது. அப்பொழுது மனித இனம் பரிணாம வளர்ச்சியால், UNDER WATER COMMUNITY எனப்படும் ஆழ்கடல் சமூகமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் மனிதனுடைய உடல் அமைப்பில் ஏராளமான மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடல் வாழ்க்கைக்கு ஏற்றார்போல் WEP FINGERS எனப்படும், விரல்களுக்கு இடையே தண்ணீரில் நீந்துவதற்கு மெல்லிய ஜவ்வு இருக்கும். மற்றும் கால் விரல்களில் கூட இதே போன்று தான் இருக்கும். ஆள் கடலில் பெரிதும் வெளிச்சம் இருக்காது என்பதால், இருளிலும் பார்க்க கூடிய நிக்டிடேடிங் மெம்றேன் எனப்படும் கூடுதல் படலம் மனிதனின் கண்களில் உருவாகும்.

சூழல் 2: வேற்று கிரகம் நம்முடைய கிரகத்தில் இணைய வாய்ப்பு உள்ளது. வேற்று கிரகத்திற்கு மனிதர்கள் செல்வது, வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவது என்பன போல. இதில் உலகின் 5௦௦௦-மாவது ஆண்டுகளில் வேற்று கிரகம் ஒன்று நம்முடைய கிரகத்தில் இணைய வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த கிரகவாசிகளும் பூமியை சேர்ந்த மனிதர்களும் கலக்க நேரிடும். கடல் வாழ்க்கைக்கு முழுவதுமாக மாறிவிடுவதால், மனிதர்கள் திட உணவுகளில் இருந்து திரவ உணவிற்கு மாறிவிடுவார்கள் இதனால் வாய்பகுதியில் அதிக அசைவு இல்லாததால் மனிதனின் தாடைப்பகுதிகள் மிகவும் குறுகி மனிதனின் முகத்தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டு காணப்படும்.

சூழல் 3: உலகின் 5௦௦௦-மாவது ஆண்டுகளில் இப்படியும் நடக்கலாம் அதாவது சூரிய கதிர்கள், சூரிய ஒழி, சூரிய வெப்பம் இவை அனைத்தும் பெரும் அளவில் குறைந்து உலகின் 5௦௦௦ மாவது ஆண்டுகளில் SENCOND ICE AGE எனப்படும் இரண்டாம் பனி காலம் வர வாய்ப்பு உள்ளது. இது எப்படி நடக்கும் என்றால், உலகில் உள்ள எரிமலைகள் எல்லாம் பெரும்பாலும் வெடித்து 1௦௦௦ டன்கள் கணக்கில் சாம்பல்களை வெளியேற்றும். இதனால் உலகின் சீதோசண நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த சூழலும் மாறும். இதனால் சூரிய கதிர்கள், சூரிய ஒளி, சூரிய வெப்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இரண்டாம் பனி காலம் வரும். இதனால் மனிதனின் உடலில் விட்டமின் D யை ஈர்க்கும் தன்மை செயல் இழந்து விடம். இதனால் சருமத்தின் நிறம், ரோமங்கள் என மனிதனின் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment