1931 ம் ஆண்டு மே மாதம் 13 ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ் இவரை பொதுவாக ஜிம் ஜோன்ஸ் என்று அழைப்பார்கள். இவரது தந்தை முதலாம் உலக போரில் கலந்திருக்கும் போது ஏற்பட்ட விபத்தால் மாற்று திறனாளியானார். ஜோன்ஸ் க்கு 14 வயது இருக்கும்போது அவனது தந்தையும் தாயும் பிறிந்து விட்டனர். இதனால் இவர் அம்மாவுடன் தனியாக வசித்து வந்தார். சிறுவயதில் ஜோன்ஸ் தனிமையில் தான் அதிக நேரத்தை செலவழித்துள்ளார். இவருக்கு அதிக நண்பர்கள் கிடையாது.
கல்லூரியில் படித்த காலத்தில் இவருக்கு கம்னியூனிஸ கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டுள்ளது. சிறு வயது முதலிலேயே தேவாலயத்தில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், ஒரு பாதிரியாராக மாறி பலருக்கும் மத போதனை செய்ய ஆரம்பித்தார். வெள்ளை இன மக்களால் நிராகரிக்கப்பட்ட கருபினத்து மக்களை குறி வைத்து தனது பிரசாரத்தை முன்னெடுத்தார் ஜோன்ஸ். "நிராகரிப்பு, விரக்தி, தீராத உடல் நோய், பிரச்சனை, வாழ்கையில் துயரம் மட்டும் தான் மிஞ்சுகிறதா என்னுடன் வாருங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறேன்" என்று மக்களிடம் மத போதனை செய்தார். ஜோன்ஸின் நல்ல நேரமா அல்லது இவரை தேடி வந்த மக்களின் கேட்ட நேரமா என்று தெரியவில்லை ஜோன்ஸை தேடி வந்தவர்களின் பிரச்சனைகள் துயரங்கள் மறைந்து போயின. இதனால் ஜிம் ஜோன்ஸை தேடி மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். அவரும் பிரபலமடைய ஆரம்பித்தார்.
1955 ம் ஆண்டு தனகென்று ஒரு புதிய தேவாளையத்தை உருவாக்கினார். உள்ளூர் நாளிதழ்கள் கறுப்பின மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் இண்டிகாணாவில் ஜிம் ஜோன்ஸ் சக்த்தியும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் ஆபிரிக்க கறுப்பின மக்கள் அவரை ஒரு கடவுளாகவும், கடவுளின் தூதராகவும் பார்க்க தொடங்கினர். மக்கள் ஆதரவாள் அவர் தனது தேவாலயங்களை பல நகரங்களில் அமைக்க தொடங்கினார். எங்கு சென்றாலும் அவரது சிஷ்யர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது. ஜிம் ஜோன்ஸ் கால் பதித்த இடங்களில் எல்லாம் மக்கள் பணத்தை கொண்டு வந்து கொட்ட தொடங்கினார். ஜிம் ஜோன்சின் வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் போது, 1973 ம் ஆண்டு பிரச்சனை தலை தூக்க தொடங்கியது. அவரது தேவாலயங்களில் சட்ட விரோத சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது, போதை பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தன.
இதுமட்டுமல்லாமல் ஆண் மற்றும் பெண் என்று இரு பாலரிடமும் உறவு வைத்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் 1973 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி கைது செய்யபட்டார். இதையடுத்து, அமேரிக்கா தனக்கு சரிபட்டு வராது என்று முடிவெடுத்த ஜிம் ஜோன்ஸ் தென் அமெரிக்க நாடான கயானா நாட்டில் தன சாம்ராஜ்யத்தை தொடங்க முடிவு செய்தார். தன் பக்தர்களிடம் "விண்ணுலகில் சொர்க்கம் இருப்பதை போல நமகென்ற ஒரு தனி நாட்டை கடவுள் கொடுக்க போகிறார் நாம் விரைவில் அங்கு சென்று குடியேறுவோம்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை ஜிம் ஜோன்ஸ் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கயானா அரசிடம் அனுமதி வாங்கி 3842 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை விலைக்கு வாங்கி. வனத்துக்கு மத்தியில் புது நகரத்தை நிர்மாணித்து அதற்கு ஜோன்ஸ் டவுன் என்று பெயரும் வைத்தார்.
தனது சிஷ்யர்களை சிறிது சிறிதாக அமெரிக்காவில் இருந்து ஜோன்ஸ் டவுன்க்கு அழைத்து வந்து குடியிருப்புகளை நிறுவ தொடங்கினார். கடவுளே நமக்காக உருவாக்கி கொடுத்திருக்கும் ஜோன்ஸ் டவுனுக்கு சென்றால் தெருவெங்கும் தேனாறும் பாலாரும் பாயும், நேராக சொர்க்கத்துக்கு நம்மை அழைத்து செல்லும் என நம்பிய பக்தர்கள் குடியேற தொடங்கினர் ஜோன்ஸ் டவுனுக்கு மக்கள் வரத் தொடங்கிய போது நல்லவனை போல தோற்றம் அளித்த ஜிம் ஜோன்ஸ் மக்கள் குடியேறியதும் தன் முகத்தை மாற்றிகொண்டார். தன்னைத்தானே கடவுள் என்று கூறிகொண்டார். அதையும் பக்தர்கள் பணிவுடன் ஏற்றுகொண்டார்கள்.
தன் பக்தர்களிண்டம் ஆண் பெண் என்று பார்க்காமல் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபட்டார். பாவங்களில் இருந்து விடுபட்டு கடவுளை அடைய பரிசுத்தமான வழி என்று கூறுவார். மேலும் அவர்களின் சொத்துகளையும் எழுதி வாங்கி கொண்டார். அவருடைய சொல் பேச்சு கேட்டு நடக்காதவர்கள் கடுமையாக தண்டிட்டக்கபட்டனர். அடம்பிடிக்கும் குழந்தைகளை டின்னுக்குள் அடித்துவிடுவான். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் எப்போதும் கண்காணித்து கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கடவுள் வழிபாட்டில் மக்கள் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு நாளும் மக்கள் கடுமையாக வேலை வாங்கபட்டனர். கொடுமையும் படுத்தப்பட்டனர், மேலும் அடிமையை போல நடத்தப்பட்டனர்.
இந்த நரகத்தில் இருந்து விடுபட மாட்டோமா என்று மக்கள் நினைக்க தொடங்கினர். இதையடுத்து ஜோன்ஸ் டவுன் விவகாரம் மெல்ல வெளியே கசிய தொடங்கியது. ஜோன்ஸ் டவுனுக்கு குடியேறியவர்களின் உறவினர்கள் அமெரிக்க அரசிடம் ஜோன்ஸ் டவுன் நிர்வாகம் மீது விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். இதையடுத்து அமெரிக்க காங்கரஸ் உறுப்பினர் லியோ ராயன் தலைமையிலான குழுவினர் 1978 நவம்பர் 17ம் தேதி ஜோன்ஸ் டவுனுக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு வசித்த மக்களுடன் அவர் அடுத்த நாள் புறப்பட்ட பொது பாதுகாவலர்களால் சுடப்பட்டு கொலை செய்யபட்டார். அமெரிக்க காங்கரஸ் உறுப்பினரை சுட்டு கொன்றால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொண்ட ஜிம் ஜோன்ஸ் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்தார். அதன்படி ஜோன்ஸ் டவுனில் வசித்த மக்கள் அனைவரும் ஒரு இடத்துக்கு கொண்டுபவரப்பட்டனர்.
அவர்களை நோக்கி "நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பு பரிசுத்தனாமது என்று நினைத்தால், நான் சொல்வதை கேளுங்கள், என்னோடோ உயிரை விட தயாராகுங்கள் இது இறைவனின் கட்டளை. நம் வாழ்க்கை இத்துடன் முடிந்து போவதில்லை நாம் அமைவரும் சொர்கத்தில் மீண்டும் பிறப்போம். அந்த புது உலகில் நாம் இன்பங்களை மட்டும் அனுபவிக்கப் போகிறோம். என்னுடன் சொர்க்கத்துக்கு வாருங்கள் என்று கல்லும் சசிந்துருகும்படி அவன் பேசியதை கேட்டு மக்கள் அனைவரும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல தலையாட்டினர். அடுத்த கணம் ஒரு ட்ரம் கொண்டுவரபட்டு அதில் சயனைடு கலைக்கப்பட்டது.
அதை சுட்டிகாட்டிய ஜிம் ஜோன்ஸ் இந்த சொர்க்க பானத்தை பருகி நாம் அனைவரும் சொர்க்கத்துக்கு சொல்வோம் என்றார். பல் இல்லாத கிழவர்கள் முதல் பல் முளைக்க தொடங்கும் குழந்தைகள் வரை வரிசையாக நின்று அந்த சயனைடு கலந்த தண்ணீரை குடித்தனர். குடிக்க மறுத்தவர்கள் துப்பாக்கி முனையில் குடிக்க வைத்தனர். எதிர்த்தவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தனது பக்த்தர்கள் தன் கண் முன்னே ரத்தம் கக்கி இறப்பதை பார்த்த ஜிம் ஜோன்ஸ், முடிந்த வரை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் என்று கூறி கொண்டே நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் 918 பேர் பரிதாபமாக இறந்து போயினர். இதில் 270 பேர் சிறுவர்கள் என்பது பெரும் துயரம். அடுத்த நாள் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் வந்த போது ஜோன்ஸ் டவுன் முழுவதும் மக்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்த போது உலகமே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனது. வசீகரம் நிறைந்த ஒரு போலிச்சாமியார் தன்னையே கதி என்று வந்த பக்தர்களை எந்த அளவுக்கு மூளை சலவை செய்து அடிமையாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த ஜிம் ஜோன்ஸ்.
No comments:
Post a Comment