Sunday 10 June 2018

கொடூரமான கொலையாளிகள்

   எதிரிகளுக்கு கொடூரமான மரண தண்டனை தந்ததன் மூலமே வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர் ஹிட்லர். இவன் சீக்கிரம் நம்மைக் கொன்று விடமாட்டனா என்று நினைக்கும் அளவுக்கு யூதர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கியவர் ஹிட்லர். ஒரு குட்டி வேனுக்குள் 300 பேரை அடைத்து அதன் புகை போக்கியை வேனுக்குலேயே திருப்பிவிட்டது, ஹிட்லரின் ஒரு கொடூர புத்திக்கு ஒரு எடுத்துகாட்டாகும். லட்சக்கணக்கான யூதர்களை உலகின் பார்வை படாமல் இவன் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்ததுநடுங்க வைக்கும் பதிவாகும்.

        எதிரி துடிதுடிப்பதை பார்த்து துளித்துளியாக ரசிப்பவன் நீரோ மன்னன். இவனிடம் இருந்து தப்பிபதற்காகஇவனது எதிரிகள் விரும்பியதே தற்கொலை செய்து கொள்வதுதான். அந்த அளவுக்கு கொடுரக்காரன். நீரோவின் களத்தில் இருந்த சிந்தனாவாதி செநாகா என்பவர். தன்னை நீரோ மன்னன் தேடுவது தெரிந்ததும்தன கை நரம்புகளை அறுத்துக் கொண்டார்அப்போதும் அதிர்ஷடம் இல்லை. கடைசியில் கொதிக்கும் நீரில் தலைகீழாக தலையை அமிழ்த்தி தற்கொலை செய்து கொண்டார்.

       உலகை வெல்லும் ஆசையோடு புறப்பட்ட தைமூருக்குதன் எதிரிகளை தனித்தனியாக தண்டனை கொடுத்து கொள்ள நேரம் இல்லை. எனவே கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தான். மக்களை வரிசையாக மண்டியிட வைத்துஅவர்களின் கழுத்து உயரத்துக்கு பெரிய கத்தியை பிடித்தபடி தன் காவலர்களை குருக்காக ஓடச் சொல்வான். தலைகள் தடதட வென்று கீழே உருண்டு விழும். உடல்கள் துடிதுடித்து அடங்கும். அந்த கொடூரத்தை கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பவன் தைமூர்.

   ரஷ்யாவின் டிரன்சில்வேனிய பகுதியைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் வாலாட் டிராகுலாரத்த வெறிபிடித்த சைக்கோ. ரத்தம் குடிக்கும் வேம்பயர்கள் பற்றிய கதைகள் இவனால்தான் எழுந்தன. இவன் உலகின் முதல் ரத்தம் குடிக்கும் வேம்பயராக மாறிவிட்டான் என்று அந்த காலத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பாவே நம்பியது. அந்த அளவுக்கு கைதிகளைக் கம்பியில் குத்தி தொங்கவிடுவதுசிறிய கத்தியால் உடலெங்கும் கீறுவதுதுளையிடுவதுஉடல் தோலை உயிரோடு இருக்கும் போதே உரித்தெடுப்பது என்று கொடூரமான தண்டனைகளைக் கொடுப்பன்.

  இதனால் இவர்கள் மன்னன் என்ற மாண்பைத் தாண்டி கொடூரக்காரர்களாகவே சரித்திரத்தில் இடம் பிடித்தனர்.

No comments:

Post a Comment