Sunday 21 October 2018

மரணம் அடைந்தால் மட்டுமே இதில் சேர முடியும்


    உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வெவேறு அமைப்பினரால் உருவாக்கப்பட்ட பல CLUB கள் செயல்பட்டு வருகிறது. அதில் விசித்திரமான CLUB களும் அடங்கும். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான CLUB தான் 27 CLUB. இதை பற்றிய ஒரு சுவார்ஸமான தகவல்களை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.


    இந்த உலகத்தில் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட மனிதர்கள் மூலமோ, அல்லது ஒரே துறையில் பணி புரிபவர்கள் மூலமோ, அவர்களுக்கென்றே ஒரு விதமான CLUB களை உருவாக்கிக் கொள்வார்கள். இந்த மாதிரியான சில CLUB களில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் ஒரு சில CLUB களில், அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சேர முடியும். இதில் பல வினோதமான CLUB களும் அடங்கும்.


    அப்படி பட்ட ஒரு CLUB தான் 27 CLUB. இசை கலைஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த 27 CLUB. மற்ற CLUB க்கும் இந்த 27 CLUBக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்த CLUBபில் 27 வயதுக்குள் இறந்து போன இசை கலைஞர்கள் மட்டுமே இடம் பிடிக்க முடியும். கேட்கவே விசித்திரமாக இருக்கிறது இல்லையா. இந்த CLUB தற்பொழுது ஆரம்பிக்க படவில்லை. 1930களில் இருந்தே 27 வயதில் இறந்து போன பல இசை கலைஞர்கள் இதில் இணைக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 1969 க்கும் 1971 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இசை துறையில் பெரிய ஆட்களாக இருந்த ப்ரையன் ஜோன்ஸ், ஜிம்மி ஹென்ரிக், ஜிம் ஒரிசன் உள்பட இந்த 3 பேரும் சரியாக 27 வது வயதில் மரணம் அடைந்ததன் மூலமாக இந்த CLUB மிகவும் பிரபலம் அடைந்தது.


    27 CLUB பில் இதுவரைக்கும், இது மாதிரியான சிறியதும், பெரியதுமான பல இசை கலைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இப்படி இறந்து போனவர்களில் சிலர் இயற்கை மரணம் மற்றும் கொலை செய்யப்பட்டும் இறந்துள்ளனர். ஆனால் ஒரு சில தகவலின்படி, இந்த CLUBபில் சேர வேண்டும் என்ற உறுதி கொண்ட சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். ஒரு கால கட்டத்தில் உளவியல் ரீதியான ஆய்வு ஓன்று நடத்த பட்டது. அதன்படி பார்த்தால், இசை கலைஞர்கள் பலரும், அவர்களின் வாழ்க்கையில் 20கள் மற்றும் 30கள் என்ற கால கட்டத்தை, ஒரு கடினமான கால கட்டமாக பார்க்கிறார்கள் எனவும், அதன் மூலம் ஏற்படுகின்ற மன உளவியல் மாற்றத்தினால் இந்த மாதிரியான தவறான முடிவுகள் எடுக்கிறார்கள் எனவும், அந்த முடிவு 27 வயதில் தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை எனவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவித்து உள்ளனர்.


    இந்த 27 CLUB பற்றி WIKIPEDIA விலும் ஒரு பக்கம் எழுதப்பட்டு உள்ளது. என்ன இருந்தாலும் ஒரு கால கட்டத்தில் வேடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகின்ற இந்த CLUBல் இப்போ வரைக்கும் தொடந்து உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு இருப்பது கண்டிப்பாக வருத்தம் அளிக்கும் விஷயம் தான்.

No comments:

Post a Comment