Thursday 22 October 2020

கின்னஸ் புத்தகம் உருவானது எப்படி தெரியுமா ?

     இன்று உலகின் மிகப்பெரிய சாதனை புத்தகமாக கின்னஸ் புத்தம், எப்படி உருவானது என்ற வரலாறு நம்மில் பலருக்கும் தெரியாது தான். இந்த கின்னஸ் புத்தம் பற்றிய சில தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

     அயர்லாந்து நாட்டை சேர்ந்த கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குனராக இருந்தவர் "சர்க்யூ பீவர்", இவர் ஒரு நாள் மாலை நேரத்தில் 1951 வது வருடம், வேட்டையாடுவதற்காக ஒரு நதிக்கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது வானத்தில் ஒரு நீண்ட கோடு போல அதிகமான பறவைகள் பறந்து சென்றுகொண்டிருந்தது. அவர் உடனே அவரை சுட எண்ணி, குனிந்து தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார். ஆனால் அதற்குள் அந்த பறவை கூட்டம் கண்ணுக்கு எட்டாத தூரம் சென்று விட்டது. இதை கண்டு வியப்பில் உறைந்து போனார் "சர்க்யூ பீவர்". என்ன ஒரு வேகம், 'கோல்டன் பிளவர் ' என்ற பறவை இனம் தான் அது. 

     அப்போது தான் அவருக்கு ஒரு சிந்தனை வந்தது. ஒரு வேலை உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவை இனம் இதுவாக தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களில் விடை தேடினார். 

     பிறகு இது குறித்து நாமே ஒரு புத்தகம் எழுதினால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்குக்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும், நோரிஸ் மைக் வைக்ட்டர் மற்றும் ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்களை சந்தித்தார். அவர்களிடம் தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்பு தர முன் வந்தனர். இந்த மூவரின் உழைப்பில் பிறந்தது தான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி 198 பக்கங்களுடன் வெளிவந்தது. 

   உலகிலேயே மிகவும் பெரியது, மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. மேலும் அந்த ஆண்டு வெளியான புத்தகங்களில் அதிகம் விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்தது. 

   அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிபவர்கள் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளி வந்தது. தொடர்ந்து ஆண்டு தோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையி 1957 மற்றும் 1959 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டும் வெளிவரவில்லை.

     சாதனையாளர்களின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மை தான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின்  தலைவர் வழங்கும் உறுதிமொழி. இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்திய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால், அந்த செய்தியும், சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனைகளை வெளியிடுவார்கள் தவிர சாதனை புரிய தூண்ட மாட்டார்கள். 

    கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974 இடம்பெற்றுள்ளது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான  புத்தகம் என்ற வரிசையில் தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த கின்னஸ் புத்தகம், விரைவி மேலும் 35 மொழிகளில் வெளிவந்தது. 

No comments:

Post a Comment