Tuesday 19 June 2018

வியர்வை நோயாள் உயிரிழந்த மக்கள்

 
    12-ம் நூற்றாண்டில் தொடங்கி அடுத்து வந்த நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த பல லட்சம் பேர்களின் இறப்புக்கு காரணமாக இருந்த நோய் தான் ப்ளேக். பிளேக் நோய் பரவிக்கொண்டு இருந்த காலகட்டத்திலேயே, மற்றொரு கொடிய நோயான வியர்வை நோய் பரவிக்கொண்டு இருந்தது. பிளேக் நோய் அளவுக்கு இந்த வியர்வை நோய் மிகப்பெரிய அளவுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் கூட இந்த நோய் பல ஆயிரம் உயிர்களை பழிவாங்கியது.

    இந்த நோய் 1485 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக லண்டன் நகரில் வாழ்ந்த மக்களிடையே கண்டறியப்பட்டது. இந்த நோய் தாக்கிய ஒரு வாரத்துக்கு உள்ளேயே ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த நோய் எதனால் உருவாக்கியது என்ற காரணம் அப்போ இருந்த மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அந்த காலகட்டத்தில் பரவி வந்த பிளேக் நோயின் அறிகுறியில் இருந்து முற்றிலுமாக இந்த நோயின் அறிகுறிகள் மாறி இருந்தது.

    இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு முதலில் அதிகமான உடல் வலி, தலை சுற்றல் போன்றவை ஏற்பட்டு பிறகு அதிகமான காய்ச்சல் ஏற்படும். அப்படி ஏற்படுகிற காய்ச்சல் மூலம் அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து வெளியேறும். இதனால் தான் இந்த நோய்க்கு (SWEATING SICKNESS) வியர்வை நோய் என்று பெயரிட்டுள்ளனர். மற்ற நோய்கள் மாதிரி இல்லாமல் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளேயே இறந்து விடுவார்கள்.

    1485 ம் ஆண்டு மர்மமான முறையில் பரவ ஆரம்பித்த இந்த நோய் 1492 ம் ஆண்டு மர்மமான முறையிலேயே மறைந்தது. 10 ஆண்டுகளாக யாரிடமும் தோன்றாமல் இருந்த இந்த நோய் மறுபடியும் 1502 ம் ஆண்டு பரவ ஆரம்பித்தது. மன்னர் 8 ம் ஹென்றியின் சகோதரரான இளவரசர் ஆர்தர் இந்த நோயின் காரணமாகதான் இறந்தார் என்றும் கூறுகின்றனர். இந்த சமயத்தில் ஒரு மருத்துவர். இந்த நோய் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கும், இயல்பு நிலையில் இருப்பவர்களுக்கும் தான் பரவும் என்று கூறியிருந்தார். இது ஒரு அர்த்தமற்ற தகவலாக இருந்தாலும், இதுவும் அந்த காலகட்டத்தில் பரவப்பட்டது. 1492 ம் ஆண்டு மர்மமான முறையில் மறைந்து போன மாதிரியே 1502 ம் தோன்றிய இந்த முறையும் அடுத்த சில ஆண்டுகளில் மர்மமான முறையில் மறைத்தது.

    அதை தொடர்ந்து 1528 ம் ஆண்டு மறுபடியும் இந்த நோய் பரவ ஆரம்பித்தது. இந்த முறை லண்டலின் மட்டும் பரவாமல் இங்லாந்தில் பல பகுதிகளில் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. இதனால் பல ஆயிரம் மக்கள் இறந்தார்கள். மேலும் அதிர்ஷ்ட வசமாக சில மக்கள் இந்த நோயில் இருந்து மீண்டும் வந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு பிறகு இறுதியாக 1551 ம் ஆண்டு இங்கிலாந்தை தாக்கிய இந்த நோய் மறுபடியும் மர்மமான முறையில் மறைந்தது. பிறகு இந்த நோய் மீண்டும் தோன்ற வில்லை. பிளேக் நோய் மாதிரி இந்த நோய் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து பரவமால் இருந்ததாலும், மருத்துவ வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில் தோன்றியதாலும், இந்த நோய் எப்படி உருவானது என்பதை பற்றியும், இதற்கான தீர்வு என்ன என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நோய் மறுபடியும் பரவாமல் இருந்ததே நல்லது என்று சொல்லலாம்.

No comments:

Post a Comment