Wednesday 1 April 2020

குழந்தைகளை கருவிலேயே அறிவாளியாக்க முடியுமா?


     குழந்தையின் குணநலன்கள் தாயைப் பொறுத்தே அமையும் என்பார்கள். இப்போது குழந்தையின் அறிவும் தாயை பொறுத்தே அமையும் என்கிறார்கள், ஆய்வாளர்கள். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே" என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. இது நூறு சதவீதம் உண்மை என்கிறார்கள், தற்போது ஆய்வு நடத்தியுள்ள ஆராய்ச்சியாளர்கள்.

     ஆணின் உயிர் அணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்து தான் ஓர் உயிர் உருவாகிறது. இருந்தாலும் அந்த உயிர் தாயின் கருப்பையில் தான் வளர்ச்சி பெற்று முழுஉருவம் அடைகிறது. இதன் மூலம் அந்த உயிர் உருவாகும்போதே தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. சுமார் 1௦ மாதங்கள் தாயின் கருவறையில் குழந்தை வளர்கிறது. அந்த 1௦ மாதங்களில், கருவுற்றவுடன் அறிவுபூர்வமான விஷயங்களை அதிகம் படித்தாலும், பேசினாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதுவே அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக உருவாக்கும். கர்ப்ப காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்கிறார்கள்.

    ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, எப்படி நினைக்கிறாளோ அந்த எண்ணங்கள் தான் குழந்தையை உருவாக்குகின்றன. அதனால் தாய் கர்ப்பகாலத்தில் எவ்வளவு விஷயங்களை தேடித் தேடிப் படித்து தன்னை ஓர் அறிவுப் பொக்கிஷமாக மாற்றுகிறாளோ அந்த அளவுக்கு அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப் பூர்வமாகவே பிறக்கும். அதனால் அறிவான தலைமுறையை உருவாக்குவது பெண்ணின் கையில்தான் உள்ளது, என்கிறது அந்த ஆய்வு.

No comments:

Post a Comment