Wednesday 4 July 2018

2018 ல் இனி என்ன நடக்கும்



   எதிர்காலத்தில் நடக்க உள்ளதை முன் கூடியே கணித்து சொல்வது தான் ஆருடம். இந்த மாதிரியான் ஆருடம் உண்மையில் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் எல்லோருக்கும் உள்ளது. அதுவும் சமிபத்தில் Nostradamus ஆல் சொல்லப்பட்ட ஆருடம் மிகவும் பிரபலம். இதுபோல் Nostradamus ஆல் சொல்லப்பட்ட 2018 ம் ஆண்டுக்கான கணிக்கப்பட்ட ஆருடம் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

   16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் தலை சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர் தான் Nostradamus. 1555 ம் ஆண்டு Less Prophecies என்ற ஒரு புத்தகம் எழுதினார். இந்த புத்தகத்தில் 4 வரிகளை கொண்ட பல பாடல்களை எழுதினார். அந்த அனைத்து பாடல்களும் எதிர்காலத்தில் நடக்க உள்ள நிகழ்வுகளை பற்றி குறிப்பிட்டுள்ளது. Nostradamus ஆல் சொல்லப்பட்ட பல ஆருடங்கள் நிகழ்ந்துள்ளதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அப்படி சொல்லப்பட்ட ஆருடங்களில் சில முக்கியமானவைகள்.

   1871 ம் ஆண்டு ஏற்பட்ட Great Chicago Fire,  1930 ல் ஏற்பட்ட ஹிட்லரின் வளர்ச்சி, மனிதன் முதல் முறையாக நிலவில் கால் வைத்தது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான John F Kennedy படுகொலை, உலக வர்த்தக கட்டிடம் தாக்குதல் போன்ற முக்கியமான நிகழ்வுகளை 16 ம் நூற்றாண்டிலேயே 4 வரி பாடல் மூலம் எழுதி வைத்துள்ளார்.

    Nostradamus 2018 ம் ஆண்டிகான ஆருடம் : 2018 ம் ஆண்டு நீண்ட காலம் தொடர போகும் ஒரு யுத்தம் ஓன்று தொடங்க உள்ளதாகவும், இந்த யுத்தம் 2018ல் இருந்து 2025 வரை நடைபெறும் என்றும் இதன் மூலம் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் என்றும் சொல்லபடுகிறது. மேலும் 2018 ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் Solar Radiation ஏற்பட உள்ளதாகவும், இதனால் மிக அதிக அளவிலான காடுகள் அழிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் உலக அளவில் அதிகபடியான பூகம்பம் ஏற்பட உள்ளதாகவும், அதுமட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிப்படைய உள்ளதாகவும் தன்னுடைய ஆருடத்தில் தெரிவித்துள்ளதாக கூறபடுகிறது. அது மட்டும் இல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறபடுகிறது.

   இவை அனைத்தும் Nostradamus ஆல் கூறப்படும் முக்கியமான ஆருடங்கள். இந்த ஆருடங்கள் எல்லாம் 2018 ம் ஆண்டு உண்மையாக நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment