Tuesday 10 July 2018

பெண்களுக்கு எதிராக கட்டுபாடுகள் கொண்ட நாடுகள்


   இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக இருந்தாலும் கூட இன்றும் ஒருசில நாடுகளில் பெண்களுக்கு எதிராக மோசமான கட்டுபாடுகளும், சட்டங்களும் நடைமுறையில் உள்ளது. அதில் முதல் 5 இடங்களை பெற்றுள்ள நாடுகள்.


ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக, தீவிரவாதம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எல்லாம் இந்த நாட்டில் தான் நடைபெறுகிறது. இந்த நாட்டில் தான் குழந்தை திருமணம் பெருமளவில் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு பிரசவத்திற்காக செல்லும் எதோ ஒரு பெண் உயிர் இழப்பதாகவும் கணித்துள்ளனர். இங்குள்ள பெண்களுக்கு 85 சதவீதம் வீட்டில் தான் பிரசவம் பார்க்கபடுகிறது. இதனால் இந்த இறப்பு தொகை அதிகரித்துள்ளது என்றும் கூறுகின்றனர்.


காங்கோ: ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி அடையாத நாடு. கல்வி, மருத்துவம், சுகாதாரம் இந்த மூன்றிலும் ரொம்பவே பின் தங்கியுள்ளது. இங்கு வாழும் பெண்கள் சராசரியாக தினமும் 1௦௦ க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இந்த நாட்டில் ஓவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கபடுகிரர்கள். இங்குள்ள கர்ப்பிணி பெண்கள் பலருக்கும் ரத்த சோகை நோய் உள்ளது குறிபிடத்தக்கது.


சவுதி அரேபியா: உலத்திலேயே பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு உள்ள நாடும் இது தான், அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருக்கும் நாடும் இது தான். மேலும் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் கடுமையான சட்டங்களும் உள்ளது. இந்த நாட்டில் இருக்கும் பெண்கள் கிசாப் என்ற ஆடையை கண்டிப்பாக அணிய வேண்டும். அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசுவது தண்டனைக்குரிய செயல் ஆகும். ஆண்கள் துணை இல்லாமல் எந்த ஒரு பொது இடங்களுக்கு செல்ல கூடாது. அப்படி சென்றால் உள்ளூர் காவலர்கள் அவர்களை வன்மையாக கண்டித்து அனுப்பி விடுவார்கள். மேலும் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமையும் 2018 ஆம் ஆண்டு தான் வழங்கியுள்ளனர்.


பாகிஸ்தான்: பாகிஸ்தானை பற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றாகவே தெரியும். ஒவ்வொரு வருடமும் 1௦௦௦ க்கும் மேற்பட்ட பெண்களை கௌரவ கொலை செய்கிறார்கள். இந்த நாட்டில் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு கூட அங்குள்ள தீவிரவாதிகள் பயங்கரமாக எதிர்கிறார்கள். 2012ம் வருடம் பெண் கல்வி வளர்ச்சி பற்றி பேசியதற்காக மலாலா யூசுப் சாகிப் என்ற சிறுமியை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டார்கள். மற்றும் பாகிஸ்தானில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு இன்று வரை அடிமையாக தான் இருந்து வருகிறார்கள்.


சோமாலியா: இந்த நாடு ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ளது. சோமாலியாவின் தபோதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. உணவு பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஒரு காலத்தில் சோமாலியா என்ற நாடு மிகப்பெரிய விவசாய நாடாக இருந்தது. இந்த நாட்டில் பெண்கள் யாரும் அரசாங்கத்துக்கு எதிராக எந்த கேள்வியும் கேட்ககூடாது. அப்படி கேள்வி கேட்டால் அவர்களை பயங்கராமான தண்டனைக்கு உட்படுத்துகிறார்கள். மேலும் இந்த நாட்டு பெண்கள் யாருக்கும் கல்வி அறிவு இல்லை என்பதால் யாரும் கேள்வியும் கேட்க மாட்டார்கள்.


இந்த வரிசையில் இந்தியா வரவில்லை என்று பெருமை கொள்ள வேண்டாம். இந்தியாவில் இன்றும் பெரும்பாலான மாநிலங்களில் பெண்களை அடிமை போல் தான் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment