Friday 22 June 2018

மூட நம்பிக்கைகளின் உண்மை



   நம்மை சுற்றி பல காலமாக, பல மூட நம்பிக்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போக கூடாது பயணத்தை நிறுத்திவிட வேண்டும். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் தெரியும், தீபாவளி அன்று இந்தியா மட்டும் வெளிச்சமாக தெரியும் இது நாசா வெளியிட்ட புகைப்படங்கள் என கூறுவது வரை நம்மை சுற்றி கூறப்படும் விசயங்கள், மற்றும் கூற்றுகள் முற்றிலும் மூடத்தனமாக நம்பப்படுபவை.

   பூனை என்ற விலங்கு மக்கள் வாழும் இடத்தில் அதிகம் வசிப்பவை, பண்டைகாலத்தில் மக்கள் வாழும் இடத்தில், அதாவது குறிப்பாக பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடத்தில் போர் புரிய மாட்டார்கள். ஆகவே போர் தொடுக்க செல்லும் வழியில் பூனை வருவதை பார்த்தால் அப்பகுதில் மக்கள் குடியிருப்பு இருக்கும் என கருதி வழித்தடத்தை மாற்றி செல்வார்கள். ஆனால் இது தற்பொழுது ஒரு அபசகுனமாக பார்கிறார்கள். அதே போல தான் ஆயிரம் முறை போய் வந்தாவது கல்யாணம் செயலாம் என்றது மருவி இன்று ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணம் முடிக்கலாம் என வந்தது. இது எல்லாம் பழமொழி சார்ந்த மூட நம்பிக்கைகள் ஆகும்.

   ஆனால் இன்றும் கூட அறிவியல் சார்ந்த மூட நம்பிக்கைகளும் பரப்பப்பட்டு தான் வருகிறது. அதன் சார்ந்த உண்மை கூற்று என்ன என்று பார்க்கலாம். நெடுங்காலமாக, விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் கோடு போல தெரியும் என்ற வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே விண்வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்கள் நம் கண்ணுக்கு தெரியாது என்பது தான் உண்மை. இது சாத்தியம் அற்றது.

   வீட்டில் இருக்கும் தாய்மார்கள் கூறும் வார்த்தைகள் இது. சூவிங்கம் விழுங்கி விட்டால் அது வயிற்றில் வருட கணக்கில் தங்கிவிடும் என்ற மாயை தான் அது. ஆனால் சுவிங்கம் வாய், வயிறு, குடல் என எங்கும் ஒட்டி கொள்ளது என்பது தான் உண்மை.

    ஒரு மனிதன் இறந்து விட்டால் அவரது முடி மற்றம் நகம் வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் நம்பப்டுகிறது. ஆனால் உண்மையில் நமது உடலில் நீரின்றி அல்லது நீர் அவசியம் இன்றி காணபடுவது முடியும் நகமும் தான் மற்றபடி மற்ற அனைத்து பாகங்களும் நீரின் அவசியமும் நீரின் பங்கும் கொண்டு இருக்கும். இறந்த பிறகு நீரின் பங்கு இழந்த அவை சுருங்கி விடும் அப்படியாக சருமம் சுருங்கி விடுவதால் முடியும் நகமும் வளர்வது போல பிம்பம் மட்டுமே உருவாகுமே தவிர, முடியும் நகமும் ஒரு மனிதன் இறந்த பிறகு வளராது.

No comments:

Post a Comment