Sunday 21 October 2018

ஆள் தூக்கி வரலாறு (HISTORY OF LIFT)


   இன்று பல அடுக்குமாடி வீடுகள் வந்துவிட்டது. வெளிநாடுகளில் 1௦௦க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டிடங்கள் வந்துவிட்டன. இத்தனை உயரம் கொண்ட கட்டிடங்களின் உச்சத்தை எட்ட உதவியாக இருப்பது லிப்ட் என்ற நவீனம் தான்.


   இந்த லிப்ட் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், பல மாடி கட்டிடங்கள் உருவாகிருக்க வாய்ப்பு இல்லை. உயரமான இடங்களுக்கு செல்ல, பல காலம் முன்பிருந்தே மனிதன் சிந்திக்க தொடங்கியுள்ளான். அப்படி சிந்தித்து சில கருவிகளையும் உருவாக்கிவிட்டான். ஆனால் அவற்றை உபயோக்கி சற்று சிரமமாக இருந்தது. மாறாக நிறைய ஆட்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது. இதையெல்லாம் கடந்து இயக்குவதற்கு சுலபமான, இப்பொழுது நடைமுறையில் உள்ள லிப்டை 1852-ம் ஆண்டு கண்டுபிடித்தார் எலிஷா கிரேல்ஸ் ஓட்ஸ் என்பவர்.


   இவர் உருவாக்கிய முதல் லிப்ட் நியூயார்க் நகரின் கிறேஷ்டல் பேலஷில்தான் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆள் தூக்கி அமைப்பின் பயனை அப்போதுதான் உணர்ந்தார்கள். பல மாடிகட்டிடங்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள். பல அடுக்குமாடிகளை கொண்ட ஓட்டல்கள் வைத்திருப்பவர்கள் லிப்டை பொருத்தத் தொடங்கினர்.


   லிப்ட் வருவதற்கு முன் ஓட்டல்களின் தங்கும் உயரத்தை பொறுத்து வாடகை நிர்ணயம் செய்து இருந்தார்கள். லிப்டின் வருகையால் இந்த நிலை மாறி அனைத்து தளங்களின் அறைகளுக்கும் ஒரே மாதிரியான வாடகை நிர்ணயம் செய்தது. ஏசி இருக்கிறது என்று இப்பொழுது விளம்பரம் செய்வது போல், அன்று லிப்ட் வசதி உள்ள ஹோட்டல் என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. லிப்ட் என்பது பெருமையான விஷயமாக கருதப்பட்டு வந்தது.


   இங்கிலாந்து நாட்டின் ஏழாவது எட்வர்ட் சக்கரவர்த்தி நியூயார்க் சென்றுபோது லிப்டை பார்வையிடுவது, அதில் ஏறி இறங்குவது, ஆகியவை அவருடைய நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக சேர்க்கப்பட்டு இருந்தது.


   அதன்பின் ஒட்ஷ்க்கு போட்டியாக டப்ஷஸ், சைரஸ், பால்டுவின் போன்ற நிறுவனங்களும் லிப்ட் தயாரிப்பில் இறங்கின. ஆனாலும் அவர்கள் தயாரித்த லிப்ட்கள் பெரிதாக ஒன்றும் வரவேற்பை பெறவில்லை. அதனால் வெகு சீக்கிரம் தங்களின் தயாரிப்பை நிறுத்திக் கொண்டன. ஓட்ஸ் மட்டும் மார்கெட்டில் கொடி கட்டி பறந்தது. தொடங்கிய நாளில் இருந்து ஓட்ஸ் நிறுவணும் இன்று முதல் இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment