Tuesday 1 December 2020

தூதுவளை இலையின் பயன்கள்

     இலை, கோளையகற்றும், உடல் தேற்றி காமம் பெருக்கும், பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் - பசியை தூண்டி மலசிக்கலை அகற்றும். பழம் கோளையகற்றும். தூதுவளை இலையில் இருந்து எடுத்த சாற்றை ஓன்று அல்லது இரண்டு துளிகள் காதில் விட்டால் காதுவலி, காதில் சீல் வடிதல் குணமாகும். 
 

     இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாகவோ சாபிட்டு வந்தால், கபம் கட்டு நீங்கி, உடல் பலமும், அறிவும், தெளிவும் உண்டாகும். இலை சாறுடன் சம அளவு நெய் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சாபிட்டு வந்தால் மார்பு சளி நீங்கும்.

 


     காயை உலர்த்தி தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றில் பதபடுத்தி எண்ணையில் வறுத்து உண்டு வந்தால், பைத்தியம், இதய பலவீனம், மலசிக்கல் நீங்கும். வேர், இலை, பூ, காய் ஆகிய நான்கையும் 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாக காய்ச்சி, காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காச சளி ஆகியவை தீரும்.

 

    நாள்தோறும் 10 பூ எடுத்து பாலில் இட்டு காய்ச்சி, சர்க்கரை கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருகி வந்தால், உடல் பலமும், முக வசீகரமும், அழகும் பெறலாம். தூதுவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் இட்டு 8-ல் ஒன்றாக காய்ச்சி (தூதுவேளை குடிநீர்) ஒரு மணிக்கு ஒரு முறை 5 மி.லி முதல் 1௦ மி.லி வரை கொடுத்து வந்தால் கப வாத சுரம் (நிமோனியா), சன்னி வாத சுரம் (டைபாய்டு) குறையும்.

 


   தூதுவளை இலையில் ரசம் வைத்து சாபிடலாம், தூதுவளை தோசை சாபிடலாம், தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.

 

தூதுவளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 5௦௦ மி.லி தண்ணீர் ஊற்றி 1௦௦ மி.லி ஆக சுண்ட வைத்துச் சாபிட்டால் ஆஸ்துமா குணமாகும். மற்றும் தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளை குணபடுத்தும்.

No comments:

Post a Comment