Friday 31 May 2024

அதீத வெளிசத்தால் பருவமடையும் சிறுமிகள்

 

      இரவும் அடர்ந்த இருளும் தானே நமக்கு ஆபத்தையும் பயத்தையும் தருகிறது.  மாறாக அச்சத்தை போக்குகிறது. துணிவை தருகிறது. இரவில் கூட வேலை பார்க்க முடிகிறது. அப்படிபட்ட ஒளி எப்படி ஆபத்தாக முடியும், உண்மைதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயற்க்கை நமக்கு 12 மணி நேரம் பிரகாசமான சூரிய ஒளியையும், 12 மணி நேரம் அடர்ந்த இருளையும் கொடுத்திருகிறது. இரண்டுக்குமே இரண்டு விதமான கடமைகள் இருகின்றன. நமது உடலும் மற்ற உயிரினங்களும். 12 மணி நேரம் ஒளி மாற்றத்திற்கு ஏற்றார் போல தான் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் நாம் செயற்கையாக உருவாக்கும் விளக்குகளால், இரவின் பொழுதை குறைத்து விட்டோம். இதன் மூலம் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள் மற்றும் மனிதர்கள் என்று எல்லாவற்றையும் பாதிப்புக்குள்ளாக்கி விட்டோம். மின் விளக்குகள் கண்டுபிடிக்காத காலத்திற்கு முன் இருக்கும் இரவு நேர வானத்திற்கும், இப்போது இருக்கும் இரவு நேர வானத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. வானத்திலும் ஒளி மாசு பிரதிபலிக்கிறது. இதனால் நட்சத்திரத்தையும் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்யும் ஆராச்சியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.


      அவர்கள் மட்டும் அல்ல. இரவுகளில் வேட்டையாடும், விலங்குகளும் பறவைகளும் இந்த வெளிச்சத்தால் குழப்பம் அடைகின்றன. கடல் ஆமைகள், கடலில் இருந்து சற்று தொலைவில், அடர்ந்த இருளான இடத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை உடையது. ஆனால், இந்த ஆமைகளும் கலங்கரை விளக்கு ஒளியாலும், கடலுக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தின் ஒளியாலும் பாதிக்கப்பட்டு இனபெருக்கத்தையே குறைத்து வருகின்றன. பறவைகள் நிலவின் ஒளியை வைத்து அதன் மூலம் தாங்கள் உள்வாங்கி கொண்ட திசை வழியாக இடம் பெயருகின்றன. அந்த பறவைகளின் பாதைகளில் குறிக்கிடும் பெரிய கட்டிடங்களின் ஒளியால் கவரப்பட்டு திசை மாறி அதில் மோதி இறகின்றன. உலகும் முழுவதும் லட்ச கணக்கான பறவைகள் வருடம் தோறும் இப்படி தான் மடிகின்றன. வீட்டின் வெளிப்புறம் இருக்கும் மின் விளக்குகள், அதாவது தெருவிளக்கு விளம்பர பலகைகளின் ஒளி விளக்கு போன்றவற்றால் கவரப்படும் பூச்சிகள் விடியும் வரை அந்த விளக்கையே சுற்றி சுற்றி வருகின்றன. அதனால் உணவும் சரியாக எடுத்து கொள்ளாமல் இனச் சேர்க்கையும் நடைபெறாமல், பூச்சி இனங்களே வெகு வேகமாக அழிய தொடங்குகின்றன. பூச்சிகள் அழிந்தால் தானே அழியட்டும் என்று விட்டு விட முடியாது. உயிரினங்களின் உணவு சங்கிலி கட்டாயம் பாதிக்கப்படும். 

     சரி பறவைகளும் பூட்சிகளுக்கும் தானே இந்த பாதிப்பு நமக்கு ஏதும் இல்லையே என்று நிம்மதியாக இருந்து விட முடியாது. இது மனிதர்களுக்கு என்ன என்ன பதிப்பை ஏற்படுத்துகின்றது என்று ஆராச்சியாளர்கள் வகைபடுத்தி கூறுகிறார்கள். உலகிற்கு எப்படி 12 மணி நேரம் பகல் மற்றும் 12 மணி நேரம் இருள் இருக்கிறதோ அதே போல் உயிரினங்களின் உடலுக்குள்ளும் ஒரு  கடிகாரம் இருக்கிறது. அது தான் உயிர் கடிகாரம். அது தான் நமது தூக்கத்தையும் விழிப்பையும் தெரிவிக்கிறது. செயற்கை ஒளியால் பாதிப்பது உயிர் கடிகாரம் தான் நமது உடல் 12 மணி நேரம் வெளிச்சத்திலும் 12 மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருளில் இருக்க வேண்டும்  என்பது  தான் இயற்க்கையின் நியதி.

 


      சூரிய ஒளி உடல் வளர்ச்சி மற்றும் வலிமைக்கான காரணங்களை தூண்டி விடுகின்றது. இதே தூண்டுதல் நாம் உபயோகிக்கும் ஒளியிலும் உண்டு. 1860ம் ஆண்டுகளில் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதில் இருந்து 19 வயதாக இருந்தது. இப்போது அது 8 வயதில் இருந்து 15 வயதாக குறைந்திருக்கிறது. இதற்கு உணவு உட்பட பலகாரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக சொல்லபடுவது இந்த ஒளிதான். சூரிய ஒளி பெண்ணின் ஹோர்மோனை தூண்டி விடுகிறது. வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் பெண்கள் விரைவாக வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

     சூரிய ஒளி குறைவாக உள்ள நாடுகளில், அதாவது ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெண்கள் தாமதமாக வயதுக்கு வந்துகொண்டிருந்தாகள். ஆனால் இப்போது வெப்ப நாடுகள், குளிர் நாடுகள் என எல்லாம் ஒரே மாதிரியாக பெண்கள் விரைவாகவே வயதுக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் இரவிலும் பகல் போல் ஒளிரும் ஒளி விளக்குகள் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வகுப்பறைகள், வீடுகள், கடைகள் என எங்கும் இரவை பகலாக்கும் பிரகாசமான வெளிச்சம் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்ற வெளியிடும் கதிர்வீச்சும் சூரிய ஒளிக்கு இணையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. 

 


     தொடர்ந்து ஒளியின் தாக்கம் உடல் மீது பட்டுக்கொண்டே இருப்பதால், ஹார்மோன் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதனால் சிறு வயதிலேயே பெண்கள் சதைபிடிப்போடு வளருகிறாகள் மற்றும் விரைவிலேயே பருவத்துக்கும் வந்துவிடுகிறார்கள். சின்ன வயதில் பெரிய மனிசி ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம். சிறுமிகள் வயதுக்கு வந்ததும் பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகம் சுரக்க தொடங்குகின்றன. இந்த சுரப்புகள் எலும்புகளின் வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன. இந்த சிறுமிகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். 14 வயதுக்கு பின் பருவம் அடைந்த பெண்களை விட அதற்கு முன்பே பருவம் அடைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 4 மடங்கு அதிகம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு ஓன்று தெரிவிக்கிறது. 

     ஒளியின் பாதிப்பு இதோடு முடிந்துவிடுவதில்லை. வெளிச்சமற்ற அடர் இருளில் தூங்கும்போது, மேலெடோன் என்கிற ஹார்மோன் சுரக்க துவங்குகிறது. இது தான் நமது ஆரோக்கியத்தின் உயிர்நாடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நன்றாக தூங்கவும், கொழுப்பை நீக்கவும் இந்த ஹார்மோன் உதவுகிறது. மேலும் தைராயிடு, பெண்ணின் கருமுட்டை, ஆணின் விரைகள் நன்றாக செயல்பட, இந்த மேலெடோனேன் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் இரவில் தொடர்ந்து, உடலில் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருக்கும்போது, இந்த ஹார்மோன் சுரப்பு வேகமாக குறைந்து போகிறது. இதனால் தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் பருமன், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், ஆண்மை குறைவு, மலட்டு தன்மை போன்ற பல பாதிப்புகள் உருவாகுகின்றன.

 



     விளக்கை விரைவாக அனைபதின் மூலம், இப்படி தோன்றும் அத்தனை நோய்களையும் ஒரு பைசா செலவு இல்லாமல் சரி செய்துவிடலாம், கூடவே நமது பழக்கவழக்கத்தையும் கொஞ்சம் மாற்றி கொண்டால் போதும், இரவு 11 மணி, 12 மணிக்கு தூங்க செல்லுபவர்கள் தொலைக்காட்சி, கணினிக்கு விடை கொடுத்துவிட்டு, 10 மணிக்கு முன்பே தூங்கிவிடுங்கள். படுக்கை அறையில் இரவு விளக்கும் அணைக்கப்பட்டு அடர் இருளில் தூங்க பழகுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். போக போக நல்ல தூக்கம் வரும். சர்க்கரை நோய், மன அழுத்தம் இவை எல்லாமே குறைய தொடங்கும். இரவை முழுமையாக அனுபவித்தாலே போதும், எல்லா வியாதியும் நம்மைவிட்டு சென்றுவிடும், 

     ஒளியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை பார்த்த பின்பே, மேலை நாடுகளில் இப்போதிருந்தே பாரம்பரிய இரவை மீட்போம் என்ற பெயரில் பல இயக்கங்களை, சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். அனால் நமது இந்தியாவில் அதற்கான அடி சுவடு கூட ஏற்படவில்லை. இதனை ஒளிமாசு என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் 30 சதவிகிதம் விளக்குகள் தேவைக்கும் அதிகமாக ஒளிர்கின்றது. என்கிறது. சர்வதேச இருள்வாழ் அமைப்பு, நியுயார்க் நகரில் மட்டும் வீடுகளுக்கு வெளியே ஒளிரும் மின்விளக்குகளுக்குள் மட்டும் வருடத்துக்கு 2.1 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. இந்த நகரில் உள்ள மாசை சரி செய்வதற்கே 87.5 கோடி மரங்களை வளர்க்க வேண்டும் என்கிறது அந்த அமைப்பு. 


      அதைவிட சில எளிமையான வழிமுறைகள் இருகின்றன. தேயில்லாத இடங்களில் இருக்கும் விளக்கை அகற்றுவது. வான் நோக்கி பாயும் ஒளியை தடுத்து நிலத்தில் மட்டும் விழும்படி விளக்கை சுற்றி கவசம் இடுவது. வீடு மற்றும் அலுவலத்தில் எரியும் தேவையில்லாத விளக்குகளை அணைப்பது போன்றவற்றை சரி செய்தால், 60 முதல் 70 சதவீதம் ஒளி மாசுபடுவதை தவிர்த்துவிடலாம் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள். 

     எது எப்படியோ, இயற்க்கை தான் மீண்டும் வலியது என்பதையே இது காட்டுகிறது. இதனால் நாமும் தேவையற்ற ஒளிகளை குறைத்து, இருளில் படுத்து பாரம்பரிய இரவை மீட்போம், இருள் உடலுக்கு நல்லது.

No comments:

Post a Comment