Tuesday 12 March 2024

முதல்வகை சர்க்கரை நோய் ஏற்பட காரணம் என்ன

 

       ஒரு குடும்பத்தில் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ, இவ்வகை நோய் இருந்து அறிய முடியாத சூழலில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மரபணு ரீதியாக அக்குழந்தைகள் வளர்ந்து 20 அல்லது 30 வயதை கடப்பதற்கு முன்பாகவே மயக்க நிலைவந்தால் மட்டுமே பரிசோதனைக்கு பின் சர்க்கரை நோயை பற்றி நினைக்க தொடங்குகிறார்கள். ஆயினும் இந்த நிலை தற்காலத்தில் தலைகீழாக மாறி விட்டது.
 
     எப்படியென்றால் பிறந்து 2 வயது அல்லது 3 வயது குழந்தைகளுக்கே இந்த முதல்வகை சர்க்கரை நோய் வருகிறது என்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். காரணம் பிறக்கும் போதே கணையத்தில் உள்ள செல்கள் குறைவாகவே இருக்கின்றது. இதனால் அவைகள் இருந்தும் இன்சுலின் என்ற இயக்கு நீரை சுரப்பதற்கு போதிய ஆற்றலை பெற்றிருக்கவில்லை. அதனால் அந்த அணுக்களால் இன்சுலினை சுரக்கவும் முடியவில்லை.
 

     இன்னும் சற்று விரிவாக பார்ப்போமானால், இன்சுலின் அறவே இல்லை என்றால் குளுக்கோஸ் என்னும் சர்க்கரை சத்தை சேமிக்கவும் முடியாது. பயன்படுத்தவும் முடியாத நிலையில் ரத்தத்தில் உள்ள மிகையான சர்க்கரை சத்தை ரத்தத்தில் உள்ள நீருடன் கலந்து அதை சிறுநீரகம் வழியாக வடிகட்டி சர்க்கரை சத்து நீருடன் சிறுநீரக பையில் தங்கி சிறுநீராக வெளியேறி வீணாகிறது. குளுக்கோஸ் இருந்தால் தான் திசுக்களில் உள்ள கொழுப்பை எரித்து சக்தியை உருவாக்க முடியும். இல்லை என்றால் அதிக அளவு அமிலம் உருவாகி அந்த ரத்தம் மூளைக்கு செல்வதால் மூளை செயல்படாமல் கொஞ்ச நேரம் தாமதிக்கும் போது, மயக்க நிலைக்கு கொண்டு போகிறது. மயக்கம் வரும் போது, ரத்தத்தை பரிசோதனை செய்த பிறகு தான் சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
 
     சர்க்கரை வியாதி ஏற்படுவது பரம்பரை காரணமா, அல்லது நம்மை சூழ்ந்துள்ள சூழ்நிலை காரணமா அல்லது சில மனித செயல்பாடுகள் காரணமா என்பதை சரியாக அறுதியுட்டுக் கூற முடியவில்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
      நாம் சுவாசிக்கும் காற்று மூலம் வைரஸ் கிருமிகள் நேராக  நுரையிரளுக்குச் சென்று ரத்தத்தில் கலக்குகிறது. இவ்வகைத் தொற்று கிருமிகள் கணையத்தில் உள்ள திட்டுகளில் அடங்கியுள்ள கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான செல்களைத் தாக்கி அவைகளும் பெருகி கணையச் செல்கள் இன்சுலின் சுரப்பதை தடை செய்கிறது. 
 
     ரத்தத்தில் தேவையான அளவு இன்சுலின் கலக்காத நிலையில் ரத்தத்தில் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டிய கர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதைதான் முதல்வகை சர்க்கரை நோய் வருவதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்கின்றனர்.

     இவ்வகை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருக்கும். 100 சர்க்கரை நோய் உள்ளவர்களை எடுத்துகொண்டால், அதில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே முதல்வகை சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருப்பார்கள்.
 
     குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் மயக்க நிலையை அறிந்து  சில பரிசோதனைகள் செய்துபார்க்க வேண்டும். நோய் எர்திர்ப்பு சத்தி அறவே இல்லாத நிலையில் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மருந்துகளை தொடர்ந்து கொடுப்பதின் மூலம்  கணையத்தில் உண்டான பாதிப்பை குறைத்து வியாதி வருவதை தடுத்து விடலாம்.

மயக்க நிலை வருவதற்கு முன் தோன்றும் அறிகுறிகள்
1      முதலில் நாக்கு உலர்ந்து போகும். 
2      கண்கள் மேல் நோக்கி சொருகும் மற்றும் குழிவிழுந்து காணப்படும்.
3      உடலின் தோல் வறண்டுவிடும்.
4      முகம் வெளுக்கும்.
5      நீண்ட பெருமூச்சு வரும்.
6      நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும்.
7    சிறுநீரிலும், ரத்தத்திலும் அதிக அளவு சர்க்கரை இருப்பதை சோதனையில் அறியலாம்.
8      ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.
9      திடீரென நினைவிழந்து மயக்கத்திலேயே இருப்பார்கள்.

No comments:

Post a Comment