Tuesday 23 October 2018

பூமி சூடாகிறது


   மூன் எப்போதும் இல்லாத அளவு பூமி சூடாகிக் கொண்டே போகிறது. இதை விஞ்ஞானிகள் எப்படி அறிந்து கொண்டார்கள் என்று தெரியுமா? பனிமலையில் உள்ள பனிக்கட்டிகளைத் துளைத்து அதை ஆய்வதன் மூலமாக விஞ்ஞானிகள் பூமி சூடாவதை கண்டுபிடித்துள்ளனர்.

   இமய மலையில் திபெத்தில் கடல் மட்டத்திற்கு மேல் நான்கு மைல்கல் உயரத்தில் எடுக்கப்பட்ட பனிக்கட்டியை  சோதனை செய்துபார்த்த விஞ்ஞானிகள், 1990 தொடங்கிய வருடங்களில் பூமி மிக அதிகமாக சூடாக்கி வருகிறது என்று கூறுவதோடு, கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத ஓன்று இது என்றும் கூறியுள்ளார்.

    பூமி சூடானால் நமக்கு என்ன என்று விட்டுவிட முடியாது. சிறிதளவு அதிக சூடும் பெரும் கேட்டை விளைவித்துவிடும். எடுத்துக்காட்டாக 1979ல் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம். 1979ல் அமெரிக்காவில் ஒரு நீண்ட கோடைக் காலம் ஏற்பட்டது. விவசாயிகள் ஒரு கடும் வெப்பத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இடி, புயல்கள் ஏற்பட்டன. அப்படிப்பட்ட ஒரு புயல் ‘மின்னசோட்டா’ பகுதியில் ஏற்பட்டது. மற்ற புயல்களைவிட இது பெரிதாக இருந்தது, கிழக்கே பயணப்பட்ட புயல் அட்லாண்டிக்கில் பிரம்மாண்டமான சுவர் போன்ற உயரமான அலைகளை ஏற்படுத்தியது. அயர்லாந்தை இரண்டு கழித்து அது அடைந்தது.

   அப்போது அயர்லாந்தில் வருடாந்திர உற்சவத்திற்காக ஒரு படகுப் போட்டி நடக்க இருந்தது. சரியான வானிலையில் படகுப் போட்டி துவங்கியது. இன்னும் காற்று சற்று கூடுதலாக அடித்தால் போட்டி நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்கள் எண்ணினார். ஆனால திடிரென வந்த புயல் பெரும் சேதத்தை விளைவித்தது. பதினைந்து போட்டியாளர்கள் இறந்தனர். உயிர் காக்கும் மிதவைகள் இங்கும் அங்கும் அல்லாடி குப்புறப் புரட்டிப் போடப்பட்டன. எல்லாத் திசைகளிலிருந்தும் சுவர் போன்ற பேராழி அலைகள் எழுந்தன. 135 பேரை மீட்புக்குழு மீட்டது.


ஒரு சிறிய அளவு மின்னசொட்டவில் ஏற்பட்ட உஷ்ணநிலை உயவு அட்லாண்டிக்கில் பெரும் சேதத்தை விளைவித்துவிட்டது. இந்த நிலையில் தான் இமய மழைப் பனிக்கட்டிகளை தீவிரமாக ஆராய்ந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மனிதன் தன் சுற்றுபுறத்தை மாசுபடுத்தக்கூடாது. ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவுரை இந்த சோதனை மூலம் இன்னும் உறுதியாகிறது.

No comments:

Post a Comment