Wednesday 21 September 2022

புயல்களுக்கு எப்படி மற்றும் யார் பெயர் வைக்கிறார்கள் தெரியுமா ?


       புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள், எதற்காக வைக்கபடுகிறது, எப்படி வைக்கிறார்கள், யார் வைக்கிறார்கள் என்று தெரியுமா. ஒவ்வொரு ஆண்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் இந்தியாவில் உருவாகுகிறது. அவை உருவான நாள், மாதம், ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் தெரிவிக்கும் போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தான் புயல்களுக்கு பெயர்கள் வைக்கபடுகின்றது. 

 

      வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இம்முறை உதவியாக உள்ளது. ஒரு புயலை அடையாளம் காணுதல், உருவாகும் விதத்தை அறிவது, எளிதாக நினைவில் கொள்வது, விரைவாக எச்சரிக்ககளை வழங்குவது என பலவற்றிற்கும் இது உதவிகரமாக உள்ளது. 

 

      பொதுவாக வெப்பமண்டல கடல் பகுதிகளில் புயல்கள் அதிகமாக உருவாகுகின்றன. அவற்றின் சீற்றம் அவை உருவாகும் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. தென்பசுபிக் இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றத்திற்கு புயல் என்றும் வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசுபிக், கிழக்கு வடக்கு பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றம் சூறாவளி என்றும், வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றம் கடும் புயல் என்றும் உலக வானிலையாளர்களால் கூறபடுகிறது.

 


      புயல் மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரங்கள், தொழில்நுட்பம், வேகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அது எந்த மாதிரியான புயல் என்று குறிபிட்டார்கள். இதை குறிபிடுவதும் ஆவணபடுத்துவம் சிரமமாக இருந்தது. அதன் பின்னர் தான் புயலுக்கு தனித்த பெயரிடும் வழக்கம் தோன்றியது. இவ்வழக்கம் உலக அளவில் பல்லாண்டுக்கு முன்பே தோன்றிவிட்டது. தொடக்கத்தில் பெண்களின் பெயர்களை புயலுக்கு சூட்டினர். அதன் பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆண்கள் பெயர்களும் வைக்கப்பட்டன. 1873 ல் நிறுவப்பட்ட பன்னாட்டு வானிலை அமைப்பு உலக வானிலை அமைப்பு என்ற பெயர் மாற்றத்துடன், சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் 1950 முதல் செயல்பட்டு வருகிறது. 

 

      இதில் உலகின் 187 நாடுகள் மற்றும் 6 பிரதேசங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன், தென்மேற்கு பசுபிக், ஐரோப்பா, ஆகிய ஆறு வானிலை மண்டலங்களை இந்த அமைப்பு ஒருங்கிணைகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உருவாகும் புயல்களுக்கு அப்பகுதி நாடுகள் ஓன்று சேர்ந்து பெயர் வைத்து அதை உலக வானிலை நிறுவனமும், ஆசியா, பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியன அங்கீகாரம் அளித்து பட்டியலை இறுதி செய்கிறது. டெல்லி இந்திய வானிலை ஆராய்ச்சி துறை மண்டல அளவிலான, வானிலை மையங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

 


      1970 ல் ஜெனிவாவில் நடைபற்ற மாநாட்டில் பசுபிக் கடல்களில் உருவாகும் கடல்களுக்கு பெயர் வைக்கும்படி, அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டு கொண்டது. புயலுக்கு பெயரிட சில விதிமுறைகளும், நிபந்தனைகளும் உள்ளன. புயல் பெயர்களில் அரசியல், அரசியல்வாதிகள், கலாச்சாரம், மத நம்பிக்கைகள், இனம் ஆகியவை இருக்க கூடாது. உலக அளவில் வாழும் மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் படி இருக்க கூடாது. மிக கொடூரமான பெயர் தவிர்க்கப்பட வேண்டும். பெயர் சிறியதாகவும் உச்சரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும். அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பெயரிட்ட நாடுகள் குறிபிட வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய பெயரை மீண்டும் பயன்படுத்த முடியாது. 

 

      இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மட்டும் இதுவரை 169 பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. பெயர் புயலுக்கு சூட்டபடும் முன் குழு நாடுகளின் அனுமதி பெற வேண்டும். அதெல்லாம் சரி இந்த பெயர்களை யார் வைக்கிறார்கள் என்று கேட்குறீர்களா. இதுவரை பரிந்துரை செய்யப்பட்டு தேர்வு செய்து சூட்டப்பட்ட பல பெயர்கள் பொது மக்களாக சூட்டியது தான். நீங்கள் கூட உங்களுக்கு பிடித்த பெயரை வானிலை ஆராய்ச்சி மைய்யத்துக்கு அனுப்பி வைக்கலாம். ஒருவேளை அடுத்து வரும் புயலுக்கு நீங்கள் பரிந்துரை செய்த பெயரை சூட்டுவதற்கு வாய்ப்பும் உள்ளது.

No comments:

Post a Comment