19 வயதாகும் கல்லுரி மாணவியான இவர், நேற்றைய தினம் (24.01.2021) அன்று ஒரு நாள் முதல்வராக பதவியேற்று பணியாற்றினார். இவரது தந்தை அதே கிராமத்தில் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். இவரது தாயார் ஒரு அங்கன்வாடி ஊழியர். சிருஷ்டி அதே பகுதியில் உள்ள கல்லுரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 2018 ஆண்டு முதல், உத்தரகாண்ட் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் நடத்தி வரும், குழந்தைகள் சட்டசபையான "பால் விதான் சபா"வின் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற பெண்கள் சர்வதேச மாநாட்டிலும் ஸ்ருஷ்டி கோஸ்வாமி பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வைகையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான நேற்று, சிருஷ்டி கோஸ்வாமிக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குசாந்த் நேகி கூறியுள்ளார்.
சிருஷ்டி முதல்வராக செயல்பட்ட போது, அந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திருவேந்திர சிங் ராவத்தும் உடன் இருந்தார். முதலமைச்சராக பொறுபேற்ற சிருஷ்டி "அடல் ஆயுஸ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தரகாண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம்" போன்ற பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார்.
இது குறித்து சிருஷ்டி கோஸ்வாமி "என்னால் நம்ப முடியவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மக்கள் நலனுக்காக உழைக்கும் போது, இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நான் நிருபித்து உள்ளேன்" என தெரிவித்தார்.
Emperor Casino | Shootercasino
ReplyDeleteEmpire Casino: 100% 메리트 카지노 쿠폰 Original Slots, 25+ Online Casino Games · 메리트 카지노 Play over 1,000+ Casino Games · Earn exclusive 제왕 카지노 Rewards and get your bonus today!