Wednesday 4 July 2018

மறையும் மனிதர்களை பற்றி தெரியுமா?


    ஜப்பானில் சமீப ஆண்டுகளாகவே JOHATSU என சொல்லப்படும் மோசமான கலாச்சாரம் பரவிக்கொண்டு வருகிறது. இது எப்படி பட்ட ஒரு விளைவை கொண்டது என்றால், ஒரு குடும்பத்தை சேர்ந்தவரோ, அல்லது தனது பக்கத்து வீட்டில் வாழ்ந்தவரோ, அல்லது ஒருவரது நண்பரோ, அவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையை விட்டு திடீர் என்று ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் விலகிக் கொள்வது தான் இந்த JOHATSU கலாச்சாரம்.



    இப்படி விலகிக் கொள்வதற்கு என்ன காரணம் என்றால், அவர்களை படும் அவமானம் அல்லது இயலாமை தான். ஜப்பானிய மக்கள் மற்ற நாட்டு மக்களை விடவும் சமுதாயத்தின் மீது அதிக பயம் கொண்டவர்களாக உள்ளனர். ஒரு நல்ல SCHOOL- படிக்கிறதுல ஆரம்பித்து நல்ல வேளையில் நிரந்தரம் ஆகும் வரைக்கும் ஒரு RESERVE TYPE மனோபாவத்தை கொண்டுள்ளனர். ஒருவேளை அவர்களால் சமுதாயத்தில், ஒரு நல்ல யுனிவெர்சிட்டிலையோ, ஒரு நல்ல வேலையிலையோ சேர முடியாமலோ, அப்படி சேர்ந்து பின்னும் எதோ ஒரு காரணத்தால் வேலை இழப்பு ஏற்பட்டால், அவர்களை சார்ந்து இருப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் நிலைக்கு தள்ளபடுக்குகின்றனர். அப்படி பட்ட ஒரு சூழல் உருவாகும் போது, அவர்களால் எடுக்கப்படும் ஒரு முடிவுதான் இந்த JOHATSU என்ற கலாச்சாரம்.



    1990 களின் ஆரம்பத்தில் தான் JOHATSU கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. ஆனால் கடந்த 27 ஆண்டுகளில் மட்டும். கிட்ட தட்ட 1 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த JOHATSU கலாச்சாரம் ஆண், பெண் இரு தரப்பினருடனும் நிலவுகிறது. இளைஞர்களில் ஆரம்பித்து, வயதானவர்கள் வரை எந்த வித வயது வித்தியாசமும் இல்லாமல் தங்களின் அன்றாடம் வாழ்க்கையில் இருந்து தங்களை தாங்களே விலக்கிக் கொள்கின்றனர். தங்கள் வாழ்ந்த வாழ்க்கையும், தங்கள் வாழ்ந்த அடையாளத்தையும் விட்டு வருவது என்று கேட்கும் போது நமக்கு ஒரு கடினமான ஒரு விஷயமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் அது அவ்வளவு கடினமான காரியம் இல்லை என்று தான் கூறுகின்றனர். ஏன் என்றால் JOHATSU முறையில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை இருந்து விலக நினைத்தால், அவர்களுக்கு உதவி செய்வதற்காக அதிகமான அமைப்புகள் ஜப்பானில் உள்ளது.



    இந்த JOHATSU முறையில் மறைந்து போவது ஜப்பானின் மிக முக்கிய நகரமான டோக்கியோ வில் தான் அதிக அளவில் நடப்பதாகவும், அங்குதான் இதை பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி மறைந்து போனவர்கள், வெளிநாடுகோ அல்லது வெளியூருக்கோ போனால், இவர்கள் டோக்கியோ நகருக்கு அருகில் உள்ள சான்யோ நகரைத்தான் தேர்ந்தெடுகிறார்கள். இப்படி இவர்கள் காணாமல் போகும் நபர்களை பற்றி போலீசாருக்கு  அதிகமான வழக்குகள் வந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் உள்ளது. இதற்கு பின்னால் பல காரணங்கள் கூறப்படுகிறது.



    இப்படி காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காகவே ஜப்பானில் பல தனியார் துப்பறியும் அமைப்புகள் ஜப்பான் முழுவதும் செயல்பட்டுவருகிறது. ஆனால் அதற்கு ஆகும் செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதற்கு முயற்சிப்பது இல்லை. JOHATSU முறையில் தங்களை தாங்களாகவே மறைந்து கொண்டவர்கள், அவர்களாகவே வெளியே வந்தால் ஒழிய, அவர்களை கண்டுபிடிக்கும் சாத்தியம் மிக மிக குறைவு என்று தான் கூறுகின்றனர். இது வரைக்கும் இப்படி காணாமல் போனவர்களில் சிலர். திரும்பியும் வந்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் திரும்பி வர விருப்பம் இல்லை என்று சொல்வது வருத்தம் அளிக்கும் உண்மை.



No comments:

Post a Comment