பூமியில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் மொத்தமாக அழிந்ததற்கு குருங்கோள் எனப்படும் விண்கோள் மோதல் காரணம் அல்ல. 186 மில்லியன் கிலோமீட்டர்க்கு அப்பால், சூரிய குடும்பத்தின் விழும்பில் இருந்து சுற்றிக்கொண்டிருந்த வால் நட்சத்திரத்தை இழுத்துவிட்ட வியாழன் கிரகமே காரணம் என்று விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனிதனுக்கு முன்பு பூமியை ஆதிக்கம் செலுத்திய உயிரினம் தான் டைனோசர்ஸ், பிரம்மாண்டமான வடிவம் கொண்ட உயிரினமான டைனோசர்ஸ் பூமியை விட்டு மொத்தமாக அழிந்ததற்கு காரணம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் முன் வைக்கபடுகின்றன. இதுவரை பூமியில் மோதிய விண் கற்களே டைனோசர்களின் அழிவுக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர். இந்த நிலையில் தான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஆவில்லோ மற்றும் ஆராய்ச்சி மாணவர் ஹானஸ்ராஜ் ஆகியோர் புதுவித கருத்தை முன்வைத்துள்ளனர்.
அப்போது அவை சன் கிரேசஸ் என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரங்களாக மாறி சூரியனை மிக நீண்ட வட்ட பாதையில் சுற்றி வரத் தொடங்குகின்றனர். இந்த பயணத்தின் போது, அவை பூமியை தாக்கும் சாத்திய கூறு இருக்கிறதா என்பதை கண்டறிய வானியலாளர்கள் ஆய்வு செய்தனர். சன் கிரேசஸ் என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும் போது வெப்பம் மற்றும் வலிமையான ஈர்ப்பு சக்தி காரணமாக சிறு சிறு துண்டுகளாக உடைந்திருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே உடைந்த வால் நட்சத்திரத்தின் துண்டு பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியில் மோதி பேரழிவை உண்டாக்கி இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.
அப்படி உருவான வால் நட்சத்திரத்தின் துண்டு தான் சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மெக்சிகோவின் கடற்க்கரையில் மோதியது. வால் நட்சத்திர துண்டு பூமியின் வளிமண்டலத்தில் மோதியதால், அதீத வெப்பம் மற்றும் அடர்த்தியான மேக கூட்டம் உருவானது. வாழ் நட்சத்திரம் விழுந்த இடத்தில் 151 கிலோமீட்டர் அகலமும், 12 கிலோமீட்டர் ஆழமும் கொண்ட மிகப்பெரிய பல்லம் உருவானது. இதன் விளைவால் ஏற்பட்ட சுனாமி, இருள் மற்றும் தாவரங்கள் அழிந்ததால், டைனோசர்ஸ் மட்டும் அல்லாமல் பூமியில் வாழ்ந்த முக்கால்வாசி உயிரினங்கள் அழிந்து போனதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை விண்கற்கள் எனப்படும் குருங்கோல்களே டைனோசர்களின் அழிவுக்கு காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் 186 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணிக்கும் வால் நட்சத்திரங்கள் வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மோதல் நிகழ்ந்திருக்கலாம் எனும் புதிய கருத்தால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதபடுகிறது.
No comments:
Post a Comment