இந்தியாவில் மொத்தம் 19 வகையான தாவரங்கள் அசைவ
உணவாக பூச்சிகளை உண்டு உயிர்வாழ்கிறது. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில்
நெப்பந்த்செயி என்னும் பூச்சி உண்ணும் தாவரம் இருக்கிறது. இந்த தாவரம் காசி
மலையில் அதிகமாக இருப்பதால், நெப்பந்தசெயி காசியானா என்ற பெயரை இந்த தாவரத்திற்கு
சூட்டியுள்ளனர். இந்த தாரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1௦௦௦ அடி முதல் 1௦,௦௦௦
அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரம் மிக்க காடுகள், சதுப்பு
நிலங்கள், குட்டை ஓரங்களில் நெப்பதசெயி 1௦௦ ஆண்டுகள் வரை வாழும் தன்மையை கொண்டது..
ஒரு அடி உயரம் முதல் 7௦ அடி உயரம் வரை கொடியாக
மரங்களில் தொற்றி கொண்டு வளர்ந்து, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி
முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை, பூஜாடி போன்ற தனது பூக்களில் சிக்க வைத்து,
தனக்கு தேவையான உணவை எடுத்து கொள்கிறது. வண்டு, நத்தை, குழவி என பூச்சிகளை மட்டும்
இல்லாமல் குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாபிடுகின்றன. இவை அசைவத்தை
விரும்பி சாபிடுவதற்கு முக்கிய காரணம், உயிர் வாழ்வதற்கு தேவையான புரதச் சத்துகள்,
இந்த தாவரம் வளரும் மண்ணில் குறைவாக இருப்பதுதான்.
பூக்களின் உயரம் 1௦ c.m முதல் 30 c.m வரை
இருக்கும். பூவின் கழுத்துப் பகுதியில் முடி போன்ற இல்லை, குடுவையை
மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவமும்,
கழுத்து விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும்.தேனின் வாசமும்,
பூவின் நிறமும், வண்டு மற்றும் பூச்சி இனங்களை கவர்ந்து இழுக்கும். விபரீதத்தை
அறியாத பூச்சி இனங்கள் பூவின் விளிம்பில் அமர்ந்து தேனை குடிக்க தொடங்கும்
நொடியில், வேகமாக வழுக்கிக்கொண்டு பூவுக்குள் உள்ள பெப்சின் திரவத்தில் விழுந்த
அடுத்த சிறுது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும்.
பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் வட இந்தியாவில்
மட்டும் தான் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 1975 ம் ஆண்டு மேகாலயா
மாநிலத்தில் இருந்து ஏற்காடு தாவரவியல் பூங்காவுக்கு 15 நெப்பந்தசெயி செடிகள்
கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு செடி 3௦ ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருந்து
வருகிறது.
No comments:
Post a Comment