Tuesday 21 July 2020

அடிக்காமல், வலிக்காமல் ஒரு விசாரணை


   மரணம் நெருங்குகிறது என்றால் ஒரு குற்றவாளி என்ன செய்வான்? உயிர் பிழைக்க எல்லா உண்மைகளையும் ஒப்புகொள்வான். அதற்காக ஒவ்வொரு குற்றவாளி கழுத்திலும் கத்தி வைத்தால் சட்டம் ஒத்துகொள்ளுமா?, அதோடு கத்தியால் குத்தப்படும் வரை அது சம்பந்தமான பயத்தை குற்றவாளிக்கு ஏற்படுத்த முடியாது. குத்தினால் குற்றவாளியின் உயிருக்கு ஆபத்து. இப்படி பல விஷயங்களையும் யோசித்து ஒரு முறையை கண்டுபிடித்தார் ஜான்சி.லில்லி என்ற டாக்டர். 1954-ல் இவர் கண்டுபிடித்த இந்த முறைக்கு சென்சரி டெப்ரிவேஷன் என்று பெயர்.

   தான் இறக்கபோகிறோம் என்ற நம்பிக்கையை முழுதாக குற்றவாளிக்கு தருவதன் மூலம் அவனிடம் இருந்து உண்மைகளை பெரும் இந்த முறையை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் பயன்படுத்தி வருகிறது. ஆளுயர நீர்த்தொட்டிகள் தான் இந்த சென்சரி டெப்ரிவேஷன் தொட்டிகள்.
இந்த தொட்டிக்குள் குற்றவாளிகளை நிர்வாணமாக உள்ளே தள்ளி மூடிவிடுவார்கள். பின்னர் தண்ணீர் திறந்து விடப்படும். தொட்டிக்குள் மெல்ல மெல்ல நீர்மட்டம் உயரும். நீரில் மூழ்கி இறக்கப்போகிறோம் என்ற பயம் குற்றவாளிக்கு தோன்றும்.
   அப்போது கேட்கும் கேள்விகளுக்கு தானாக பதில் வந்துவிடும். ஆனால் எல்லா குற்றவாளிகளும் இப்படி இருபதில்லை. சிலர் செத்தாலும் பரவாயில்லை. உண்மையை சொல்ல கூடாது என்று முரண்டு பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நீர் நிறைந்து கொண்டே இருக்கும். தலைபகுதியும் நீருக்குள் மூழ்கி விடும். அப்புறம் என்ன மரணம் தான் என்கிறீர்களா? அது தான் இல்லை. இந்த நீரில் பெர்ப்ளுரோ கார்பன் என்ற வேதி பொருள் கலந்து இருக்கும். இதனால் நீருக்குள் நம் நுரையிரல் சுவாசித்துக் கொண்டே இருக்கும். ஆனால், “மூளையோ நீரில் மூழ்கி இறக்க போகிறோம்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.

   அதோடு கேட்கும் திறன், தோடு உணர்ச்சி, பார்க்கும் திறன், நுகரும் திறன் இவை அனைத்தும் தற்காலிகமாக மறைந்து போகும். இந்த நீரில் இருக்கும் எப்சம் உப்பு, நம் உடலை இறந்த உடல் போல் மிதக்க வைக்கும். இதனால் குற்றவாளியின் மனம் தான் இறந்து விட்டதாகவே நினைக்கும். பத்து நிமிடங்கள் கழித்து தொட்டியை திறக்கும் போது, தான் உயிரோடு இருக்கிறோமா, இல்லையா என்பதே குற்றவாளிக்கு தெரியாது. கிட்டத்தட்ட இது மறுபிறவி விசாரணை தான்.
  இந்த முறையில் எல்லா குற்றவாளிகளும் உண்மையை ஒத்துக்கொள்கிறார்கள். உடலை எந்தவிதத்திலும் துன்புறுத்தாமல் மனதை மட்டும் பதற வைக்கும், மரண பயத்தை ஏற்படுத்தும் இந்த முறை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் விசாரணை என்ற பெயரில் நிரபராதிகளை ஊனமக்கிவிடும் கொடுமை மறைந்து போகும் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. நமது காவல்துறையும் இத்தகைய நவீன முறைகளில் குற்றவாளிகளை விசாரணை செய்தால் தேவையற்ற லாக்-அப் மரணங்கள் தவிர்கபடும்.

1 comment:

  1. My opinion is put the person in a separate room. Do not give anything to eat except water. Follow this for several days till he tell the truth,

    ReplyDelete