Monday 10 December 2018

5௦௦௦ வருடங்கள் தீர்க்க முடியாத மர்மம்


    உலகத்தில் இருக்கும் பல மர்மமான விஷயங்களில், STONE HENGE முக்கியமான ஓன்று, தோராயமாக இதன் வயதை கணக்கிட்டால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இன்றைய ப்ரிட்டனனில் மிக பழமையான புராதான சின்னங்களில், இந்த STONE HENGE தான் முதலில் இருக்கிறது. STONE HENGE இங்கிலாந்தில் அமைந்துள்ளது. இது புதிய கற்கால மற்றும் வெண்கல காலத்தை சேர்ந்த நினைவு சின்னம் ஆகும். இதை பெருங்கற்கள் என்றும் அழைகிறார்கள்.

    ஏனென்றால் பெரிய பெரிய கற்கள் எல்லாம் வட்ட வடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த காலத்தை பற்றி பல்வேறு விவாதங்கள் இருந்தாலும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வுகள் எல்லாம். இது கி.மு. 2500க்கும் கி.மு. 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொல்பொருள் சின்னத்திலேயே மிகவும் பழமையாக கருதபடுகிறது.

    1986ல் UNESCOவால் உலக பாரம்பரிய இடமாக இந்த STONE HENGE அறிவிக்கப்பட்டது. இது பண்டைய கால தேசிய சின்னமாக இருப்பதால், சட்ட பூர்வமாக பாதுகாத்து வருகின்றனர். 2006ம் ஆண்டு நடைபெற்ற தொல்லியல் ஆவில், இது ஆரம்ப காலத்தில் இருந்தே ஒருவித கல்லறையாக இருந்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் இதன் தளத்தில் மனித எலும்பு கூடுகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மனித எலும்பு கூடுகள் அனைத்தும் கி.மு 3000 ஆண்டுகள் காலத்தை சேர்ந்தவையாக இருந்து இருக்கலாம் ஆய்வில் கூறுகின்றனர். இதன் கட்டுமானம் குறைந்தது 1500 ஆண்டுகள் நடந்து இருக்கும் என்று கருதுகின்றனர். அது மட்டும் இல்லாமல் அதை சுற்றி மிகப்பெரிய பல கட்டுமானங்கள் நடந்துள்ளது.

    இந்த STONE HENGE சை பார்க்க வேண்டும் என்று சென்றால் கூட, நாம் பல மலைகளை தாண்டி சென்று கொண்டிருப்போம். அப்படி செல்லும் போது திடீர் என்று இந்த அமானுஷ்ய இடத்திற்கு வந்து விடுவோம். இந்த இடத்திற்கு வந்த உடனே ஒரு மயான அமைதியும் வீசும் காற்றும், ஒரு வித வித்தியாசமாக இருக்கும். இது நமக்கு ஒரு மர்மான தாக்கத்தை கொடுக்கும். STONE HENGE எப்படி உருவாகி இருக்கும் என்று இப்பொழுது வரை சில ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளது.

    அந்த ஆராய்ச்சியின் கணிப்புகள் என்னவென்றால், கி.மு 3100ம் ஆண்டில் மத சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளக்கு பிறகு தான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. வெல்ஷ் மலைகளில் இருந்து பெரிய பெரிய கற்கள், கிட்டதட்ட 240 மைல்கல் தூரம் எடுத்து வரப்பட்டு உள்ளது. சக்கரம் கண்டுபிடிக்கபடாத காலத்தில் எதற்காக, யாரால், இந்த கற்கள் இவ்வளது தூரம் எடுத்து செல்லப்பட்டது என்று இன்னும் மர்மாமாக தான் உள்ளது. அப்படி எடுத்து வரப்பட்ட கற்கள் அனைத்தும் ஒரு முற்று பெறாத இரட்டை வட்ட வடிவில் சூரிய உதயத்திற்காக சீரமைக்கப்படுவது போல் நிறுத்த பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மூன்றாவது நிலையாக கி.மு.2000ம் ஆண்டில் மேலும் சில கற்கள் 25 மைல் தூரம் இருக்கும் இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

    சிலருடைய கருத்துகள் என்னவென்றால், இது ஒரு வழிபட்டு தளம் என்றும், வான் வெளி சம்மந்தப்பட்ட காலண்டர் என்றும், சுடுகாட்டு மானம் என்றும், ஒரு சிலர் பல கதைகளை கூறுகின்றனர். இப்படி பல்வேறு கதைகளை சொல்லபட்டாலும், இது இன்னும் தீர்க்கப்படாத ஒரு புதிர் தான்.

No comments:

Post a Comment