Wednesday 20 June 2018

உலகம் வியக்கும் இந்தியாவின் புராண அதிசயங்கள்

    உலகம் பிறந்து பல நூற்றாண்டுகளையும் கால பிரிவுகளையும் கடந்து தன்னுடைய சுழற்சியில் பலவிதமான புராணங்களையும், வரலாற்று பாதிப்புகளையும் தன்னுள் புதைத்து, தற்பொழுது 21 ம் நூற்றாண்டில் இயங்கி கொண்டு இருக்கிறது. இப்படி இதனுள் புதைந்து கிடைக்கும் பல புராணங்களையும், வரலாற்று பதிவுகளையும், தோண்டி எடுக்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இப்படி தோண்டி எடுக்கப்பட்ட பல புராணங்களையும், வரலாற்று சிறப்புகளையும், தன் வசம் வைத்திருக்கும் நாடு, நம் இந்தியா என்று சொல்வதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
  
    அறிவியல், கலை, கணிதம் ஆகிய துறைகளில் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவின் புராணகால கூறுகள் மிக முக்கிய அங்கங்களாக உள்ளன. எண் முறை எனப்படும் நம்பர் சிஸ்டெம் கண்டுபிடிக்கப்பட்டது நம் இந்தியாவில் தான். ஆங்கிலத்தில் 0 எனப்படும் பூஜ்யத்தை கண்டுபிடித்தவர் இந்தியாவை சேர்ந்த ஆரிய பட்டா. முக்கால்வாசி ஐரோப்பிய மொழிகள் பிறப்பிடம் இந்தியாவில் தான். அவை இந்தியாவில் உள்ள சமஸ்கிருத மொழியில் இருந்து பிறந்தவை ஆகும்.

    உலகில் மிகவும் பழமை வாய்ந்த மருத்துவ முறைகளில் ஓன்று ஆயுர்வேதம் இது உருவானது இந்தியாவில் தான். இப்பொழுது உள்ள கணினி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு பயன்படுத்தப்படும் இரட்டை எண் முறை அதாவது பைனரி நம்பர் சிஸ்டெம் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான். THE VALUE OF PI  யின் மதிப்பு இந்தியாவில் உள்ள புத்தாய நாமால் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் புத்தாய நாமா PYTHAGOREAN THEOREM த்தின் கோட்பாட்டை ஆறாம் நூற்றாணடில் EUROPEAN MATHEMATICS அதாவது ஐரோப்பியன் கணிதங்கள் பிறப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பே விளக்கியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவை சேர்ந்த பாஸ்கராச்சாரியார், உலகம் ORBIT என சொல்லப்படும் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் நேரத்தை 5 ம் நூற்றாண்டிலேயே கணித்து கணக்கிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த  IEEE எனப்படும் நிறுவனம் கம்பியில்லாத தகவல் தொடர்பை முதன் முதலில் இந்திய விஞ்ஞானியான திரு ஜெகதீஸ் சந்திர போஸ் என்பர் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நிரூபணம் செய்துள்ளது. ஆங்கிலத்தில் ASTRONOMY எனப்படும் வானியல் உருவானது இந்தியாவில் தான். CHESS எனப்படும் சதுரங்க விளையாட்டு இந்தியாவில் 6 ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

    உலகின் முதல் நாகரீகமாக கருதப்படுவது இந்தியாவின் ஹரப்பான் கலாச்சாரத்தை சேர்ந்த சிந்து சமவெளி நாகரீகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. RULER எனப்படும் அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான். இந்த RULER சிந்து சமவெளி காலத்திலேயே பயன்பாட்டில் இருந்துள்ளது. மேலும் இந்தியாவில் தான் முதன் முதலில் எழுதுவதற்காக பயன்படுத்தப் படும் INK கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய புராணங்களான ராமாயணம் மற்றும் மஹாபாரதம் கூட ஒருவித தாவர சாற்றினால் ஆனா மையை பயன்படுத்தி தான் எழுதியுள்ளனர் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment