Saturday 20 October 2018

உலகை உலுக்கிய கோமாளிகள்


   கடந்த 2016 ம் ஆண்டு அமெரிக்க உள்பட பல மேற்கத்திய நாடுகளில் CLOWN SIGHTINGS என்னும் ஒரு பயமுறுத்தும் விளையாட்டு ஓன்று நடைபெற்றது. விளையாட்டாக தொடங்கப்பட்ட இந்த செயல் போக போக அபாயகரமான நடவடிக்கையாக மாறத்தொடங்கியது.

   CLOWN SIGHTINGS எப்பொழுது ஆரம்பம் ஆனது என்பதற்கு முன்னால், அடிப்படை நடைமுறை என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். CLOWN SIGHTINGS ல் ஈருபடுவர்கள் CLOWN SIGHTINGS உடைகளை அணிந்து கொண்டு இரவு வேளைகளில் தனியாக செல்லும் நபர்களை பயமுறுத்துவார்கள், கேட்க விளையாட்டாக இருந்தாலும், இது ஒரு கட்டத்தில் ரொம்ப அபாயகரமாக மாறத்தொடங்கியது.

   இந்த CLOWN SIGHTINGS முதல்முறையாக ஆரம்பமான ஆண்டு 2013, இங்கிலாந்தில் உள்ள நோர்த் டாம்ன் பகுதியில் இருந்த குறும்பட இயக்குனர்களான அலெக்ஸ் போவல், எளியர்ஸ், மற்றும் லூப் உபன்ஸ் என்ற மூன்று நபர்கள் இணைந்து, ஸ்டீபன் கிங்கின் பிரபல திகில் நாவலான ஹிட்டில் வரும் க்ரிபி க்லோன் மாதிரி வேடம் அணிந்து கொண்டு அனைவரையும் பயமுறுத்த ஆரம்பித்தார்கள். அப்படி பயப்பட்ட காணொளியை, தங்களுக்கென ஒரு YouTube Chennel உருவாக்கி பதிவேற்றம் செய்தனர். இதனால் இந்த காணொளி மிகப்பெரிய அளவில் உலகெங்கும் பரவியது.

   மேலும் இதை அடிப்படையாக கொண்டு மற்றவர்களும் இது போன்று பயமுறுத்திய காணொளிகளை, பெதிவேற்றம் செய்தனர். அதன் பிறகு இந்த செயல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அதாவது தங்களது சுய சந்தோசத்துக்காக இது போன்று செய்யத் தொடங்கினர். சாலைகளில் வருபவர்களை மட்டும் பயமுறுத்தாமல், சின்ன பசங்க, பெரியவங்க, வீட்டில் தனியாக இருப்பவர்களையும் இப்படி பயமுறுத்த தொடங்கினார்கள். இந்த நிகழ்வு அமெரிக்கா முழுவதும் பரவியது.
அமெரிக்காவில் மட்டும் இல்லமால், கனடா, மெக்சிகோ, ஆஸ்ட்ரேலியா, பிரேசில், வெனிசுலா, ஸ்பெயின், சிலி, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் பரவத்தொடங்கியது. அந்தந்த பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள், இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் செல்லத் தொடங்கியது. பொதுமக்களை கத்தி, கம்புகளை கொண்டு நிஜமாகவே தாக்கத்தொடங்கினர். பல இடங்களில் சிறு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கூட பயந்த நிகழ்வுகள் நடந்து இருந்தது. இதனால் சில பள்ளிகூடங்கள் 1 வாரம் 2 வாரம்னு விடுமுறை விடத்தொடன்கினர். இதற்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய பல நாட்டு காவல்துறை அதிகாரிகளும் ஒரு முடிவு செய்தனர்.

   CLOWN SIGHTINGS உடையில் நடமாடுபவர்களை உடனடியாக கைது செய்யப் படுவார்கள் என அறிக்கை விட்டனர். இதை தொடர்ந்து சிலரை கைதும் செய்தனர். இருந்தாலும் இந்த CLOWN SIGHTINGS குறையவில்லை, இதனால் இது போன்று CLOWN SIGHTINGS உடை அணிந்து வருபவர்களை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

   மேலும் நியுசிலாந்து போன்ற நாடுகளில் CLOWN SIGHTINGS உடைகளை அனைத்து கடைகளிலும் விற்பனை தடை செய்யப்பட்டது. மேலும் Online விற்பனையில் கூட இந்த உடைகள் தடை செய்யப்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக CLOWN SIGHTINGS செயல்கள் குறையத்தொடங்கியது.

   மீண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு தொடங்கினால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று சிறியதாக எண்ணிவிட முடியாது.

No comments:

Post a Comment