Wednesday 13 June 2018

ஜப்பானில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய கப்பல்கள்


   கடந்த 2013 ம் ஆண்டில் இருந்து ஜப்பானின் கடற்கரையோரங்களில் மர்மமான முறையில் சில படகுகள் கரை ஒதுங்க ஆரம்பித்தது. ஜப்பான் நாட்டிற்கு சொந்தம் இல்லாத இந்த படகுகளை என்ன இருக்கு என்று ஆராய்ச்சி செய்த பொழுது, அழுகிய நிலையில் உள்ள பல மனித உடல்களை கண்டுபிடித்துள்ளனர். இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இது போன்று கரை ஒதுங்கி உள்ளது.

    இம்மாதிரியான கரை ஒதுங்கிய எல்லா படகுகளிலும் குறைந்தது 10 மனித உடல்களுக்கு மேல் கண்டெடுத்துள்ளனர். இந்த படகுகள் எங்கிருந்து வந்தது, இதில் இருந்த மனிதர்கள் எப்படி இறந்தார்கள் என்று இன்று வரை மர்மமாக தான் இருக்கிறது. கரை ஒதுங்கிய படகுகளை வைத்தும், படகில் உள்ள பொருட்களை வைத்தும், அந்த படகுகள் வடகொரியா நாட்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

   இந்த படகுகளை பற்றியும், படகில் இறந்து கிடைக்கும் சடலங்களை பற்றியும் இரண்டு விதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. கடற்கரையில் வசித்த மக்கள் வடகொரியாவை விட்டு தப்பி செல்ல முயன்று இருக்கலாம் எனவும். ஆதனால் சரியான முறையில் உணவு கிடைக்காமல் இறந்திருக்கலாம் எனவும். இரண்டாவது கருத்து என்னவென்றால் இவர்கள் வடகொரியாவின் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது GPS போன்ற நவீன கருவிகள் செயல் இழந்ததன் மூலமாக திரும்பி செல்ல வழி தெரியாமல் போயிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் இந்த இரண்டு கருத்துக்களும் வெறும் யூகத்தினால் கூறப்படுகிறது.

   இந்த படகுகள் உண்மையில் வடகொரியாவை சேர்ந்ததுதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. வடகொரியா அரசும் இம்மாதிரியான செய்திகளை கேட்டும் கூட எந்தவிதமான தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

No comments:

Post a Comment