Friday 22 June 2018

இந்தியாவின் RAW என்னும் உளவு அமைப்பு


    பங்களாதேஸ் போர், கராச்சி குண்டு வெடிப்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஸ்மீரின் கிளர்ச்சி உள்ளிட்ட பாகிஸ்தான் எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்சனைக்கும் காரணம் யார் என்று கேட்டால் இந்தியன் RAW என்று பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் வசிப்பவர்களிடம் RAW பற்றிய விவரம் கேட்டால், அதை பற்றி அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மும்பையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI பற்றிய பல தகவல்களை தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, RAW பற்றிய தகவல்களை தெரிவதில்லை. இப்பொழுது நாம் தர்மத்தை காப்பவன் காக்கப்படுவான் என்ற குறிக்கோளுடன் இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் இந்தியாவின் உளவு அமைப்பான RAW பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.    1962 ம் ஆண்டு இந்திய சீனப் போர் மற்றும் 1965 ம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் போர் ஆகியவற்றிற்கும் IB எனப்படும் INVESTIGATION BUREAU பொறுப்பில் இருந்த புலனாய்வு சேவர்களின் தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கென பிரத்தியேகமான புலனாய்வை அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் வெளிநாட்டு தகவல்களை சேகரிக்க தீவிர நடவடிக்கைகளை  மேற்கொண்ட இந்திரா காந்தி அரசாங்கத்தால் 1968 ம் ஆண்டு, செப்டம்பர் 21 ம் நாள் RAW எனப்படும் RESEARCH மற்றும் ANALYIS என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.    RAW முதல் இயக்குனராக ராமேஷ் நாத் தாகூர் என்பவர் பொறுப்பேற்றார். விரைவிலேயே இவர் தனது சமயோஜிதம், தனித்தன்மையான செயல்பாடுகள் காரணமாக  உலகளாவிய புலனாய்வு துறையினரால் மாஸ்டர் மைண்ட் என புகழப்பட்டார். 9 ஆண்டு காலம் இயக்குனராக பதவி வகித்த இவருடைய தலைமையில் பங்களாதேஸ் சுதந்திரம் மற்றும் இந்தியாவுடன் சிக்கிம் மாநில இணைப்பு ஆகியவற்றிலும் நேரடியாக தலையிட்டு உதவியது RAW புலனாய்வு அமைப்பு. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரெல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கடுமையான பயிற்சிகளுக்காக RAW அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர். தற்காப்பு கலைகளில் குறிப்பாக கிராவ் மகா எனப்படும் ராணுவ தற்காப்புக்கலை மற்றும் உளவு சாதனங்களை கையாளுதல் ஆகியவற்றில் முழுமையான பயிற்சி RAW அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது.    1984 ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு ஒரு முக்கியமான தகவலை அளவறிந்து சொன்னது RAW. அதாவது சியாச்சி மலையில் உள்ள சாடோரோ பகுதியை கைப்பற்ற அபபி என்னும் சிறப்பு ராணுவ நடவடிக்கையை செயல்படுத்த திட்டம் தீட்டியது பாகிஸ்தான் ராணுவம். இதை பற்றி RAW உளவு அமைப்பு சரியான நேரத்தில் இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்ததால் இந்திய ராணுவம் மேக்தூத் நடவடிக்கையை தொடங்கி பாகிஸ்தான் ராணுவம் பிராந்தியத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே துரத்தி அடித்தது. ஆரம்ப காலத்தில் INVESTIGATION BUREAU, போலீஸ் துறை மற்றும் இந்திய ராணுவம் அல்லது வருவாய் துறைகள் ஆகியவற்றில் இருந்து மட்டுமே ஆட்களை பணியமர்த்தியது RAW. ஆனால் தற்பொழுது RAW உளவு அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பது முன்பை காட்டிலும் எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பல்கலைக்கழகங்களில் இருந்தும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.    1999 ம் ஆண்டு ஜூலையில் இந்தியாவின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் செயல்பட்டதை, பாகிஸ்தான் ராணுவ தலைவர் பர்வேஸ் முஷாரப் மற்றும் அவருடைய தலைமை தளபதியான டெப்டினட் ஜெனரல் மோகன் அஜிஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலை வெற்றிகரமாக பதிவு செய்ததால், கார்கிலின் ஊடுருவலில் பாகிஸ்தானின் பங்களிப்பு உள்ளதை உறுதி செய்தது. எந்த நேரத்திலும் எந்த ஒரு பிரச்சனையிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் RAWவுக்கு இல்லை. அதேபோல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படியும் RAW விடம் யாரும் எந்த ஒரு கேள்வியும் எழுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.    நாட்டின் பிரதம மந்திரி மற்றும் JOINT INTELLIGENCE க்கு மட்டுமே RAW பதிலளிக்கும். RAW வின் தலைவர், மத்திய அமைச்சரவை செயலகத்தின் செயலாளர் என்று அழைக்கப்படுகிறார். RAW வின் தற்போதைய தலைவர். அணில் தஸ்மான என்பவர் ஆவர்.

No comments:

Post a Comment