Thursday 15 April 2021

ஆடி அமாவாசை விரதம் தோன்றிய வரலாறு

     ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் செளமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா? விரதம் சரி அதென்ன கதை? எதற்காக அதை சொல்ல வேண்டும்?

     அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத குறை இருந்தது. அதை சரி செய்ய அரசன் அழகேசன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த சமயம் மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அதிசய குரல் ஒலித்தது. அவனது மகன் பருவ வயதை எட்டும் போது இறந்து போவான் என்று அந்த குரலில் செய்தி வெளிப்பட்டது. இதனால் மன்னன் விரக்த்தியில் மூழ்கினார்.

     மன அமைதி வேண்டி பல கோவில்களுக்கும் செல்ல தொடங்கினார். ஒருநாள் காளி கோவிலில் அரசன் வழிபட்டு கொண்டு இருக்கும் போது மீண்டும் அந்த அதிசய குரல் வெளிப்பட்டது. உன் மகன் இறந்த பின் அவனுக்கு திருமணம் செய்து வை. அந்த பெண்ணின் மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெறுவான் என்று கூறியது.

     இளமை பருவம் ஒரு நாள் வந்த தினம் அரசனின் மகன் இறந்து போனான். அரசன் தன் இறந்த மகனுக்கு மனம் முடிக்க பெண் தேடினார். அப்போது பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு அப்பாவி பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்து போன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அந்த இளம்பெண் சற்று நிம்மதி அடைந்தாள்.

     அன்றைய தினம் இரவு நேரத்தில் இளவரசன் உடலோடு அந்த பெண்ணையும் சேர்த்து காட்டின் மைய்ய பகுதியில் கொண்டுபோய் விட்டனர். அந்த பெண்ணும் கணவன் தூங்கிக்கொண்டு இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருந்தாள். விடிந்த பின் உண்மை தெரிந்ததும் அழுது தவித்து கொண்டிருந்தாள். தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லி வேண்டிகொண்டிருந்தாள்.

     உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இறங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன வாழ்வை ஒளிபெற செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபாடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

     மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அம்மாவசைக்கு முன் தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இறந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபாடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லக்ஷ்மி கடாட்சம் நிலவும் என சொல்லி மறைந்தாள்.

     சூரியனும், சந்திரனும் ஒரே நேர் பாதையில் பூமிக்கு நேராக வரும்போது அமாவாசை உருவாகுகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

     ஆடி அமாவாசை அன்று காலையில் எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்பே எள் தர்ப்பைபுல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருவது நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தாள் நமது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

No comments:

Post a Comment