Wednesday 15 June 2022

21 வயதில் 11 லட்சம் கிடைக்கும் மத்திய அரசின் வேலை வாய்ப்பு

 

     இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் சேவை ஆற்றும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசிலித்து வந்தது. இந்த நிலைமையில் பிரதமர் மோதி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அக்னிபாத் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க பட்டது. 

     இதனை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். பாதுகாப்பு படையை பலபடுத்தவும், இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேவையாற்ற வாய்ப்பு வழங்கவும், இந்த திட்டம் அறிமுகபடுத்தபட்டதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தெரிவித்தார். 

     ராணுவ விவகாரங்களுக்கான துறையின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் சென்ட்ரல் அணில் பொறி பேசும்போது, "இளைஞர்களுக்கு நீண்ட காலம் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்" என்றார். இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கபடுவர்.  10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17.5 வயது இளைஞர்கள் முதல் 21 வயதுடைய இளைஞர்கள் வரை இத்திட்டத்தில் சேரலாம். 

     அவர்கள் பயிற்சியை முடித்ததும் காலாட்படை, கடற்படை, விமான படையில் நான்கு ஆண்டுகள் சேவையாற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். இளைஞர்களுக்கு முதல் வருடம் 30,000 ரூபாயும், இரண்டாவது வருடம் 33,000 ரூபாயும், மூன்றாவது வருடம் 36,500 ரூபாயும், நான்காவது வருடம் 40,000 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும். 

     சேவை நிதி தொகுப்பாக இளைஞர்களின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் தொகையை பிடிப்பதுடன் அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும். நான்காவது ஆண்டில் இந்த தொகை 10,40,000 த்துடன் வட்டியும் சேர்த்து, 11,71,000 ரூபாய் இளைஞர்களுக்கு வழங்கப்படும். இளைஞர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், இழப்பீடாக காப்பிட்டு தொகை ரூபாய் 44 லட்சமும், ராணுவம் சார்பில் 48 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     நான்கு ஆண்டுகள் சிறப்பாக செயல்படும் 25 சதவீதம் இளைஞர்களை, ராணுவம் வழக்கமான சேவைக்கு தேர்வு செய்யும். இது தவிர சேவையை தொடர விரும்பும் இளைஞர்கள் மீண்டும் விண்ணபிக்கலாம். பணியின்போது திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிந்ததும் மத்திய அரசு துறையில் வேலை வாய்ப்பை பெறமுடியும். அவர்களுக்கு வங்கி கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான முதல் ஆட்கள் சேர்க்கும் முகாம் 90 நாட்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment