Thursday 14 January 2021

ராஜ ராஜ சோழனை கொலை செய்தது யார் ?

     ராஜேந்திர சோழனுக்கு முடி சூட்டிய சில நாட்கள் கழித்து, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனை வடக்கு நோக்கி படையெடுக்க ஆணையிட்டார். மேலும், தன்னுடைய வாழ்நாளில் மானிய கேடம் என்ற நாட்டை பிடிபதற்கு, மிகவும் முயன்ற என்னால், வெற்றி பெற முடியவில்லை. என்னால் முடியாததை, நீ மானிய கேடத்தை கைப்பற்றி என்னுடைய லட்சிய கனவை நிறைவேற்ற வேண்டும் ராஜேந்திரா. அதுவரை நான் அரண்மனை வரமாட்டேன் என்று ராஜா ராஜா சோழன், ராஜேந்திர சோழனிடம் சபதம் செய்ததாகவும், அதன் படி தஞ்சை அரண்மனையில் வாழாமல், ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் இருந்தார் என்பதை செய்திகள் தெரிவிக்கின்றன.

     இராஜேந்திர சோழன், ராஜ ராஜ சோழனிடம் ஆசி பெற்று ஒரு முகூர்த்த நாளில் வடக்கு நோக்கி பயணித்தான். ஒரு மாத இடைவேளைக்கு பிறகு ராஜேந்திர சோழன் தன்னுடைய படையெடுப்பு தொடக்கத்தில் கோதாவரி நதி கரை வரை சென்று தங்கினான். அதன் பின்னர் தன்னுடைய படை தளபதியான பள்ளவராயனை மட்டும் வடக்கு நோக்கி அனுப்பினான். ஆனால் வட நாட்டு மன்னர்கள், குறிப்பாக கலிங்கம், தற்பொழுது அது ஆந்த்ரா, கர்னாடக மாநிலங்களின் வடபகுதி ஒட்ட நாடு அதாவது ஓடிஸா, மற்றும் குறுநில மன்னர்களுடன் சேர்ந்து, ராஜேந்திர சோழனை தீவிரமாக எதிர்ப்பது என்று முடிவு செய்தனர். 

     சோழநாட்டில் இருந்து வேங்கை நாட்டின் மீது அடிக்கடி படையெடுப்பது அவர்கள் சற்றும் விரும்பவில்லை. வேங்கை நாடு, வட நாட்டுக்கு ஒரு திறவு கோலாக இருந்த காரணத்தால், சோழர்கள் அதை தன் வசம் வைத்திருக்கவே விரும்பினர். கீழ சாளுக்கிய நாடும் அதற்கு ஓரளவு உதவியது. ஆனால் மேலே சாளுக்கிய மன்னர்கள் தீவிரமாக எதிர்த்தனர். எனவே அவர்கள் ஒட்ட நாடு, கலிங்கம், கங்க நாடு போன்ற பல நாடுகளை வென்று விட்டு, ஒரு பெரும்படையை திரட்டி இராஜேந்திர சோழனை, போரில் எதிர்கொள்வது என முழு மூச்சுடன் இறங்கினர்.

      இதை கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன், கோதாவரி நதி கரையில் தங்குவதை விட்டுவிட்டு. தன்னுடைய படைகளுக்கு தானே தலைமை ஏற்றான். மேலும், சேர நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த தனது மகன், அதாவது, ராஜேந்திர சோழனின் மகனும், ராஜ ராஜ சோழனின் பேரனும், சோழ கேரனை போர் முனைக்கு வர சொல்லி ஆணையிட்டான் ராஜேந்திர சோழன். அவனும் பெரும் படைகளுடன் வந்து சேர்ந்தான். பூட்டிய இரும்பு கூண்டில் புறப்பட்ட புலி போல், ராஜேந்திர சோழனின் இரு பெரும் படைகளும் புறப்பட்டன. முதலில் சக்கர கோட்டம், அப்புறம் ஒட்ட நாடு, ஆகியவற்றை தன்னுடைய வாளின் வலிமையால் வென்றான்.

     வங்க நாட்டு மன்னன் மகி பாலனை போர் முனையில் சந்திக்க ஆயுத்தமானான். ஆயினும் மகி பாலன் அமைதி வேண்டியதால், இருவரும் நண்பர் ஆயின என்று ஒரு வரலாற்று செய்திகள் உள்ளது. அடுத்து தன் தந்தை, ராஜ ராஜ சோழன் ஆசைப்பட்ட மானிய கேடத்தை தாக்க தயாராகினான். இரு பெரும் படைகளும் போர் புரிந்தன. மூன்றாவது நாள் போரில் தனது மகன் சோழ கேரனை இழந்தான் ராஜேந்திர சோழன். மானிய கேடம் படைகள் மூன்றரை லட்சம் போர் வீரர்களை கொண்டது. தன் கண் முன்னாள் துடிதுடித்து இறந்ததை கண்ட இராஜேந்திர சோழன் மனம் கலங்கினான். இராஜேந்திர சோழனின் படைகளோ 3 லட்சம் வீரர்களை கொண்டது. மானிய கேடைய மன்னனிடம் தோல்வியை தழுவி பின் வாங்கினான் இராஜேந்திர சோழன்.

     மானிய கேடம் தோல்வியை, எந்த கல்வெட்டிலும், செப்பெடுகளிலும் பதியவில்லை. எப்படி பதிவு செய்வார்கள் தோல்வியை. ஆனால் மானிய கேடம் நாட்டில் உள்ள சில கல்வெட்டுகளில் இராஜேந்திர சோழனின் தோல்வியை பற்றி உறுதி செய்கிறது. இராஜேந்திர சோழன் முதலும் கடைசியுமாக தோல்வியை தழுவிய நாடு மானிய கேடம் தான். இதற்கு பிறகு எல்லா நாடுகளையும் வென்றான். சங்கர கோட்டம், மதுர மண்டலம், பஞ்சப்பள்ளி, மானி தேசம், ஆதி நகர், ஒட்ட தேசம், பிராமணர்கள் நிறைந்திருந்த கோசல நாடு, தண்ட புத்தி இப்படி பல வெற்றிகளை கண்டான் இராஜேந்திர சோழன். எனினும் மானிய கேடத்தை மீண்டும் தாக்கலாம் என திட்டம் தீட்டிய பொழுது, பள்ளவரயனும், கிருஷ்ண ராய பிரம்ம தேவனும், மேற்கே பல சிக்கல்கள் இருப்பதாக சொன்னதையும், செய்தி வந்ததையும் அடுத்து, அத்திட்டத்தை கை விட்டான் இராஜேந்திர சோழன்.

      மானிய கேடத்தை தன்னுடைய தந்தை ராஜ ராஜ சோழனாலும், தன்னாலும் கைப்பற்ற முடியவில்லை என்ற கவலையாலும், தன் மகன் சோழ கேரனை இழந்த தவிப்பும், மானிய கேடம் கை நழுவி போன தவிப்பும், ராஜேந்திர சோழனை வாட்டி வதைத்தது. இவர்கள் மேற்கே புறப்பட தயாரான நேரத்தில் தான் இந்தியாவின் வட மேற்கில் இருந்து, மற்றொரு படையெடுப்பு வந்துகொண்டு இருந்தது. ஆம் அதுவே, கஜினி முகம்மது படையெடுப்பு ஆகும். கஜினி முகமது படையெடுத்து வந்து சோமநாதபுர கோவிலை இடித்து எரியுட்டி, கொள்ளையடித்து சென்ற துயரம் அப்பொழுது நடந்தது. ஆனால் இது ராஜேந்திர சோழர்களின் கவனத்துக்கு வந்ததாக சான்றுகள் எதுவும் இல்லை.

     எனினும், தெற்கில் இருந்த இந்த குழப்ப நிலையை கருத்தில் கொண்டு, மகனை இழந்த சோகத்தாலும் ராஜேந்திர சோழன் கங்கை நதி கறையோடு தன்னுடைய படையெடுப்பை நிறுத்தி கொண்டான். அவனும் அவனுடைய மூணு லட்சம் படைவீரர்களும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சையை நோக்கி புறப்பட தயாராகினர். தன் மகன் சோழ கேரணனின் இழப்பும், மானிய கேடம் வெற்றி கை நழுவி போன விதமும், ராஜேந்திர சோழ மன்னனின் மனதில் அனல் தீயாய் வீசியது. தன் தந்தை, ராஜ ராஜ சோழன் செய்த சவதம் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்கள் அவனுடைய கண்கள் சிவந்தன. என்ன பதில் சொல்வது என்று மனம் கலங்கினான் ராஜேந்திர சோழன். மானிய கேடத்தை கைப்பற்ற முடியவில்லை என்ற செய்தி ராஜேந்திர சோழன் தஞ்சைக்கு வருவதற்கு முன்பே, மானிய கேடம் தோல்வியும், பேரனின் மரண செய்தியும், ராஜ ராஜ சோழனுக்கு வந்து சேர்ந்தது.

     இராஜேந்திர சோழன் போர் முனைக்கு சென்று பல மாதங்கள் கடந்தும், ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளேயே பல மாதங்கள் இருந்தார். அவர் மனைவி பஞ்சமான் மாதேவி, பலமுறை அரண்மனைக்கு அழைத்தும் வர மறுத்தார் ராஜ ராஜ சோழன். ஒரு ஞாயிறு மதியம், ராஜ ராஜ சோழனின் மெய் காப்பாளன், ராஜேந்திர சோழனும் அவனுடைய படைகளும் தஞ்சையை நெருங்கி விட்டன என்ற செய்தியை கூறிவிட்டு சென்றான். செய்தியை கேட்ட ராஜ ராஜ சோழன், விறுவிறுவென்று பெரிய கோவிலின் முதல் மாடத்துக்கு சென்றான். மேற்கு நோக்கி பார்கையில், பெரும் புழுதி படலத்துடன், பொங்கி வரும் காவேரியில் பலாயிரம் மனித தலைகள் மிதந்து வருவது போன்று இருந்தது ராஜ ராஜ சோழனுக்கு. 

     3 லட்சம் வீரர்களுடன் படை சூழ இராஜேந்திர சோழன் வந்து கொண்டு இருந்தான். குதிரை கால்களின் குழப்படி சத்தம் வானத்தை பிளந்தது. சுமார் நான்கு மயில் தொலைவில் அவனுடைய படைகள் தஞ்சையை நோக்கி வந்துகொண்டு இருந்தன. எங்கு பார்த்தாலும், புழுதி படலம், அவர் மனதிலும் முகத்திலும், ஒரே நேரத்தில் ஒரு கம்பீரம் வந்து போய் மறைந்தன. ஒரு வழியாக சில மணி நேரங்களில், தஞ்சையை ஆண்ட அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் ராஜேந்திர சோழன். அரண்மனையில் தனது தந்தை இல்லாது இருப்பதை அறிந்தும், தாயின் பஞ்சமாதேவி அன்னையிடம், தந்தை எங்கே என்று கேட்டான். ராஜேந்திர சோழ நீ மாபெரும் வெற்றிகளை கண்டாலும், உன் தந்தையின் மனதை வெற்றி காண்பது அரிது. இரண்டு வருடங்கள் ஆகிறது உன்னுடைய தந்தை அரண்மனை பக்கம் வந்து. உன் பெரிய அத்தை குந்தவையாரும், நானும் பலமுறை அழைத்தும் வர மறுத்து விட்டார். முதலில் அவரை அரண்மனைக்கு அழைத்து வர முயற்சி செய் என்று தனது தாயார் கூறியதும். 

     ராஜேந்திர சோழனுக்கு ஒரு சலனம் வந்து போனது. தந்தையை பார்க்க தஞ்சை பெரிய கோவிலுக்கு மனதில் ஒரு பெரிய கணத்துடன் சென்றான். கோவிலின் நுழைவு வாயில் வலது பக்கம் இருக்கும் துவார பாலகர் அருகில், கல்வெட்டுகளை செதுக்கி கொண்டிருக்கும் தலைமை கற் கொல்லரிடம், கொல்லரே கல்வெட்டுகளை ஆழமாகவும், அழகாகவும், பதிவு செய்ய கூறினார். நம் சோழ வம்சத்தின் பெருமைகளை, இன்னும் பல ஆயிரம் ஆண்டு இந்த கோவிலின் பெருமைகளையும், சோழர்களின் புகழும் பேசும்படியாக இருக்கடும் ஆகட்டும் அய்யா, அப்படியே செய்கிறேன். ராஜேந்திர சோழன் வருவதற்கு முனமே தளபதி பள்ளவராயனும், தலைமை படை தளபதி கிருஷ்ண ராம பிரம்மாதிராயனும் ராஜ ராஜ சோழன் உடன் இருந்தனர்.

     ராஜேந்திர சோழன் கோவில் வாசலில், குதிரையில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தான். பள்ளவராயனும் கிருஷ்ண ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். ராஜேந்திர சோழனின் குதிரை கனைத்தது. அது ராஜ ராஜ சோழனின் கவனத்தை, அவன் பக்க திருப்பியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் ராஜேந்திர சோழனை பார்த்த பூரிப்பு ராஜ ராஜ சோழனுக்கு இருந்தாலும், அவர் மனதில் எதோ குழப்பம் இருந்தது. அவன் நடையில் ஒரு கம்பீரம், பார்வையில் ஒரு தெளிவு. வா ராஜேந்திரா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வந்திருக்கும் உனக்கு தஞ்சையின் மாற்றம் எப்படி இருக்கிறது. நலம் தானே, நலம் தான் தந்தையே, பல வெற்றிகளை கண்ட உனக்கு, சற்று ஓய்வும், நிம்மதியான உறக்கமும் தேவை, என்று கூறியவுடன், ராஜேந்திர சோழனுக்கு சுருக்கென, மனதில் முள் குத்தியது போல் இருந்தது. மானிய கேடத்து தோல்வி ஒரு கணம் அவன் மனதில் வந்து போனது. 

     உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் தந்தையே, பிறகு பேசிக்கொள்ளலாம் ராஜேந்திரா, உன் மகனை இழந்த தவிப்பால், உன் மனைவி வீரம்மா தேவி நிம்மதி இல்லாமல் இருக்கிறாள். உன் வருகை அவளுக்கு ஆனந்தத்தையும், ஆறுதலையும் அளிக்கட்டும் என்று, அவன் தொடங்கிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராஜ ராஜ சோழன். ராஜேந்திர சோழன் ஆட்சி பீடத்தில் இருந்தாலும், ராஜ ராஜ சோழனின் சில அதிகாரங்களுக்கு, ராஜேந்திர சோழன் கட்டுபட்டே நடந்து கொண்டார் என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிகின்றனர். அவர்கள் இருவருக்கும், உண்டான கருத்து மோதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். மேலும், லெஸ்லி என்ற பெண் கல்வெட்டு ஆய்வாளர், இவர் யார் என்றால், கிழக்கு ஆசிய ஆய்வு, டெக்ஸ்சாஸ் பல்கலைக் கலகத்தை சேர்ந்தவர் ஆவார். 

     இவர் சோழர் காலத்தில், பெண் தேவரடியார்கள் பற்றி, அதாவது தேவதாசி பெண்களின் நிலை பற்றி ஒரு கட்டுரை தொகுப்பாக, சோழர்களின் கல்வெட்டு குறிப்புகளை சேகரித்தவருக்கு, ராஜ ராஜ சோழனின் படை தளபதி கிருஷ்ண ராம பிரம்மதிராயனின் வம்சத்தினரை சந்திக்க நேரிட்டது. அவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் மேல் தளத்தில் இருந்து ராஜ ராஜ சோழனை, ராஜேந்திர சோழன் தான் மேலிருந்து தள்ளிவிட்டார் என்றும், அது அவர்களின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் ஏற்பட்ட உச்சம் தான் எனவும், இந்த கொலை என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், குடும்பத்தின் செவி வழி செய்தி என்று தனது டைரியில் உறுதி படுத்தியுள்ளார் லெஸ்லி. 

     சரி ஆரம்பித்த உரையாடலுக்கு வரலாம். ஒரு சில நாட்கள் ஆகியது. நாட்கள் வாரங்கலாகியது, வாரங்கள் மாதங்கலாகியது. தன் தந்தை ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை விரும்பாத இராஜேந்திர சோழன் அவரிடம் பேசி ராஜ ராஜ சோழனை அரண்மனைக்கு அழைத்து வரும் முடிவுடன் கோவிலுக்கு சென்றான். கோவிலின் மேல் முற்றத்தில், தலைமை தளபதி கிருஷ்ண ராமனிடம், கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும் கல்வெட்டு பற்றி பேசிக்கொண்டு இருந்தார் ராஜ ராஜ சோழன். ராஜேந்திர சோழனும், பள்ளவராயனும், குதிரையின் மேல் அமர்ந்து கோவிலுக்கு வருவதை மேல் முற்றத்தில் இருந்து ராஜ ராஜ சோழன் கவனிக்க தவறவில்லை. கிருஷ்ண ராமனுக்கு சிறு புன்னகை அரும்பியது.

     விபரீதம் ஓன்று நடக்க போவதை வானில் சூழ்ந்த கருமேகங்கள் சொல்லாமல் சொல்லியது. சிறிது நேரத்தில் தஞ்சை கோவிலின் மேல் முற்றத்திற்கே ராஜேந்திர சோழனும், பள்ளவராயனும் வந்து சேர்ந்தனர். வா ராஜேந்திரா என்ன திடீர் விஜயம். தந்தையே நீங்கள் செய்வது ஒன்றும் எனக்கு பிடிக்க வில்லை. என்ன செய்தேன் என்ன தவறிவிட்டேன். ராஜேந்திர சோழன் கேள்வி கேட்டதும் கிருஷன் ராமனும், பள்ளவராயனும் ஒரு நொடி அதிர்ந்து போனார்கள். நீங்கள் இந்த தஞ்சை கோவிலுக்குள் சிறை இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் இங்கு சிறை இருப்பதாக யார் உன்னிடம் கூறினார்கள். கிருஷ்ண ராமா நீனா, பள்ளவறாயா நீயா, ராஜேந்திரா நான் இங்கு சிறை இருக்கவில்லை, சிவனின் பாத கமலங்களில் இருக்கிறேன். நீங்கள், நான் மானிய கேடத்தில் கண்ட தோல்வியை மனதில் வைத்து கொண்டு தான் இப்படி செய்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. 

     உன் வீண் கற்பனைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது ராஜேந்திரா, இங்கிருந்து நான்கு திசைகளையும் பார். தஞ்சையின் அழகை, இதை வர்ணிப்பதை எண்ணிலடங்காது. இந்த கோவிலை பார் சோழர் சாம்ராஜ்யத்தின் அடையாளமாக திகழ போகிறது. இதெல்லாமல் யாருக்காக, எனக்கு பிறகு இதையெல்லாம், கட்டி காக்கும் உரிமை உன்னையே சேரும். இந்த ஆலயமே, என்னுடைய லட்சிய கனவை அடைந்த முழு திருப்தி எனக்கு உண்டு. ஆனால் மானிய கேடம். சொலுங்கள் தந்தையே, அதுவும் உங்கள் லட்சிய கனவுகளில் ஓன்று தானே, ஆம் இருந்தது, அனால் இப்போது இல்லை. மலுப்பதீர்கள் தந்தையே, பிறகு ஏன் அரண்மனைக்கு வர மறுக்குறீர்கள். சங்கர கோட்டம், கலிங்கம், மதுர மண்டலம், ஒட்ட தேசம் போன்ற பல நாடுகளின் வெற்றியை உங்களுக்கு சமர்பித்து இருக்கிறேன். ஆனால், மானிய கேடம், கால சூழ்நிலை காரணமாக கை நழுவி போய்விட்டது. 

     மானிய கேடத்திடம் தோல்வி அடைந்து வரவில்லை, போரை நிறுத்தி கொண்டு வந்துள்ளேன். சொல்லுங்கள் தளபதியாரே என்றான் கிருஷ்ண ராமனை பார்த்து. ராஜேந்திரா நீ புரியாமல் பேசுகிறாய், புரிந்துகொண்டு தான் பேசுகிறேன் தந்தையே, நீங்கள் இந்த கோவிலுக்குள் முடங்கி கிடப்பது. மானிய கேடத்தில் நான் கண்ட தோல்வி, நாட்டு மக்களுக்கு பறை சாற்றும் பொருள் ஓன்று இருக்கிறது எனக்கு. ராஜேந்திரா, ராஜ ராஜ சோழன் கோபத்தில் முழங்கியதும், வானில் கருமேகங்களுக்கு இடையே மின்னலும் இடியும் சேர்ந்தார் போல் ஒரு இடி முழங்கியது. ராஜேந்திரா உன் பேச்சு அதிகம். ஆனால், வீண் பேச்சு அல்ல தந்தையே, ராஜ ராஜ சோழனின் கண்கள் கோபத்தில் சிவந்தன. கிருஷ்ண ராமனும், பள்ளவராயனும் என்ன செய்வதென்று திகைத்தார்கள். என் மகனின் இழப்பை விட உங்களுக்கு மானிய கேடத்தின் வெற்றி தான் முக்கயமா. ராஜேந்திரா என்று அடிக்க கை ஓங்கிய ராஜ ராஜ சோழனை தடுத்தான் தவறிழைத்தான். ராஜேந்திர சோழன் தடுத்த அந்த நொடியில் கால் இடறி பால்கனி கைபிடி சுவர் இல்லாத அந்த கோவிலின் மேல் முற்றத்தில் இருந்தே கீழே விழுந்தார் ராஜ ராஜ சோழன்.

     யாரும் எதிர்பார்க்காத அந்த நொடி பொழுதில் அசம்பாவிதம் நடந்தேறியது. மூன்று பேரும் திகைத்து நின்றார்கள். அப்பா என்று கீழே குதிக்க இருந்த ராஜேந்திர சோழனை கிருஷ்ண ராமனும், பள்ளவராயனும் பிடித்து கொண்டார்கள். பிறகு சுதாரித்துக்கொண்டு, மூவரும் கோவிலின் தரை தளத்துக்கு ஓடி வந்தார்கள். ராஜ ராஜ சோழன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் உயிர் ஊசல் ஆடிகொண்டிருந்தது. கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மடியில் தூக்கி வைத்து கொண்டு. கதரினான் ராஜேந்திர சோழன். ராஜ ராஜ சோழனின் இடது கை ராஜேந்திர சோழனின் கன்னத்தை தடவியது. அவரின் உதடுகள் எதோ முனங்கியது. வார்த்தைகள் தடுமாறியது. மழை துளிகள் அவரது முகத்தில் விழுந்து தெறித்தன. 

     சோழ சாம்ராஜ்யத்தின் மா மன்னனாக திகழ்ந்த, சரித்திர புகழ் வாய்ந்த ராஜ ராஜ சோழனின் உயிர் பிரிந்தது தஞ்சை பெரிய கோவிளுக்குலேயே,

No comments:

Post a Comment