Saturday 9 March 2024

முதல் வகை சர்க்க்கரை நோய் என்றால் என்ன ?

 

      இந்த நோய் இளமை பருவத்திலேயே வரக்கூடியதாகும். கணையம் என்ற உறுப்பில் எளிதில் பார்க்க முடியாத அளவுக்கு மிக நுண்ணியதாக பல திட்டுகள் உள்ளன. இத்திட்டுகளில் அடங்கியுள்ள செல்களை பீட்டா செல்கள் என்றும் ஆல்பா செல்கள் என்றும் இருவையாக பிரித்துள்ளனர். இச்செல்கள் தூண்டுவதின் மூலம் இன்சுலின் என்ற இயங்கு நீரை சுரக்கின்றது. இந்த இயக்கு நீர்கள் சேமிக்கப்பட்டு இரண்டு நாளங்கள் வழியாக சிறுகுடலில் நுழைந்து உட்புறச் சுவற்றில் உள்ள மெல்லிய மயிரிழை போன்ற விரலிகள் எனப்படுவதில் உள்ள இரத்தத்தில் நேராக கலக்கின்றது. இன்சுலின் கலந்த ரத்தம் இருதயத்துக்குச் சென்று சுருன்குவத்தின் மூலம் நுரையிரளுக்குச் செல்கிறது. நுரையீரலில் சர்க்கரையை சேமிக்கவும், கொழுப்புத் திசுக்களில் கொழுப்பைச் சேமிக்கவும், தசைகளில் புரதம் மற்றும் மாவுச் சத்தை ரத்தத்தில் சேர்க்க செய்கிறது. சேர்ந்தபின் அவ்வாறு கலந்த ரத்தம் மீண்டும் இருதத்திற்கு வந்து இடபக்க கீழறை சுருங்குவதின் மூலம் மகாதமணி வழியாக இச்சத்துகளை இரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் தான் உடலின் பலபாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. பின் மீண்டும் திரும்பும் போது மேலறைகள் விரிகிறது. விரிவடைந்து வலது மேலறைக்கு வந்து, மேலறை சுருங்குவதால் வலது கீழறைக்கு வரப்பெற்று வலது கீழறை சுருங்கும் போது அசுத்த இரத்தம் சிரைகள் வழியாக நுரையீரலுக்கு வந்து சேருகிறது, என்பதை ஏற்கனவே முன்பகுதியில் பார்த்தோம்.


     சுவாசிக்கும் பொது காற்றில் உள்ள பல தோற்று நோய்க்கிருமிகள் உடலினுள்ளே புகுந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலவகை தொற்றுக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் காய்ச்சல், அம்மை, சளி போன்ற நோய்கள் முதலில் வரும். வேறு சிலவகை தொற்றுகிருமிகள் இரத்தத்தில் வந்த ஓரிரு மாதங்களில் வளர்ந்து காமாலை போன்ற நோயை உண்டாக்குகிறது, இன்னும் சிலவகை தொற்று நோய்க் கிருமிகள் நம் உடலில் பரவி செல்களை தாக்குகின்றன. உடலில் எப்பாகத்தில் அதிக தாக்குதல் உள்ளதோ, அங்குள்ள உறுப்புகளால் செயல்படமுடியவில்லை, வைரஸ் நோய்க்கிருமிகள் செல்களைத் தாக்கும் பொது கணையத் திட்டுகளில் உள்ள பீட்டா செல்களையும் விட்டு வைக்காமல் தாக்குகின்றன. இதனால் பீட்டா செல்கள் செயல்பட முடியாமல், இன்சுலின் என்ற இயக்கு நீரை சுரக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் பிறவியிலேயே குறையுள்ள செல்களை கொண்டிருப்பதாலும் தொற்று நோய் கிருமிகள் தாக்குதல்களாலும் இன்சுலின் சுரப்பு நிலை அறவே இல்லாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிலைகளில் உள்ளவர்களை முதல் நிலை சர்க்கரை நோய்யுள்ளவர்கள் என்று கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment