Saturday 11 August 2018

சாதிக் கொடுமையால் பலியான முதல் பெண்


   ஆள்பவர்கள் ஆளபடுபவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பது, வரலாற்றில் புதுமையான நிகழ்வு அல்ல. இப்படி அவர்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தும் ஆயுதம், இரண்டு விஷயம் தான். ஓன்று வரி, இரண்டாவது சட்டத்திட்டங்கள். பல மோசமான வரிவிதிப்புகளால் புரட்சிகளும் வெடித்துள்ளது.
   நாம் அனைவரும் 19ம் நூற்றாண்டில், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு கீழ் வாழ்ந்திருந்தால், மீசை வளர்பதற்கும், செருப்பு அணிவதற்கும் கூட வரி கட்ட வேண்டியது இருக்கும். இது அனைவருக்குமான வரி விதிப்பு இல்லை. குறிப்பிட்ட சில தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்த ஆண்களுக்கு தான் மேற் கூறிய வரிகள் பொருந்தும்.
   அதுவே தாழ்த்தப்பட்ட பெண்களாக இருந்தால், வீட்டில் தங்க நகைகள் வைத்து இருந்தால் கூட அணிய கூடாது. இதை விட பெரிய கொடுமை என்னவென்றால், பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தன்னுடைய மார்பை மறைக்கக் கூடாது. அப்படி மீறி அவர்கள் மார்பை மறைக்க வேண்டும் என்றால், தங்களுடைய மார்பின் அளவுக்கு ஏற்றார் போல் வரி செலுத்த வேண்டும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சாதிய அடக்கு முறைக்கு மோசமான எடுத்துகாட்டு தான் இந்த முலை வரி.
   ஆனால் இந்த முலை வரியை எதிர்த்து நாஞ்செலி என்ற பெண் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து உறுதியாக போராடினார். இந்த முலை வரியை எதிர்த்ததோடு மட்டும் அல்லாமல் தைரியாமாக மார்பையும் மறைத்தார். இதனால் கோபம் கொண்ட சமஸ்தானத்தின் அதிகாரிகள் நாஞ்செலியின் வீட்டுக்கே வந்து வரி கேட்டார்கள். “கொஞ்சம் காத்திருங்கள் எடுத்து வருகிறேன்” என்று வீட்டின் உள்ளே சென்று தனது மார்பை அறுத்ததோடு மட்டும் இல்லாமல் வாழை இலையில் வைத்து, அதிகாரிகளிடம் கொடுத்தார். “இது இருந்தால் தானே வரி கேட்பீர்கள், இதையே எடுத்து செல்லுங்கள்” என்று கூறினார்.
   மேலும் உத்திர போக்கு அதிகரித்ததால் அதே இடத்தில் நாஞ்செலி மடிந்தார். வரலாற்றில் பெண்களுக்கு எதிராக பெறபட்ட கொடுமையான வரி இது தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சாதிய வெறி தான் நாஞ்செலி. பிறகு, திருவிதாங்கூர் சமஸ்தானம் தனது தவறை உணர்ந்து இந்த முலை வரியை ரத்து செய்தது.

No comments:

Post a Comment