Tuesday 10 July 2018

இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அதிசயங்கள்


     மிக பெரிய நகரங்கள், மிக பெரிய காடுகள் என எதுவுமே இந்த உலகத்தில் கடைசி வரை நிரந்தரமாக இருக்க போவதில்லை. அவைகள் இயற்கை சீற்றங்களாலோ, மனிதனின் செயல்களினாலோ, முற்றிலுமாக அழிய கூடிய சில இடங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

     மாலத்தீவு : பூமி அதிகமாக வெப்பம் அடைந்து கொண்டு வருவதால், பனிப்பாறைகள் வேகமாக உருகிக் கொண்டு வருகிறது. இதனால் உயரும் கடல் மட்டமானது, நில பரப்பில் இருக்கும் நகரங்கள் கடலுக்கு அடியில் கொண்டு செல்ல உள்ளது நம் எல்லோருக்கும் தெரியும். இதனால் அதிகம் பாதிக்கபட கூடிய இடங்களில் மிக முக்கியமான இடம் தான் இந்த மாலத்தீவு. சுற்றுலாவுக்கு பெயர் போன இந்த மாலத்தீவுவை சுற்றி 1200 சிறிய தீவுகளும், 4 லட்சம் மக்களும் வசிக்கின்றன. இங்குள்ள தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து, வெறும் 1.8 மீட்டர் உயரத்தில் தான் உள்ளது. இதன் படி பார்த்தால் 2100ம் ஆண்டுக்குள் மாலத்தீவு உள்பட அதை சுற்றி உள்ள தீவுகள் அனைத்தும் மூழ்க கூடும் என அஞ்சப்படுகிறது.

     SAN FRANCISCO: மிகப்பெரிய நில நடுக்கங்களும், பூகம்பங்களும் SAN FRANCISCO மக்களுக்கு ஒன்றும் புதியது அல்ல. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு புவியியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிலநடுக்கம் SAN FRANCISCO வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அதாவது, இந்த நகருக்கு அடியில் உள்ள ரூச் வித் கிரேக் மற்றும் ஹயவர் என்ற இரு நில தட்டுகள் ஒன்றோடு ஓன்று தொடர்ந்து மோதிக்கொண்டு உள்ளது. மோதல்கள் அதிகரித்து கண்டத்தட்டுகள் நகரும்போது 7.5 ரிக்டர் அளவுக்கு பல நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக உருவாகுமாம். இதனால் SAN FRANCISCO நகரில் உள்ள பல கட்டிடங்கள் முற்றிலுமாக அழிவதுடன், எண்ணில் அடங்காத உயிர் சேதமும் அடங்கும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள். இந்த நிலநடுக்கம் 2086 ம் ஆண்டு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

     VENICE CITY: 1500 வருடங்களாக கடலில் மிதந்து வரும் VENICE CITY யை நேரடியாக பார்க்க நினைப்பவர்கள் இப்பொழுதே பார்த்து விடுங்கள். ஏனென்றால் மரத்தால் ஆனா அஸ்திவாரங்கள் மீது அமைந்து உள்ள இந்த VENICE CITY ஆனது, கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்வதால், மரத்தால் ஆனா அஸ்திவாரங்கள் வலுவிழந்து வருகிறது. கடல் நீர் அடிக்கடி வீடுகளுக்குள் செல்வதனால் கொஞ்சம் கொஞ்சமாக சேதம் அடைய தொடங்குகிறது. இதனால் சில நூற்றாண்டுகளுக்குள் VENICE CITY யானது. மக்கள் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்படும் என்கின்றனர். கடல் நீர்மட்டம் உயர்வதை தடுக்க பல தொழில்நுட்பங்களை இவர்கள் கையாண்டாலும், முழுக்கையாக பயன் இல்லை என்பதே உண்மை.

     GREAT WALL OF CHINA : உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் சீனப்பெருஞ்சுவர், கூடியவிரைவில் அழிந்துவிடக்கூடிய நிலையில் உள்ளது. ஏன் என்றால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளாலும், இயற்கை சீற்றங்களாலும் பல இடங்களில் சேதம் அடைந்து வருகிறது. தற்பொழுது இது மட்டும் அல்லாமல் இந்த சுவர் அருகே குடி இருக்கும் கிராம மக்கள், அவர்கள் வீடு கட்ட தேவைப்படும் அனைத்து கற்களையும் இந்த சுவர்களை இடித்து எடுத்து செல்கின்றனர். அதேபோல் சீன மொழியில் எழுதப்பட்டு இருக்கும், பெருஞ்சுவருடைய கற்கள் கள்ள சந்தையில் பல ஆயிரங்களுக்கு விலை போகிறது. இதனால் சீனப்பெருஞ்சுவரின் வடமேற்கு பகுதி அனைத்தும், இன்னும் 20 வருடங்களில் முற்றிலுமாக அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சீன அரசு, பெருஞ்சுவற்றில் உள்ள கற்களை திருடுபவர்களுக்கு 50,000 வரை அபராதம் வித்தாலும், கற்கள் திருடுபோவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

     CONGO  BASIN : மத்திய ஆப்ரிக்காவில் உள்ள CONGO  BASIN என்னும் காடு தான் உலகின் மிகப்பெரிய 3வது மழைக்காடு ஆகும். ஆறு நாடுகள் வரை பரவி காணப்படும் இந்த காட்டில் இருந்து உலகத்திற்கு தேவையான மொத்த OXIGEN -ல் 20 சதவீதம் இந்த காட்டில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி பலவிதமான வன விலங்குகளும், மூலிகை தாவரங்களும், வேறு எங்கும் காணப்படாத பல வித்தியாசமான மரங்களும் இங்கு மட்டுமே காணப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இந்த காட்டில் இருந்து பெரும்பாலான மரங்கள் மற்றும் விலங்குகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீட்டுப்பொருட்கள் மற்றும் பேப்பர்கள் தயாரிப்பதற்காக பல லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் கனிமங்கள் எடுப்பதற்காக இந்த பகுதியில் சுரங்கங்கள் தோண்ட படுகின்றன. இதே போன்று இங்குள்ள மரங்கள் தொடர்ந்து வெட்ட பட்டால், இன்னும் 50 வருடங்களுக்குள் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment