Wednesday 27 June 2018

தேவ தாசிகளின் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு


   கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என்னும் தேவ அடிகளார்கள். பக்தி மற்றும் இலக்கியம் உச்சத்தில் இருந்த 6 ம் நூற்றாண்டில், அன்றைய சமூகத்தினரால் மரியாதையாக பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழியில் வந்தவர்களுக்கு போதிய அங்கீகாரமும், கவனிப்பும் இல்லாமல், தேவதாசி என்பவர்கள் மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டனர்.

   தமிழ் கலாச்சாரத்துக்கு ஒரு செழுமை சேர்த்த, ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணை விட்டு முற்றிலுமாக அழிந்து விட்டது. தமிழரின் இசைகள் மற்றும் நடனங்கள் எல்லாம் கற்று தேர்ந்து அதை வாழையடி வாழையாக அழியாமல் பின்பற்றி வந்தவர்கள் தேவதாசிகள்.

   தேவதாசிகளின் கடமைகள்: பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும் தான் கோவில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன. செல்வத்தை கொள்ளையடித்தல் மக்களை கூலிக்கு பணியமர்த்துவது போன்ற கொள்கைகளோடு ப்ரிடிஷ் காரர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்தனர். இதனால் தமிழர் மரபு எல்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டது. அதில் ஓன்று தான் தேவ அடிகளார் முறை. தேவ அடிகளாரை காசுக்காக தெருவில் ஆடும் கீழ்தரமான பெண்கள் என கருதினர்.

   தஞ்சாவூர் பெரிய கோவிலில் 400 தேவ அடிகளார், அதாவது ஆண்கள், பெண்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் போன்றோர் சோழர் காலத்தில் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றனர். நட்டுவானர்கள் எனப்படுபவர்கள் தேவ அடிகளார் ஆடுவதற்கு இசை அமைப்பவர்கள் ஆவர். ஆகம முறைப்படி கோவில்களில் பாட்டும் நடனமும், தேவையான ஓன்று.

   1882ம் ஆண்டு கிருஸ்தவ சமயத்தை பரப்புபவர்கள், தேவ அடிகளார்களின் முறையை விபச்சாரிகள் என்றும், சமுகத்தின் பேய்கள் என்றும் முத்திரை குத்தினர். கோவில்களில் நடக்கும் பாட்டு கச்சேரிகள் எல்லாம். தடை செய்யப்பட்டன. உண்மையில் இந்தியாவில் ப்ரிடிஷ் காரர்களால் அதிகமான விபச்சார விடுதிகள் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் அதிகமான ப்ரிடிஷ் அதிகாரிகள் கடுமையான நோய்களுக்கு ஆளானார்கள். இதற்கு காரணம் தேவ அடிகளார்கள் என குற்றம் சாட்டினர். இதனால் ப்ரிடிஷ் காரர்கள், தேவ அடிகளார்களை பல கொடுமைகள் செய்து, துன்புறுத்தி விபச்சாரிகள் என பதிவு செய்ய வைத்தனர். தேவ அடிகளார்களுக்கு மர்மமான நோய் இருப்பதாக கூறி அவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். அதோடு அந்த தேவ அடிகளார்கள் காணமல் போனார்கள். அவர்கள் குடும்பத்தார் கண்களில் கூட படவில்லை.

   தேவ அடிகளார் சமூக சேவகம் செய்தார்கள். தேவதாசிகள் பொது மக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்களில் கூறி உள்ளன. திருவிழா காலங்களிலும், இறை காரியங்களிலும் தேவ அடிகளார்களின் வருகை மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. அவர்களின் குழைந்தைகள் சமுகத்தில் உயர்வாக போற்றப்பட்டன. ஆனால் இப்பொழுது அவர்களின் நிலை முற்றிலும் தவறான ஒன்றாகி விட்டது. விபச்சாரம் செய்பவர்கள் தேவ அடிகளார்கள் என்று மாறிவிட்டது.

   இன்றைய நிலையில் தேவ அடிகளார்களின் மரபு அழிந்து விட்டது என்றாலும். அவர்களின் புகழ் மறைந்து அவர்கள் கீழ் தரமானவர்கள் என்றே அறியபடுகின்றனர். விபச்சாரிகளை தீண்ட தகாத வார்த்தைகளில் அழைகின்றனர். தமிழர் கலையை கட்டிகாத்த இந்த பெண்கள் ப்ரிடிஷ் கார்களின் கொடுமையால் அழிந்தனர். அவர்களின் புகழும் அழிந்து விட்டது.

No comments:

Post a Comment