Wednesday 28 November 2018

2048 ல் இருந்து வந்த மனிதன்


   அதிகமான படங்களில் மற்றும் பல கோணங்களில் இந்த ஏலியன் மற்றும் Time Travel குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன. உலகின் பல்வேறு இடங்களை சேர்ந்த சிலர், நிஜமாகவே ஏலியன்களின் பறக்கும் தட்டுகளை கண்டுள்ளதாக தங்கள் தகவலையும் பதிவு செய்துள்ளனர். ஆனால் சென்ற மாதம், குடிபோதையில் கைதான ஒரு அமெரிக்கர் தான் 2048-ல் இருந்து வந்துள்ளவர் என்றும், அடுத்த வருடம், பூமிகள் மீது ஏலியன்கள் படையெடுக்கும் எனவும், ஆச்சரியமான தகவலை தெரிவித்துள்ளார்.

   அமெரிக்காவின் வையோமிங் என்ற பகுதியில் இருக்கும் நகரம் காஸ்பர், ஏறக்குறைய 60,000 பேர் வாழ்ந்து வரும் இந்த பகுதியில், குடிபோதையில் இருந்த ஒரு நபரை போலிஸார் கடந்த அக்டோபர் மாதம் முதல் திங்கள் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்ததால், BRAIN JOHNSON என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர். கைதான BRAIN JOHNSON அவர்கள், அதன்பிறகு கூறிய விஷயங்கள் தான், ஆச்சரியமாக இருந்தது.

   தான் 2048ல் இருந்து TIME TRAVEL மூலமாக 2018க்கு வந்துள்ளதாகவும், காஸ்பர் நகரில் அடுத்த வருடம், ஏலியன்கள் படையெடுப்பு நடக்கும் என்றும், இவர் கூறினார், காஸ்பர் நகரின் வானொலி நிலையமான KDWO அளித்த தகவலின் படி, பிடிபட்ட BRAIN JOHNSON, எதிர்காலமான 2048ல் இருந்து நிகழ்காலமான 2018க்கு வந்துள்ளதாகவும், அடுத்த வருடம் ஏலியன்கள் பூமியின் மீது படையெடுக்கும் என போலீசில் தகவல் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. போலீஸ் BRAIN JOHNSON அவர்களை கைது செய்யும் பொழுது, அவர் தெருவில் மக்களிடம், உடனே இந்த ஊரை காலி செய்து கொண்டு கிளம்பி விடுங்கள், ஏலியன்கள் நம் மீது தாக்கப்போகின்றன. நான் சொல்வதை நம்புங்கள் என, அனைவரிடமும் கெஞ்சிக்கொண்டு இருந்துள்ளார். மேலும் போலிசிடம், தன்னை அதிபரை காண அனுமதி வழங்குங்கள், நாம் அனைவரும் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருகின்றோம் என்றும் கூறினார்.

   பிறகு நீ ஏன் குடிபோதையில் இருகிறாய், என போலிஸார் BRAIN JOHNSON னிடம் கேட்டனர், அதற்கு BRAIN JOHNSON ஏலியன்கள் தான் என் வாயில் ஆல்கஹால் ஊற்றிவிட்டனர். அவர்கள் என்னை பெரிய பேடில் வைத்து இருந்தனர். அதில் இருந்து தான் time travel செய்து வந்தேன் என்று வித்தியாசமான பதிலை கூறியுள்ளார். இவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உறுதி செய்ய முடியாதது போலவே அமைந்துள்ளது.

No comments:

Post a Comment