Saturday 23 June 2018

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதிகளை இணைத்த தமிழர்கள்


    இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத ஒரு நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. தமிழர்கள் வாழ்ந்த மிக தொன்மையான நகரமான குமரி கண்டத்தை ஆண்டவன் பாண்டிய மன்னனே என்று கூறுகிறது வரலாற்று குறிப்புகள். வீரத்திலும் விஞ்ஞானத்திலும் பாண்டியர்கள் தலை சிறந்தவர்களாக விளங்கினார்கள். 9 ம் நூற்றாண்டிலேயே நதிகளை இணைத்த பெருமை பாண்டியர்களுக்கு மட்டுமே உண்டு. அதுவே நம் நாட்டில் நடந்த முதல் நதிநீர் இணைப்பாக இருந்திருக்க கூடும் என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். அந்த நதிநீர் இணைப்பு எதற்காக நடந்தது. பாண்டியர்கள் அதை எப்படி நடத்தி காட்டினார்கள் என்று தெரியுமா.
    மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உருவாகிறது பரலை ஆறு. அதே மலையின் மற்றொரு பகுதியில் இருந்து உருவாகிறது பழையாறு. பரலை ஆற்றுடன் ஒப்பிடுகையில் பழையாறு மிகவும் சிறியது. அதோடு கோடை காலங்களில் நீர் வளம் குறைந்து வறண்டு போனதால் அந்த ஆற்று நீரை நம்பி இருந்த நான்ஸில் நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்திற்கு ஆளானார்கள். அதே சமயம் கொஞ்சம் தூரத்தில் இருந்த பரலை ஆற்றில் ஆண்டு முழுக்க நீர் வற்றாமல் ஓடி கடலில் கலந்து கொண்டு இருந்தது. இதை கண்ட நான்ஸில் நாட்டு மக்கள் பரலை ஆற்று நீரை பழையாற்றுக்கு திருப்பி விட்டால் எங்கள் பஞ்சங்கள் பறந்தோடி விவசாயம் செழிக்கும் என்று பாண்டிய மன்னன் இரண்டாம் ராஜா சிங்கனிடம் கோரிக்கை விடுத்தனர்.
   மக்களின் கோரிக்கையை ஏற்ற மன்னன் இரண்டு ஆறுகளையும் இணைக்கும் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி கி.பி.900 ஆண்டில் 20 அடி உயரம் கொண்ட பெரும் பாறைகளை கொண்டு பழையாற்றின் குறுக்கே அணையை கட்டினார். அதேபோல் மிகப்பெரிய பாறைக்குன்றுகளை குடைந்து கிட்டத்தட்ட 2 மையில் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு பரலை ஆற்று நீர் பழையற்றுகு கொண்டு செல்லப்பட்டது. அதற்குப்பின் தான் நான்ஸில் நாடு செழிப்பான நாடாக மாறியது. 
   இது பற்றிய குறிப்புகள் திருவிதாங்கூர் ஆவண அறிக்கையில் இருக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பாசன பொறியாளராக இருந்த ஆர்ஸ்லி இந்த கால்வாயைப் பற்றி பதிவு செய்கையில் பாண்டியன் வாய்க்கால்களை உருவாக்கிய தொழில்நுட்பம் என்னை பிரம்மிக்க வைக்கிறது. இவர்களே எனது பாசன ஆசான்கள் என பதிவு செய்துள்ளார். இந்த அணையை தொடர்ந்து பிற்கால பாண்டியர்கள் மற்றும் வே நாடு மன்னர்களால் கிட்டத்தட்ட 13 தடுப்பணைகள் பழையாற்றில் கட்டப்பட்டன. இந்த அணைகள் அனைத்தும் பெரும் பாறைகளை ஒன்றிணைத்து, இணைப்பு பகுதியில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி மிகவும் வலிமை உடையதாக கட்டப்பட்டது.
     எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதிகளை இணைத்து ஆற்று நீரை பரிமாற்றம் செய்து நதிநீர் இணைப்புக்கு பிள்ளையார் சுழி இட்டுள்ளனர் நம் பாண்டிய மன்னர்கள். அவர்களின் விஞ்ஞான வளர்ச்சியை என்னவென்று வியப்பது. 

No comments:

Post a Comment