Friday 14 December 2018

ஓன்று சேர முடியாத இரண்டு கடல்கள்


   அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்காவில் உள்ளது இரண்டு நிறங்களில் காணப்படும் ஆச்சரியம் நிறைந்த கடலான அலாஸ்கா வளைகுடா. பலரும் இதை இரண்டு கடல்கள் சந்திக்கும் இடம் என்று நினைகின்றனர். ஆனால் இது இரண்டு கடல்கள் ஓன்று சேரும் இடம் கிடையாது, மாறாக இரண்டு நீர் நிலைகள் ஓன்று சேரும் இடம். அதாவது அலாஸ்காவின் மலைகளில் உள்ள பனி உருகி நன்னீராக ஆற்றின் மூலமாக இந்த அலாஸ்காவின் வளைகுடாவிற்கு கலப்பது தான் இந்த வினோத நிகழ்வுக்கு காரணம்.


   அலாஸ்காவில் பல மாபெரும் பனி ஆறுகள் உள்ளன. அதில் ஓன்று சுமார் 466 கிலோமீட்டர் நீளம் கொண்டது தான் copper river. இந்த ஆறுகளின் மூலமாக உருகிய பனி நீர் மற்றும் அதிக அளவிலான களிமண் படிமங்களும் அலாஸ்காவின் வளைகுடா வந்து கலைகிறது. இதனால் இந்த உருகிய பனி நீரானது, கடல் நீருக்கும் இடையே உள்ள மிக அதிக அளவிலான அடர்த்தி மற்றும் உப்பு தன்மை வேறுபாட்டினால் தான் இந்த இரண்டு நீர்களும் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் உள்ளது. அதாவது இரண்டு வெவ்வேறு அடர்த்தி கொண்ட என்னையும் நீரும், ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருப்பது போல.


   இதற்கு மற்றொரு ஆதாரமாக இஸ்ரேளில் உள்ள death sea என்னும் கடலை சொல்லலாம். இந்த கடலில் உள்ள உப்பு தன்மையின் அளவானது மற்ற கடல்களைவிட 8.6 மடங்கு அதிகமாக உள்ளதால் மனிதர்கள் மற்றும் மற்ற உயிரனங்களால் இக்கடலில் சாதரணமாக மிதக்க முடியும். இந்த அலாஸ்கா வளைகுடாவில், கருநீல நிறத்தில் உள்ளது கடல் நீர் ஆகும். வெளிறிய நீல நிறத்தில் உள்ளது உருகிய பனி நீர் ஆகும்.


   இந்த நிற மாற்றத்திற்கு காரணமும், இந்நீரில் அதிக அளவில் கலந்துள்ள களிமண் கலவை தான். மேலும் இந்த இரண்டு நீர்களும், ஒன்றுடன் ஓன்று கலக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இந்த இரண்டு நீர் நிலைகளும், இணையும் இடத்தில் உள்ள அதிக அடர்த்தி காரணமாக மற்ற நீர் நிலைகள் கலக்கும் வேகத்தைவிட மிக மிக குறைந்த வேகத்தில் ஒன்றுக்கொன்று கலந்து பின் பரவிவிடுகிறது.


   இதனை இரண்டு நீரும் சேரும் இடத்தில் உள்ள நீரின் நிற மாற்றத்தை வைத்து அறியலாம். இந்த காரணங்களால் தான் அலாஸ்காவில் உள்ள கடல் வெவ்வேறு நேரத்திலும் ஒன்றுடன் ஓன்று முற்றிலுமாக கலந்துவிடாமலும் உள்ளது.

No comments:

Post a Comment