Friday 7 July 2023

யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வரும் ?


     நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  அடிக்கடி வரும் எண்ணம், "உடம்பெல்லாம் அடிக்கடி அசதியாகி விடுகிறது, பாதங்களில் ஒரே எரிச்சல், காலில் காயம் பட்டால் சீக்கிரம் ஆறுவதில்லை, கண்கள் அடிக்கடி இருட்டிக்கொண்டு வருகிறது. எனக்கு சர்க்கரை நோய் இருக்குமோ " என்று தான்.

     சந்தேகமாக இருந்தால், உடனே சர்க்கரை நோயைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை என்றால், அது வரும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      நிறைய இனிப்பு (சர்க்கரை) சாப்பிட்டால் தான் சர்க்கரை நோய் வரும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. புறகு எதை வைத்து எனக்கு சர்க்கரை நோய் வரும் என்பதை அறிந்த்கொள்வது என்கிறீர்களா?

     கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல ஆராய்ச்சிகள் செய்து, என்னென்ன காரணங்களால் சர்க்கரை நோய் வரும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாழ்க்கை முறை மற்றும் உடல் நலப் பாதிப்புகள் தான் சர்க்கரை நோயை உண்டாக்கும் முக்கியக் காரணிகளாகும்.

 



குடும்பப் பின்னணி

      குடும்பத்தில் உங்கள் தந்தைக்கோ, தாய்க்கோ, தம்பி அல்லது தங்கை போன்ற உடன்பிறப்புகளுக்கோ, ஒன்றுவிட்ட சித்தப்பா, சித்தி, மாமா போன்றவர்களுக்கோ சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கும் சர்க்கரை நோய் வரக்கூடிய  வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோர்கள் இருவருக்கும் இருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும் சாத்தியம் அதிகம் உள்ளது.

 



உடல் எடை

      80 சதவீதத்துக்கும் அதிகமான பேர், உடல் எடை கூடுவதால் இந்த நோய்க்கு இலக்காகிறார்கள். அதிகக் கொழுப்பால், செல்கள் விரிவடைந்துவிடுவதால், போதுமான இன்சுலினை செல்கள் பெற முடியாது. உங்கள் எடை ஒவ்வொரு பவுண்டு அதிகரிக்கும் போது, சுமார் நான்கு சதவீத சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை நீங்கள் உண்டாக்கிகொள்கிரீர்கள். இன்சுலின் தனது வேலைகளைச் சரியாக செய்யாத வகையில் செல்களில் கொழுப்பு அடைத்துகொள்ளும்.

 



உடல் செயல்பாடு குறைதல்

    நான் ஹவுஸ்வொய்பாக இருக்கிறேன், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன் என்று எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

      சம்பெனியில், கூலிக்கு வேலை பார்ப்பவன் வண்டியில் போகிறான். என் அந்தஸ்துக்கு நான் காரில் தான் போவேன். பத்தடி தூரம் நடப்பது கூட என் அந்தஸ்துக்கு செய்யும் அவமரியாதை என்று நினைப்பவர்களுக்கும், காலாற நடக்காதவர்களுக்கும், எந்த வேலையும் பிறர் மீது திணித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடப்பவர்களுக்கு இன்சுலின் சரியாக வேலை செய்யாமல், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வந்துவிடும்.

 



ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

      ரத்த அழுத்தம் 140/90-க்கு அதிகமாகவும், கொழுப்பில் டிரைகிளிசரின் அளவு 250மில்லிகிராமுக்கு அதிகமாகவும், எச்.டி.எல் கொழுப்பு 35மில்லிகிராமுக்கு குறைவாகவும் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

 



வயது

       45 வயது ஆகும்போது, உடலின் செயல்திறன் குறைந்து சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். இருபது வயதிலேயே நாற்பது வயது ஆனவரைப்போல் நடந்துகொள்ளும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் வரும்.

 



பெண்கள்

      பாளிசிஷ்டிக்  ஓவோரியன் சிண்ட்ரோம் என்ற  நார்க்கழைலை பாதிப்பு உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் அதிக எடை கொண்ட குழந்தை பெற்ற பெண்கள், உடல் செயல் திறன் குறைந்த பெண்கள் ஆகியோர் சர்க்கரை நோயை எதிர்பாத்துக் காத்திருக்கலாம்.

 



உடல் பருமன் 

      தைராய்டு பிரச்சனை போன்ற  ஹார்மோன் பாதிப்புகள் மற்றும் உணவு முறை, பரம்பரை போன்றவை காரணமாக உடல் பாரும் அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதகான வாய்ப்புகள் அதிகம். உயரத்துக்கு ஏற்ற உடல் பருமனும் எடையும் இல்லாமல் கூடுதலாக இருந்தால் சர்க்கரை நோய் வரும். தொப்பை பெரியதாக இருப்பவர்கல்லும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment