Monday 20 July 2020

காலனி நாட்டுக்காக உடலை கொடுத்த பெண்கள்

    மனித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்கு தான் எத்தனை துன்பங்கள். இன்றைக்கு வேண்டுமென்றால் பெண்கள் சம உரிமை பெற்று இருக்கலாம். ஆனால் சரித்திர காலங்களில், பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் COMFORT பெண்கள்.

   பொதுவாக வருடங்கள் பல உருண்டோடும் போ\து எப்படி பட்ட பெரிய பிரச்சனையும் மறைந்து போய்விடும் என்பது நடைமுறை உண்மை. ஆனால் 50 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது என்றால் அதை நம்புவது கொஞ்சம் சிரமம் தான். 2002 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெறும் நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் இருந்தது. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து அந்த போட்டிகளை நடத்தின ஜப்பானும் தென்கொரியாவும், இந்தியா பாகிஸ்தான் போல. உள்ளுக்குள் பகையை வைத்துக்கொண்டு வெளியே நட்பை பாராட்டி கொள்ளும் நாடுகள்.
   போட்டிக்கான முன் ஏற்பாடுகள் இரு நாடுகளிலும் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்த போது, தென் கோரிய தொலைக்காட்சி ஓன்று விபரீதமான பேட்டி ஒன்றை ஒளிபரப்பியது. அந்த பேட்டி கிட்டதட்ட 50 வருட அமுங்கி கிடந்த பிரச்சனையை தடாலென்று விஸ்வரூபம் எடுக்க வைத்தது. கிம்ஷாசி என்ற 75 வயது பெண்ணுடைய பேட்டி தான் கொரியர்களை கொதிக்க வைத்தது. இரண்டாம் போர் உச்சகட்ட நேரத்தில் இருந்த போது நடந்த சம்பவம் தான் அது. அப்போதைக்கு 20 வயதை கூட எட்டாத கண்ணிப்பெண்.  சீனாவை ஜப்பான் ஆக்கிரமித்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து போர்க்களத்தில், வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும். பீரங்கிகளையும், போர் விமானங்களையும் பார்த்து பார்த்து அலுத்துபோய் களைப்படைந்த ராணுவ வீரர்களுக்கு உடலும், மனசும் வேறு ஒரு இன்பத்திற்காக ஏங்கியது. அதை ஏக்கம் என்று சொல்வதை விட வெறி என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

   அது பெண்ணுக்காக ஏக்கம். தொடர்ந்து போர்களத்திலேயே போர் புரியும் போர் வீரர்களின் உடல் பசியை தீர்த்து வைக்க பெண்கள் தேவைபட்டார்கள். அதற்காக ஜப்பான் ராணுவம் COMFORT STATION என்ற முகாம்களை உருவாக்கியது. 1932ம் ஆண்டு தாங்கா என்னும் இடத்தில் முதல் முதலில், முதல் COMFORT STATION ஏற்படுத்தப்பட்டது. தமிழில் சொல்வதென்றால், ஆறுதல் அளிக்கும் முகாம். இங்கு ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் அளிக்க விலை மாதர்கள் வரவழைக்கபட்டனர்.

   ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் அதற்கேற்ப விலை மாதர்களும் இல்லை. அதனால் இராணுவத்துக்கும். வேறு வழி தெரியவில்லை. நாளிதழ்களில் சேவை மனதோடு ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் அளிக்க இளம் பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்தது. அதன் மூலம் சில பெண்கள் வந்தார்கள். அதுவும் போதவில்லை. வேறு வழி இல்லாமல் இளம்பெண்களை வலுகட்டாயமாக கடத்திக்கொண்டு வந்தார்கள். ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களுக்கு அவர்களின் காலனி நாடுகளாக இருந்த கொரியா, தைவான், சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டு பெண்கள் விருந்தாக்கப்பட்டார்கள்.
   இப்படி கடத்தப்பட்ட பெண்களும் ராணுவ வீரர்களை விட குறைவாகவே இருந்தார்கள். பல பெண்கள் ஒய்வு இல்லாமல் வேறு வேறு ராணுவ வீரர்களுடன் பாலியல் தொல்லைக்கு ஆளாகினர். மென்மையும் பலவீனமும் நிறைந்த பெண்கள், வெறி தனமான இந்த பலாத்காரத்தை தக்குபிடிக்கமுடியாமல், உயிரிழந்தனர். அப்படியும் கூட விடாமல் பிணத்தை கற்பழித்த கொடுரமும் நடந்து இருக்கிறது. இப்படி ராணுவ வீரர்களுக்காக உடலை கொடுத்த பெண்களுக்கு COMFORT WOMEN என்று பெயர் கொடுத்தார்கள். தமிழில் ஆறுதல் அளிக்கும் பெண்கள் என்று அர்த்தம்.

   இந்த COMFORT பெண்களில் ஒருவர் தான் கிங்க்சாங்கி. எங்களின் வாழ்வை சூறையாடியதற்காக ஜப்பானிய அரசு எங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும். அது மட்டும் அல்ல. ஜப்பான் பிரதமர். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் ஜப்பான் அரசு COMFORT பெண்களை ஒரு புழுவை போல தான் பார்த்தது. மிகப்பெரிய தயக்கத்துக்கு பிறகு, ஜப்பானிய பிரதமர் COMFORT பெண்களிடம் பொது மன்னிப்பு கேட்டார்.

No comments:

Post a Comment