Sunday 23 December 2018

மது பானங்கள் ஐஸ் கட்டியாக உறைவதில்லை ஏன் தெரியுமா ?


   பீர், ஒய்ன், பிராந்தி, விஸ்கி, உள்ளிட்ட போதை சமாச்சாரங்களை எவ்வளவு தான் குளிர்வித்தாலும் அவை உறைந்து போகாமல், நீர்ம நிலையிலேயே இருப்பதை கண்டு மது பிரியர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள். மது பானங்கள் உறைந்து ஐஸ் கட்டியாக மாறினால், அதில் ஒரு குச்சியை சொருகி ஜாலியாக சப்பி சாப்பிடலாம். ஆனால் அவை ஏனோ உறைவதில்லை என்ற கவலை கூட சில மது பிரியர்களுக்கு உண்டு. மது பழக்கம் அறவே இல்லாத நீங்கள் கூட மது பானங்கள உறையாமல் இருக்க காரணத்தை அறிய ஆர்வமாக இருப்பீர்கள்.


   உண்மையில் மது பானங்களை உறைய வைக்கவே முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். ஆனால் அவற்றை நம் வீடுகளிலும் கடைகளிலும் இருக்கும் சாதாரண குளிர்சாதன பெட்டிகளை கொண்டு உறைய வைக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு வகை மது பானமும் ஓர் உரை நிலையை கொண்டுள்ளது. அதாவது ஒரு மது பானத்தில் கலந்திருக்கும் எத்தனால் அல்லது எதின் ஆல்ககால் வேதியல் சேர்மத்தின் அளவை பொறுத்து உரை நிலை மாறுபடுகிறது. சுத்தமான எத்தனாலை உறை நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால், அதனை -114 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவிற்கு குளிர்விக்க வேண்டும்.


   ஆனால் நாம் பரவலாக பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகள் அதிகபட்சமாக -23 டிகிரி செல்சியஸ் முதல் -18 டிகிரி செல்சியஸ் வரையில் மட்டுமே குளிர்விக்க முடியும். எனவே நாம் வழக்கமாக பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து நாம் எத்தனாலை எவ்வளவு தான் குளிர்வித்தாலும் அது உறையாமல் நீர்ம நிலையில் தான் இருக்கும். எனவே, ஒரு மது பானத்தில் ஆல்ககாளின் சேர்மம் அதிகரிக்கும் பொது அதன் உரை நிலை குறைவாக இருக்கும் ஆகையால், ௦ டிகிரி வெப்ப நிலையில் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகி விடுவதை போல வோட்கா, பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட போதை வஸ்துகள் உறைந்து விடுவதில்லை. ஏனென்றால், டிஸ்டில்ட் லிக்கர் எனப்படும் ஜின், வோட்கா, விஸ்கி, பிராந்தி உள்ளிட்டவைகளில் 40 சதவீதம் அளவிலும் அல்லது அதற்கு மேலும். ஆல்ககால் கலந்து இருப்பதால் சாதராண குளிர்சாதன பெட்டிகளால் இவற்றை உறைய வைக்க முடியாது.


   ஆனால் பீரில் 4 முதல் 12 சதவீதம் எனவும் ஒய்னில் 12 முதல் 15 சதவீதம் எனவும் ஆல்ககாளின் சதவீதம் குறைவாக இருப்பதால் அவற்றை சாதாரண குளிர்சாதன பெட்டியை கொண்டே உறைய வைக்க முடியும். அவ்வாறு உறைய வைக்கும் பொது திறக்கபடாத பீர் மற்றும் ஒய்ன் பாட்டில்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனென்றால் உறையும் பொது பாட்டிலுக்குள் இருக்கும் திரவத்தில் அழுத்தம் மற்றும் விரிவாக்கம் ஏற்படுவதால் பாட்டில் வெடித்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே நீங்கள் 5 சதவீதம் அளவில் ஆல்ககால் கலந்த ஒரு பீரை உறைய வைக்க -3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குளிர்விக்க வேண்டும். ஒய்னை உறைய வைக்க -6.7 டிகிரி அளவிலான வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும் 40 சதவீதம் அளவில் ஆல்ககால் கலந்து இருக்கும் வோட்கா, விஸ்கி, பிராந்தி உள்ளிட்டவைகளை உறைய வைக்க -27 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர்விக்க வேண்டும்.

No comments:

Post a Comment