Thursday 29 November 2018

9000 வருடங்களுக்கு பிறகு மறு உருவம் பெற்ற பெண்


   இன்றைய நவீன உலகில் அனைத்து துறைகளுமே புதியவற்றை கண்டுபிடிப்பது, அவற்றை உருவாக்குவது, பயன்படுத்துவது என ஓடிக்கொண்டே இருக்கும் இக்காலத்தில், சுமார் 9௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம் பெண், அதுவும் 2௦ வயதே கடந்த பெண்ணிற்கு மறு உருவம் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர் கிரேக்க ஆராய்ச்சியாளர்கள்.


   ஆச்சரியாமாக இருக்கிறதா, உண்மைதான். 9௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு உடலும் உயிருமாக வாழ்ந்த இளம்பெண், அவளின் உருவத்தை எலும்புகளின் எச்சங்களின் மூலம் கண்டறிந்து வடிவம் கொடுத்து இருக்கிறார்கள் கிரேக்க ஆராய்ச்சியாளர்கள். கிரேக்க நாட்டில் உள்ள கிளியோபாட்ரா குகையில், 1993ம் ஆண்டு, அந்த பழங்கால பருவ மங்கையின் படிவம் கிடைத்தன.


   முதலில் அவுக்கி என்று தான் பெயர் சூட்டினர், பின்னர் புதிய உதயமாக பல மாற்றங்களை சந்தித்த காலத்தை சேர்ந்தவள் என்பதால், டான் என பெயர் சூட்டினார்கள். அதாவது டான் என்றால் உதையும் என்று பொருளாம். நம் நாட்டில் இறந்த உடனேயே, பிணம் என்று சொல்லும் நிலையில், 9௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு மடிந்த நிலையில், இளம்பெண்ணுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்து இருக்கிறார்கள் கிரேக்கர்கள். தொன்மை படிமங்களாய் சிதைந்து அவளின் எலும்பு மற்றும் பற்களை ஆராய்ச்சி செய்ததில், டானுக்கு 15 முதல் 20 வயது இருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் அவளுடைய தாடை சற்று எடுப்பாகவும், முன்னோக்கி இருப்பதற்கு காரணம், அக்காலத்தில் மிருகங்களின் மாமிசத்தை நன்றாக கடித்து சாபிடவும், தாடை மற்றும் பல் அமைப்பு இருந்து இருக்க வேண்டும் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.


   டானுக்கு ரத்த சோகை, ஸ்கர்வி எனப்படும் ஈறுகளில் ரத்த கசிவு பிரச்சனையும் இருந்துள்ளது என ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும், இடுப்பு மற்றும் எலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், டான் இறுதி கால கட்டத்தில் நடக்க முடியாமல் இறந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். டானின் உருவத்தை வடிவமைத்த மானாளிஷ் பபகிரி கோரஷிடம், டான் ஏன் கோவமாக காட்சி அழிக்கிறார் என்று கேட்டதற்கு, அக்காலத்தில், வாழ்ந்ததற்கு கோவம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும் என்று வேடிக்கையாக பதில் கூறினார்.

No comments:

Post a Comment