Wednesday 16 December 2020

துளசி - இயற்கை முறை கருத்தடை சாதனம்

     இந்த துளசி தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்களுக்கும் பயன்படுத்துகின்றனர். துளசியில் கசாயம் இட்டும், சூரணம் செய்து சாபிடலாம். இருமல், சளி, ஜலதோஷம், தொற்று நீக்கி மற்றும் கிருமி நாசினியாக செயல்படுவதோடு மட்டும் அல்லாமல் பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுபடுத்தும் ஆற்றல் உடையதாக உள்ளது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி, கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றும் தன்மை உடையது. மேலும், வியர்வையை அதிகமாக பெருக்க கூடிய தன்மையும் கொண்டது தான் இந்த துளசி.

     இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை கலைவதற்கு துளசி சாருடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் விரைவில் குணமாகும். உடம்பில் ஏற்படும் கொப்பளங்களுக்கு, துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி ஒரு மிக சிறந்த நிவாரணி.

     இலைகளை பிட்டஅவியலாய் அவித்து, சாறு எடுத்து 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலபடுத்தும். தாய் பாலையும் அதிகரிக்கும். இலை கதிர்களுடன் வாட்டி சாறு பிழிந்து எடுத்து காலை மாலை என 2 துளி காதில் விட்டு வந்தால், 10 நாட்களில் காது மந்தம் சரியாகும்.

     மழை காலத்தில் துளசி இலையை தேநீர் போல காய்ச்சி குடித்து வந்தால், மலேரியா, விஷ காய்ச்சல் போன்றவை வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகின்றவர்கள், துளசி இலையை கசாயம் செய்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

     பேன் தொல்லை நீங்க, துளசி இலையை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால், பேன் தொல்லை நீங்கும்.

     துளசி இலையை இடித்து பிழிந்த சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டு காயங்களுக்கு துளசி இல்லை சாறை பூசி வந்தால், அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலை கொத்துகளை கட்டி வைத்தாலோ, வீட்டை சுற்றி துளசி செடிகளை நட்டு வைத்தாலோ, கொசு வராது.

     துளசி இல்லை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும், வளர்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு, நம்மை பல நோய்களில் இருந்து காக்கிறது. இந்த துளசி இலை, எளிமையான இயற்கை முறை கருத்தடை சாதனமாகவும் பயன்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவுள்ள துளசி இலையை ஆணோ அல்லது பெண்ணோ இருவரும் சாப்பிட்டு வந்தால், ஆறு மாதத்திற்கு பிறகு கருத்தரிக்காது.

துளசியின் வேறு பெயர்கள்:

துழாய், திவ்யா, ப்ரியா, துளவம், மாலலங்கள், விஷ்ணுப்ரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி.

துளசியின் இனங்கள் :

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முல்துளசி, நாய்த்துளசி, (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

     வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குருமண் மற்றும் செம்மண், வண்டல் மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், கற்பூர மனம் பொருந்திய இலைகளையும், கதிராக வளர்த்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டு குச்சி மூலம் பயிர் பெருக்கம் செய்ய முடியும். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி வரை இருக்கலாம்.

No comments:

Post a Comment